‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 76

பகுதி 16 : தொலைமுரசு – 1 புலரியின் முதற்சங்கு ஒலிக்கையில் சாத்யகி விழித்தெழுந்து தாழ்ந்து எரிந்த காம்பில்யத்தின் விளக்குகளின் ஒளியை தொலைவானில் கண்டான். படகின் உள்ளறைக்குள் தடித்த கம்பளியை உதறிவிட்டு முகத்தை சுற்றிப்பறந்த கொசுக்களை மேலாடையால் விரட்டியபடி சுற்றும் நோக்கினான். படகு பாய்சுருட்டி நின்றிருந்தது. பாய்க்கயிறுகள் தொய்ந்து அவன் தலைக்குமேல் நூற்றுக்கணக்கான விற்களை அடுக்கியதுபோல வளைந்திருந்தன. கங்கையில் காற்று வீசவில்லை. குளிர் மேலிருந்து இறங்க நீரிலிருந்து நீராவி எழுந்தது. அவன் எழுந்ததைக் கண்ட குகன் அருகே …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/74048

ஜெயகாந்தன் நினைவஞ்சலி

e

Permanent link to this article: http://www.jeyamohan.in/74172

அ.மார்க்ஸின் ஆசி

a_marx_401

ஜெ, பேராசிரியர் அ.மார்க்ஸ் உங்களை அவன் இவன் என்று ஒருமையில் எழுதி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். நீங்கள் இஸ்லாமிய, கிறித்தவ மக்கள் மேல் காழ்ப்பை வளர்ப்பதாகவும் உங்கள் படைப்புகளை வாசித்தால் எவருக்கும் சிறுபான்மையினர் மீது வெறுப்பே உருவாகும் என்றும் சொல்லியிருந்தார். நான் உங்கள் படைப்புகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். உண்மையில் பின் தொடரும் நிழலின் குரல் வாசித்தபின்னர்தான் ஏசு என்ற வடிவம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. தொடர்ந்து கிறிஸ்துவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் தீவிரமாக எழுதிவரக்கூடியவர் என்றுதான் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/74140

வெள்ளையானையும் வரலாறும்

vellai-yanai

Dear Mr. Jeyamohan, Greetings! This is my first mail to you though I have discussed many times the quality of your creative works with my friend Prof. Bernard Chandra. I fully agree with whatever you have written about Jeyakanthan as a writer in The Hindu (Tamil) today. As you have said, there is a synthesis …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/74035

அறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)

”ஒவ்வொரு பரமாணுவும் பிரபஞ்சமே. எனவே மனிதனே பிரபஞ்சங்களை உள்ளடக்கிய பிரபஞ்சம்” (வசுதன் விஸ்வகரிடம்) அன்பு ஜெயமோகன், உடலுக்கு ஆதாரமாக இருக்கும் ஆற்றலை உயிர் எனச் சொல்வோம். அவ்வாற்றல் இல்லையென்றால் கண்ணுக்குத் தெரியும் உடலின் நகர்வோ, இயக்கங்களோ சாத்தியம் இல்லை என்பதும் நாம் அறிந்த செய்தியே. உயிரைக் குடைந்து பார்த்த அறிவியலாளர்கள் அது கண்ணுக்குத் தெரியாத அணுக்களின் தொகுப்பாக இருக்கிறது என்று அறிவித்தனர். மேலும், அவ்வணுக்களின் வளர்சிதை மாற்றங்களைப் பொறுத்தே உடலின் வாழ்நாள் தீர்மானிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர். உயிரியல் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/73726

