Daily Archive: February 4, 2018

கலையில் அதிவன்முறை

art




  மதிப்பிற்குரிய ஜெயமோகன், மனிதர்களைக் கொடுமைப்படுத்துவதை ஒரு மையமாக வைத்து பல ஆங்கில மற்றும் இதர மொழித் திரைப்படங்கள் எடுத்து வருகிறார்கள். இப்போதெல்லாம் torture-porn என்றே இதனை அழைக்க ஆரம்பித்து விட்டனர். ஹாஸ்டல் என்ற திரைப்படம் ஓரிரு ஆண்டுகள் முன்பு வந்தது – அதில் சித்திரவதைக் காட்சிகள் தத்ரூபமாகக் காட்டப் படுகின்றன. ஒரு வகையில் சித்திரவதை நிகழ்த்துபவர்களுடன் படத்தைப் பார்க்கிறவர்களும் சேர்ந்து உட்கார்ந்து கிடைத்த மனிதனை சித்திரவதை செய்வதை ரசிக்கட்டும் என்று படம் எடுக்கிறார்களோ என்று ஐயம் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/35624

அரசியல்படங்கள் கடிதங்கள்




  தமிழில் அரசியல்படங்கள் அன்புள்ள ஜெ.,   இன்னும் ஜனநாயகமே தமிழ் நாட்டில் வரவில்லை எனும் போது அரசியல் படங்கள் எப்படி வரும் ?   1995-ல் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த “மக்களாட்சி” படம் அளவிற்கு கூட இப்போது எடுக்க முடியாது என்பதே எதார்த்தம்..   மீறினால், வரிவிலக்கில் விதிவிலக்கு; திருட்டு தமிழில் அரசியல்படங்கள் விசிடி, வெளிவரவே தடை என்று அந்தப் படத்தை முழுமையாகவே நசுக்கிவிட முடியும்.   இணையம் மூலம் மக்கள் அதிக அளவில், அதிக …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/106373

பார்சல் பெருமாள்!




8903916753 -இந்த எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. திருப்பதி திருமலை கோயிலில் இருந்து அழைப்பதாக ஒரு பிராமணப் பெண்குரல் பேசியது. திருப்பதியில் இப்போது முக்கியமான பூசை நடந்துகொண்டிருப்பதாகவும் அதில் லட்சுமிசிலை, ஸ்ரீசக்ரம் உட்பட முக்கியமான சிலவற்றை வைத்து பூசை செய்வதாகவும் திருமலைதேவஸ்தானத்தில் அதை வாங்க ஐந்தாயிரம் ரூபாய் ஆகும் என்றும் ஆனால் என் எண் குலுக்கலில் பெருமாள் முன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனால் வெறும் ஆயிரம் ரூபாய்க்கு அவற்றை எனக்கு ஆசியுடன் அளிக்கவிருப்பதாகவும் அம்மையார் சொன்னார்.   …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/106467

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50




பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 8 எவரோ ஒருவர் கைசரித்தபோது கங்கணம் சரிந்த ஓசைகூட கேட்குமளவுக்கு அவையில் அமைதி நிலவியது. துரியோதனன் இரு கைகளையும் மேலே தூக்கி அசைவில்லாது நின்றான். அசைவின்மையே அவன் இயல்பு என்றும் அசைவுகள் நிகழ்ந்து மறைவன என்றும் தோன்றியது. பின்னர் “அவையோரே, நான் என் சொல்லைக் காக்க ஒப்புகிறேன். ஆம், அச்சொல்லை நான் வேதம்நிறுவிய அவையில் வேதநீர் விழுந்த முடிசூடி அமர்ந்துதான் ஏற்றுரைத்தேன்” என்றான். “வேதத்தை மறுத்து ஒரு நிலையும் நான் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/106328