Daily Archive: February 1, 2018

கஞ்சிமலையாளம்




சாப்பாட்டு மேஜையில் ஒரு சர்ச்சை. ஒரு சீனக்குழந்தை கண்களைச் சுருக்கிக்கொண்டு ஆவேசமாக பூனைக்குரலில் பாடுவதை நான் சித்தரித்தேன். அஜிதன் சிரிக்க அருண்மொழி ஐயத்துடன் “மலையாளமும் அப்படித்தானே ஒலிக்கிறது?” என்றாள்.   அருண்மொழி குமரிநிலம் வந்து ஆண்டு இருபது. இப்போதும் மலையாளம் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கும். இத்தனைக்கும் அவள் வேலைபார்த்த பெரும்பாலான ஊர்களில் தபால் அலுவலகத்திற்கு வருபவர்கள் மலையாளம்தான் பேசுவார்கள். அருண்மொழி மலையாளம் பேசமுயல்வதைக்கண்டு உள்ளம் உருகி அவர்களே தமிழ்பேசுவார்கள்.   நான் கேட்க வாய்ப்பில்லாதபோது மலையாளம் பேசுவாள் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/106407

கடிதங்கள்




மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு புதுவைக்கு இதன் பொருட்டு கிளம்பும்போதுகூட  மிகத் தயக்கமாகவே இருந்தது.பொதுவாகவே நான் இருமுறை  கலந்துகொண்ட சென்னை விவாதக் கூடுகையிலேயே சில புரிதல்கள் உருவாகி யிருந்தன. முதலில்  கூடுகையின்போது என்னைப் போன்ற புதியவர்கள் ஆர்வ கோளாறில் பேசி முடித்தால் தெரியவருவது இங்கிருப்பவர்கள் நுட்பமான வாசிப்பனுபவம் உடையவர்கள் மட்டுமல்ல அடுத்த தலைமுறை இலக்கிய எழுத்தாளர்களும்கூட….என்பதே.ஆனால் அதையும் தாண்டி இந்த அறியாமையை சுலபமாகத் தாண்டிச் சென்று நாமும் அவர்களில் ஒருவரே என்று உணரச்செய்யவும் தெரிந்தவர்கள்.குறிப்பாக,நண்பர்கள் ராஜகோபாலனும் காளிப்பிரசாதும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/106280

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47

bl-e1513402911361




பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 5 அவைக்கூடத்தின் மேற்குபக்கமாகத் திறந்த அரசப்பெருவாயிலின் முற்றத்தில் விதுரர் சிற்றமைச்சர் ஜலஜரும் ஏகசக்ரரும் துணைக்க காத்து நின்றிருந்தார். நிலைகொள்ளாதவராக மேற்கே அரண்மனையிலிருந்து கிளம்பி தெற்குவாயிலை ஒட்டிவந்த பாதையை நோக்கிக்கொண்டிருந்தார். ஜலஜர் “இளையோர் சித்ரபாணரும் சித்ரவர்மரும் அரசருடன் கிளம்பி வரப்போவதாக செய்தி, அமைச்சரே” என்றார். “ஆம், அவையில் அனைவரும் அமர்ந்துவிட்டனரா?” என்றார் விதுரர். “பார்த்துவரச் சொல்கிறேன்” என்று ஜலஜர் சொன்னார். “அடுமனைப் பொறுப்புக்குரியவர் யார்?” என்றார் விதுரர். அவர் அதை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/106321