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 75

பகுதி 15 : யானை அடி – 6 நோயில் படுத்திருந்தபோது இருந்த உளநிலைகளும் எழுந்தமரும்போது உருவாகும் உளநிலைகளும் முற்றிலும் வேறானவை என்று துரியோதனன் அறிந்துகொண்ட நாட்கள் அவை. படுக்கையில் எழுந்து அமர்ந்திருக்கத் தொடங்கியபின் அயலவர் எவரையும் சந்திக்க அவன் விழையவில்லை. ஆனால் படுத்திருக்கையில் ஒவ்வொருநாளும் அவனைப்பார்க்க எவரெல்லாம் வருவார்கள் என்பதையே எண்ணிக்கொண்டிருந்தான். படுத்திருக்கையில் எழுந்து நிற்கும் உலகிலிருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்டவனாக, உதிர்க்கப்பட்டவனாக உணர்ந்தான். மரங்கள், மனிதர்கள், மலைகள், கட்டடங்கள் என அனைத்துமே எழுந்து நின்றுகொண்டிருந்தன. எழுந்து …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/74004

நுழைவாயிலில்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். நான் புதுக்கோட்டையில் வசித்து வருகிறேன்..என் அப்பா பத்திரிக்கை நிருபர் என்பதால் சிறுவயதிலே நல்ல புத்தகங்கள் எனக்கு தேடி கொடுத்தார்.தற்போது சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதுகிறேன்.. 2014இல் கோவை வந்திருந்தபோது விஷ்ணுபுரம் விருதுவிழாவில் தங்களை நேரில் பார்த்து பேசினேன்.. நான் எழுதிய சிறுகதையை கூட உங்களிடம் காண்பித்தேன்.(அப்போது என்னிடத்தில் கணையாழி இருந்தது).. ஞாபகம் இருக்கா என்று தெரியவில்லை..போட்டோ எடுத்தது என்னிடத்தில் இல்லை இருந்தால் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/74028

எஞ்சியிருப்பதன் பேரின்பம்!

அன்புள்ள ஜெ, இத் துன்பியல் சம்பவம் எனக்குத் தான் நடந்தது என்று நினைத்தேன். “எனக்கே நடந்திருந்தால்” என்பது இப்போது தான் உறைக்கிறது. நேற்று ஓர் நண்பரின் மகனுக்கு பிறந்தநாள். இந்தியாவை விட்டு வெளியில் வந்துவிட்டால் இத்தகைய தினங்கள் பேருருவம் கொண்டு விடும். 20 குடும்பங்கள் ஓர் வீட்டுக்குள் சந்திப்பது என்பது பேரின்பம். உண்மையாகவே நாம் அனைவரும் இவ்வளவு இனியவர்களா என்று நம்மை நாமே கிள்ளிப் பார்க்கத்தோன்றும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஏதாவது ஓர் உணவை சமைத்து வந்திருப்பார்கள். சிலர் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/74084

அச்சுதனும் ஜானகியும்

janaki (1)

சமீபத்தில் நான் வாசிக்கும் எழுத்துக்களில் ஒவ்வொரு கட்டுரையிலும் விரிவான தகவல்புலமும் கூரிய பார்வையும் கொண்டவை அரவிந்த நீலகண்டன் தினமணி நாளிதழில் எழுதுபவை. அவ்வரிசையில் இதுவும் ஒரு முக்கியமான கட்டுரை அச்சுதன் முதல் ஜானகி வரை

Permanent link to this article: http://www.jeyamohan.in/74092

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 74

பகுதி 15 : யானை அடி – 5 மருத்துவர் உடலை தொட்டதும் துரியோதனன் விழித்துக்கொண்டான். நண்பகல் என்று தெரிந்தது. ஆதுரசாலைக்குள் வெயிலொளி நிறைந்திருந்தது. அவன் கண்கள் கூசி கண்ணீர் நிறைந்து வழிந்தது. அவர் அவன் நெஞ்சைத்தொட்டு மெல்ல அழுத்தி “வலி எப்படி இருக்கிறது?” என்றார். “இருக்கிறது” என்று அவன் முனகியபடி சொன்னான். “இளையோன் எப்படி இருக்கிறான் மருத்துவரே?”  மருத்துவர் “உயிர்பிழைத்துவிட்டார். ஆனால் எழுந்து நடமாட மேலும் ஒருமாதம் ஆகலாம்” என்றார். துரியோதனன் விழிகளை மூடிக்கொண்டு “அது …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/73953

Older posts «

» Newer posts