Tag Archive: இரா.குப்புசாமி

தமிழ்ச்சித்தர் மரபு




சேலம் ஆர்.கே என்ற இரா.குப்புசாமி ஓரு வெள்ளி நகை வியாபாரி. ஏறத்தாழ முப்பது வருடங்களாக வாசிப்பதையே பெரும் பகுதி வாழ்க்கையாகக் கொண்டவர். வீட்டிலேயே மிகப்பெரிய நூலகம் வைத்திருந்தார். பெரும்பாலான வாசகர்கள் சமகால இலக்கியங்களையே வாசிப்பார்கள். சமகால சிந்தனைகளை வாசிப்பார்கள். இவற்றைப் பற்றிய பேச்சுகள் அவர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி அளிக்கும். பழைய இலக்கியங்கள் மற்றும் சிந்தனைகளை கவனிப்பதில்லை. ஆகவே அவர்கள் புதுமையில் மெய் மறப்பவர்களாகவும் அசலான சிந்தனைகளை நோக்கி நகர முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இரா.குப்புசாமி அபூர்வமான விதிவிலக்கு. …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/6121