Tag Archive: அனுபவம்

டைரி
ஜனவரி பதினாறாம் தேதி காலையில்தான் நான் இவ்வருடத்திய டைரியை வாங்கினேன்.  மலிவானதும் அதேசமயம் அதிக பக்கங்கள் வருவதுமான டைரி. நூறு ரூபாய். வழக்கமாகவே நான் டைரி எழுத தாமதமாகும். நாஞ்சில்நாடன் அவரது ‘பிராடி ஆண்ட் கம்பெனி’ டைரியை ஜனவரி பத்து வாக்கில்தான் தருவார். இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார்– அதாவது ‘நாஞ்சில் ஏஜென்ஸீஸ்’ உரிமையாளராக ஆகிவிட்டார். இவ்வருடம் நான் சென்ற டிசம்பர் பதினெட்டு அன்று ஊரைவிட்டு கிளம்பியபின் பதினாறாம்தேதிதான் வந்துசேர்ந்திருக்கிறேன். அதாவது எனக்கு இப்போதுதான் இவ்வருடம் ஆரம்பிக்கிறது. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/1235

சதுரங்க ஆட்டத்தில்
  ”டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா?”என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ”ஆமாம்” என்றேன். ”என்ன வாசிச்சே?” நான் யோசித்து ”எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை” என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில் அடங்கி இருந்த காலம். யோசித்து யோசித்து, பூடகமாக எழுதப்படும் நவீனத்துவ யதார்த்த எழுத்து அல்லாமல் எதுவுமே இலக்கியமல்ல என்ற நம்பிக்கை என்னுள் நடப்பட்டு ஓயாமல் நீரூற்றப்பட்டுக்கொண்டிருந்தது. ”போடா மயிரே…நீ கண்டே பெரிசா…” என்றார் பாலசந்திரன். சி.வி.ராமன்பிள்ளையின் தர்மராஜா என்ற நாவலில் இருந்து …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/1081

அங்கே அப்பா காத்திருக்கிறார்!
  வாழ்க்கையைப்பற்றி சுருக்கமான தத்துவங்களுக்கு எப்போதுமே நல்ல மவுசு உண்டு. அந்தக்காலத்தில் குமுத விகடங்களில் ‘யாரோ’ என்ற ஞானி அரிய பல கருத்துக்களைச் சொல்லி வாசித்திருக்கிறேன். சாணக்கியன் சொல் தந்தியில் இன்றைக்கும் வாசிக்கப்படுகிறது. ‘என்பான் புத்திசாலி’ என்ற வார்த்தைகளுக்கு முன்னால் எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்பது அதன் வடிவ ஒருமை. இன்றைக்கு காலை நான் ஒரு வரியைக் கண்டடைந்தேன். ‘வாழ்க்கை என்பது அப்பாவாக ஆகிக்கொண்டே இருப்பது’ ரத்தினச்சுருக்கம். ஆனால் என்ன ஒரு ஆழம்! நானே அரைமணிநேரம் மகிழ்ந்துகொண்டேன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/66264

அசைவைக் கைப்பற்றுதல்
  புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளரான பொ.கருணாகரமூர்த்தி எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பாளிகளில் ஒருவர். நகைச்சுவை உணர்ச்சியுடன் நுண்அவதானிப்புகளை நிகழ்த்தி மானுட இயல்புகளை சித்தரிப்பவர். அவரது ‘ஒரு கிண்டர்கார்ட்டன் குழந்தையின் கேள்விகள்’ என்ற கதையில் ஒரு சின்னப்பெண் கேள்விமேல் கேள்விகளாகக் கேட்கும். நான்கு கைகள் கொண்ட சாமிச் சிலையைப்பார்த்து ”சாமிக்குப்பின்னால் ஆரு நிக்கிறாங்க?”என்று ஐயப்படும். அது பெரும்பாலான குட்டிகள் கேட்கும் கேள்விதான். அந்த நூலுக்கு முன்னுரை எழுதிய ‘புரட்சிக்’ கவிஞர் இன்குலாப் அக்கதையை நகைச்சுவையாக பார்க்கவில்லை. ஒரு குழந்தை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/1535

மதம்
அப்பாவுக்கு சின்னவயதிலேயே ஒழுங்கு என்பது மண்டைக்குள் நுழைந்துவிட்டது. பிரிட்டிஷ்காரர்கள் அவர்களின் ராணுவமனநிலைகொண்ட பள்ளிகள் வழியாக அளித்த ஒழுங்கு அல்ல. அதற்கு முன்னரே நம்முடைய மரபில் இருந்து உருவாகி வந்த ஒழுங்கு.Permanent link to this article: http://www.jeyamohan.in/7596

