Tag Archive: இலக்கிய திறனாய்வு

தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’




  ‘நாவல் காலம் மாறுவதைப்பற்றி பேசும் ஒரு இலக்கிய வடிவம்’ மிக பொத்தாம்பொதுவான ஒரு கூற்று. ஆனால் வியப்பூட்டுமளவுக்கு சரியானதும்கூட. உலக இலக்கியத்தின் மகத்தான ஆக்கங்கள் பலவும் காலமாறுதலை விரிவாகச் சொல்வதையே கருவாகக் கொண்டுள்ளன. காலம் மாறுவது எதனூடாக தெரியவருகிறது? வாழ்க்கை மாறுவதனூடாக. ஆகவே அது வாழ்க்கையின் இயக்கத்தைப் பற்றிப் பேசும் கலை. வாழ்க்கை மாறும்போது மதீப்பீடுகள் மாறுகின்றன. ஆகவே நாவல் மதிப்பிடுகளின் உண்மையான சாரம் பற்றி விவாதிக்கும் கலை. மதிப்பீடுகள் மாறும்போது ஏற்படுவது ஆழமான உணர்ச்சிக்கொந்தளிப்பு. …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/183

லட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்




  இந்தியா என்ற வண்ணக் கலவை பற்றிய பிரக்ஞை கொண்ட இந்தியர் மிகச்சிலரே. இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் ஒருமுறை சென்று வரவேண்டும் என்ற கனவு உடையவர்கள் மிகமிகச் சிலர். பல உலக நாடுகள், குறிப்பாக மேற்கு, நமக்குத் தரும் ஈர்ப்பை இந்தியா நமக்குத் தருவதில்லை. ஆனால், ஒரு பயணி தன் வாழ்நாள் முழுக்க தீராத வியப்புடன் பயணம் செய்வதற்குரிய பகுதிகள் இந்தியாவில் உள்ளன. இப்பயணம் பௌதீகமான எளிய பயணமாக இல்லாமலிருக்க வேண்டுமெனில் அப்பகுதியின் இலக்கியங்களுடன் ஓர் அறிமுகம் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/193

மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’




    வரலாற்று நாவல் என்றால் என்ன என்று தமிழில் எளிய வாசகனிடம் கேட்டால் கல்கி, சாண்டில்யன் கதைகளைக் குறிப்பிடுவான். துரதிர்ஷ்டவசமாக சமீப காலம் வரை கல்வித்துறைசார்ந்த இலக்கிய விமரிசகர்களும் இதையே கூறிவந்தனர். ராஜா ராணி பற்றிய பாட்டிக்கதைகள் வரலாற்றுக் கதைகளா? ராஜாவுக்கு ராஜராஜ சோழன் என்றும் ராணிக்கு பெருந்தேவி என்றும் பெயரிட்டுவிட்டால் போதுமா? வரலாற்றுத் தகவல்களைப் பயன்படுத்தியதனால் மட்டும் ஒரு நாவல் வரலாற்று நாவல் ஆகிவிடுவதில்லை. வரலாறு மீதான அதன் ஆய்வுமுறையே அவ்வியல்பை தீர்மானிக்கும் அம்சமாகும். …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/190

வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’




    பாரதி ராஜாவின் கிராமத்துப்படங்கள் மூலம் நம் மனதில் பதிந்துவிட்ட ஒரு சித்திரம் உண்டு. மிகவும் பிற்பட்ட ஒரு குக்கிராமத்துக்கு ஆசிரியனாக அல்லது டாக்டராக ஒருவன் வருகிறான். அவனுடைய கண் வழியாக அங்குள்ள தனித்தன்மைகளும் சிறப்புகளும் இழிவுகளும் நுட்பமாக படம்பிடித்துக்காட்டப்படுகின்றன. அந்த அன்னியன் அச்சிறு உலகுக்கு புறவுலகினை அறிமுகம் செய்கிறான். அவன் மூலம் அங்கே தேங்கி கிடந்த வாழ்க்கையில் அலைகள் எழுகின்றன. சிக்கல்கள் முளைக்கின்றன. பலசமயம் அவன் திரும்பிச்செல்லும்போது கதை முடிவுக்கு வருகிறது. இந்த முன்மாதிரியை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/219

ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு’




லின் காங் கம்யூனிஸ்ட் சீனாவில் ஒரு டாக்டர். கூஸ் கிராமத்தில் வறிய சூழலில் பிறந்து படித்து ராணுவ மருத்துவமனையில் வேலைபார்க்கும் இருக்கும் அவருக்கு இளவயதிலேயே மணமாகிவிடுகிறது. மணமகள் ஷு யு மிக அழகற்றவள். அவளை பெற்றோரின் கட்டயம் காரணமாக திருமணம் செய்துகொள்ளும்படி நிகழ்கிறது. அவரைக் கேட்காமலேயே உறுதிசெய்யப்பட்ட அத்திருமணத்தை அவரால் சீனக் கிராம வாழ்க்கையின் விதிகளின்படி மறுக்க இயலாது. மேலும் அவரது வயதான தாய்தந்தையரையும் பண்ணையையும் பராமரிக்க ஆள் தேவைப்பட்டது. லின் காங்கால் அவளை சற்றும் நேசிக்க …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/350

