Daily Archive: February 3, 2018

அருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன்




  வழக்கம் போல இந்தக் கடிதத்தை அனுப்பும் முன் யோசித்துக் கொள்கிறேன், இதை ஏன் அனுப்புகிறேன் என்று.  நீங்கள் ஸ்ரீனிவாசன் நடராஜன் நூல் வெளியீட்டு விழாவில் பேசியதில் ஒரு கலை வடிவத்திற்கே பிரகடனத்தை உருவாக்கி அளித்திருக்கிறீர்கள். அந்த உரை, இருபத்திரண்டு வயதில், விஷ்ணுபுரம் படித்துவிட்டு அலைந்து கொண்டிருந்த, என் தேடலின் ஆரம்பக் காலத்தில் கிடைத்திருந்தால் பதினைந்து வருடங்கள் மிச்சமாகியிருந்திருக்கும். இங்கு அனைத்து அறிவுத்துறைகளுக்கும் நடுவே உரையாடல்களே இல்லை, உங்கள் தளம் அதற்கான இடமாக உருவாகி வந்திருக்கிறது. ஆகவே, …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/106284

பத்மாவதி -கடிதங்கள் 2




  பத்மாவதியும் வரலாறும்   அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு தினமும் காலையில் தினசரிகளுக்கென ஒதுக்கிய நேரத்தில் தங்களின் வலைதளத்துக்குள் செல்வது வழக்கம். “பத்மாவதியும் வரலாறும்” சற்று நீளமான கட்டுரையாக இருந்தபடியாலும், அதற்கு முந்தைய தினங்கள் குடியரசுநாள் பொதுவிடுமுறையை குடும்பச் சுற்றுலாவில் குழந்தைகளுடன் இருந்த களைப்பால் ஞாயிறு மதியம் பொது அரங்கு ஒன்றில் வாசித்தேன். முதலில் அந்த இடம் குறித்து சொல்லிவிட வேண்டும். சென்னையில் ஸ்ரீவிஷ்ணு ஃபௌண்டேஷன் “இந்து ஆன்மிக மடங்களில்” ஒன்று என்பதாக அறிந்திருந்தாலும் உள்ளபடியே அதன் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/106339

ஈவேரா -உண்மைகள்




  அன்பு மிக்க ஜெயமோகன் சார் அவர்களுக்கு ,   வணக்கம் .   சமீப காலமாக தந்தை பெரியார் பற்றி பத்திரிக்கைகளிளும் ஊடங்களிளும் தெரிந்தோ தெரியாமலளோ புகழ்ந்து பேசி வருகிறார்கள். அவரை வரலாற்று நாயகனாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் ஈ.வே.ரா. அவர்களைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் பார்வை வேறாகத் தெரிகிறது. ஓர் இளம் வாசகனாகக் கேட்கிறேன் உண்மையில்  பெரியார் வரலாற்று நாயகனா , மற்ற தலைவர்களிடம் இருந்து ஈ.வே.ரா எவ்வாறு மாறுபடுகிறார், அவரைப் பற்றி தற்காலதமிழ்ச் சமூகம் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/106260

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49




பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 7 இளைய யாதவர் அவையை நோக்கியபடி அசையாமல் நின்றிருந்தார், காற்றிலா இடத்தில் நின்றிருக்கும் சுடர் என. பானுமதி அசலையிடம் “மீண்டும் ஒருமுறை அறிவிக்க சொல்… அவர்கள் அவர் குரலை செவிமடுக்காமலிருக்கிறார்கள்” என்றாள். அசலை “அதைத்தான் கணிகர் விரும்பியிருக்கிறார். அவர்களுக்கு சூதன் கீழ் படைகொண்டு நிற்பதைப்பற்றி மட்டுமே இப்போது கவலை” என்றாள். பானுமதி “ஆனால் அவர் மேலும் முதன்மையான தூதுடன் வந்திருக்கலாம் அல்லவா?” என்றாள். அசலை புன்னகைத்தாள். இளைய யாதவர் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/106302