தன்னறம்
‘திருடனை துரத்த நாய் உள்ளே வந்தது. திருடன் ஓடியும் நாய் உள்ளேயே சுற்றி வருகிறது!’Permanent link to this article: http://www.jeyamohan.in/7005

கலைக்கணம்
”தமிழ் சினிமாவிலேருந்து நான் தப்பவே முடியாது. இதுக்குள்ளதான் என் கனவுகள் இருக்கு. ஏன்னா நான் சின்ன கைக்குழந்தையா இருக்கிற காலம் முதலே எங்கம்மா என்னைய தூக்கிட்டு சினிமாவுக்குப்போவாங்க. அதுக்கு முன்னாடி என்னை எங்கம்மா வயித்துக்குள்ள வைச்சிருந்த நாளிலேயே நான் சினிமாவை கேக்க ஆரம்பிச்சிருப்பேனோ என்னமோ. எனக்கு சினிமான்னு அறிமுகமாகிறது சத்தம் வெளிச்சம் சங்கீதம் எல்லாம் கலந்து மனசுக்குள்ள ஓடிட்டிருக்கிற கனவுகள்தான். மூணுவயசு வரைக்கும் நான் சினிமாவை ஒழுங்கா பாத்ததில்லை. கொஞ்சம் பாத்துட்டு தூங்கிடுவேன். அப்றம் கனவுகளும் வெளியே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/1058

தோன்றாத்துணை
  சென்னையில் பழைய ஜெமினி ஸ்டுடியோ அருகே பார்ஸன் காம்ப்ளெக்ஸ் என்ற பெரிய கட்டிடத்தின் நாலாவது மாடியில் மாத்ருபூமி நிருபராக அப்போது இருந்த கே.ஸி.நாராயணனின் அலுவலகமும் குடியிருப்பும் இருந்தது. நான் தருமபுரியிலிருந்து வந்து தங்கியிருந்தேன். கே.ஸி.நாராயணன் இப்போது மலையாள மனோரமா குழுமத்தின் இதழ்களுக்கான பொது ஆசிரியர். இப்போது கவிஞராகப் புகழ்பெற்றிருக்கும் மங்காடு ரத்னாகரன் அப்போது மலையாள இந்தியா டுடே இதழின் உதவி ஆசிரியர். சி.பி.எம் [மா.லெ] குழுவின் கெ.என்.ராமச்சந்திரன் குழுவின் பிரச்சாரகராக சென்னையில் பணியாற்றிய ஒரு நண்பர் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/775

தெய்வ மிருகம்
  நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் காலையில் என்னால் கையைத்தூக்க முடியவில்லை. கை கனமாக இருந்தது. சற்று தூக்கியபோது அக்குளருகே ஒரு நரம்பு அழுத்தப்பட்டது போல தெறித்தது. அத்துடன் எனக்கு நல்ல காய்ச்சலும் இருந்தது. உதடுகள் காய்ந்து நாவால் தொட்டபோது சொரசொரவென்றிருந்தன. முழுக்கோட்டில் டாக்டர்கள் யாருமில்லை. அரசு மருத்துவமனைக்குப்போக அருமனைக்குச் செல்லவேண்டும். அருமனை வரை நடப்பதற்குச் சோம்பல்பட்டுக்கொண்டு உள்ளூரிலேயே கம்பவுண்டரிடம் காட்டி மாத்திரை வாங்குவது வழக்கம். பொதுவாக அன்றெல்லாம் உபதேசியார்கள் என்று சொல்லப்படும் கிறித்தவப் பிரச்சாரகர்கள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/832

பூதம்
  கேரளத்தில் இரு கவிதைப்போக்குகள் உண்டு. ஒன்று நாட்டுப்புறத்தன்மைகொண்ட கேரளப்பண்பாட்டில் இருந்து எழும் கவிதைகள். இன்னொன்று சம்ஸ்கிருதச் செவ்வியல் மரபில் இருந்து எழுபவை. இரண்டு அம்சங்களும் எல்லா படைப்புகளிலும் இருக்குமென்றாலும் மேலோங்கியிருக்கும் அம்சங்களை வைத்து அவற்றை மதிப்பிடவேண்டும். கேரளகவிதை சம்ஸ்கிருதச் செவ்வியல் மரபின் பலவீனமான நிழலாகவே இருந்தது. அதில்  நாட்டார்ப்பண்பாட்டை கலந்து இன்றைய மலையாளத்துக்கு அடிப்படை அமைத்தவர் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன். அவரது ‘அத்யாத்ம ராமாயணம், கிளிப்பாட்டு’ ஒரு திருப்புமுனை. துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனை நாட்டாரழகியல் மரபின் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/870

Older posts «