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்




: வைக்கம் முகமது பஷீரின் ஒரு கதாபாத்திரம் குழந்தையாக இருக்கும்போது பள்ளியில் ஆசிரியர் கேட்கிறார் “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும்டா?” குழந்தை தன் ஊரில் குன்றுமேலேறி நின்று இரு ஆறுகள் இணைவதைப் பார்த்த ஞாபகத்தில், “இன்னொரு பெரிய ஒன்று’ என்று பதில் கூறுகிறது. அடிவிழுகிறது. எவ்வளவு சொல்லியும் குழந்தைக்குப் புரியவில்லை. இரண்டும் இணையாமலிருக்கும் போதுதான் இரண்டு. இணைந்துவிட்டால் எப்போதும் மிஞ்சுவது ஒன்றுதானே? முதிர்ந்து பழுத்தபிறகு பஷீர் எழுதிய கதையில் ஒரு கதாபாத்திரம் அறிகிறது `நான் நீ …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/191

நானக் சிங்கின் வெண் குருதி




இந்திய மொழிகளில் நவீன இலக்கியம் உருவானபோது அது சமுதாய, மதச் சீர்திருத்த்தத்தின் பொருட்டுத்தான் தொடங்கியது என்று சொல்லலாம். ஏற்கனவே வால்டர் ஸ்காட் நாவல்களை அடியொற்றி இங்கே சரித்திரத்திகில்கதைகள் உருவாகி வெற்றிபெற்றிருந்தபோதும்கூட வாசிப்பு என்பது ஒரு அறிவார்ந்த செயல்பாடு அதற்கு சமூகப்பொறுப்பு உண்டு என்ற எண்ணமெல்லாம் மேற்குறிப்பிட்ட சமூகசீர்திருத்த நூல்கள் மூலமே நிறுவப்பட்டது. அவற்றிலிருந்தே நம் யதார்த்தவாத எழுத்துக்கள் உருவாகிவந்தன – மிகச்சில வருடங்களுக்குள்ளேயே. தமிழில் அ.மாதவையா, ராஜம் அய்யர் , கேரளத்தில் ஒ.சந்துமேனன் போன்ற சீர்திருத்த எழுத்தாளர்கள் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/221

ஆர்.விஸ்வநாத சாஸ்திரியின் ‘அற்ப ஜீவி’




புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின்’ காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம் பிழைக்க சென்னைக்கு வந்து கணக்குப்பிள்ளையாக உடலையும் ஆத்மாவையும் மாற்றிக்கொண்டு தினமும் சரியான நேரத்தில் ரயிலைப்பிடித்து சரியானநேரத்தில் வேலைக்குபோய் அதேபோலவே திரும்பும் மனித யந்திரமான சுப்பையா பிள்ளையின் வாழ்க்கையின் அர்த்தமின்மையை துணுக்குறச்செய்யும்படி சொன்ன கதை அது. அசாதாரணமானவர்களே இலக்கியநாயகர்களாகமுடியும் என்ற மரபார்ந்த நம்பிக்கையை தாண்டி எந்தவிதமான தனித்துவமும் இல்லாதவரும் கோடிகளில் ஒருவருமான ஓர் ‘அற்ப ஜீவி ‘யின் வாழ்க்கையைச் சொன்னதன்மூலம் அதன்பின்னால் உருவாகிவந்த யதார்த்தவாதத்துக்கும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/220

எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது




யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் `பார்க்க` நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில் தலைப்பு உட்பட பக்கத்துக்கு இருபது சொற்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே இருந்தன) பைரப்பாவின் மரபு சார்ந்த மனம் சில அடிப்படைத் தரிசனங்களை ஏற்க மறுக்கும் பழமைசார்பு உடையது என்பது அனந்த மூர்த்தியின் பதில். 1990 ல் அனந்தமூர்த்தி சாகித்ய அகாதமிக்கு தலைவர் பதவிக்காக போட்டியிட்ட …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/189

ராஜினியின் விமர்சனம் பற்றி.. கறுப்பி




கம்யூனிஸ்ட் கட்சிகளின் முறைமையாலும், சோசலிசத்தின் விரோதப் போக்கினாலும் சோசலிசத்தின் தலமையாயிருந்த ருஷ்யா உடைந்த போது உலகம் முதலாளித்துவத்தின் கைகளுக்குள் விழுந்து விட்டது என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்கவேண்டியுள்ளது. ஆங்காங்கே மாக்ஸைப் படித்து விட்டு வாழ, கொள்கை பரப்ப முற்படுதலும் மிகக் குறைந்த அளவில் இடம்பெறவே செய்கின்றன. இந்நேரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்மையைக் கேள்விக்குறியாக்கி வெளிவந்தது ஜெயமோகனின் “பின் தொடரும் நிழலின் குரல்”. இந்நாவலுக்கான பல ஆண் விமர்சகர்களின் பார்வையிலிருந்து பெரிதும் வேறுபட்டு பெண்ணியப் பார்வையாக …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/470

Older posts «