Daily Archive: November 12, 2017

இளவெயிலும் பனித்திரையும்




  மத்யப்பிரதேசம் சென்று வந்ததுமே அருண்மொழியுடன் எங்காவது செல்லவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. ஒரு சின்ன தேனிலவுப் பயணம். வழக்கமாக ஆண்டுக்கொருமுறை வெளிநாட்டுப்பயணம் ஒன்று அமையும். இம்முறை நிகழவில்லை என்பதனால் இது. கிளம்புகிறோம் என்று போனில் கூப்பிட்ட போகனிடம் சொன்னேன். “தேனிலவிலாவது மனைவியை பேசவிடும் ஒருவழக்கம் உலகமெங்கும் உண்டு. பொதுவாகச் சொன்னேன்” என்றார். அதை நான் கேள்விப்பட்டதில்லை. சரி இருக்கட்டுமே என பேச்சை குறைத்தேன். ஆனால் ’உன் நண்பர்களிடம் என்றால் வளவளவென்று பேசுவாய். என்னிடம் மட்டும் எப்ப …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103754

அயினிப்புளிக்கறி- கடிதங்கள்




அயினிப்புளிக்கறி கதை அன்புள்ள ஜெ,, இயற்கையுடன் தனிமனித பிரக்ஞையும் சேரும் பொழுதே தனக்கேயுரிய ஆன்மீகதன்மையை அல்லது அழகை இயற்கையிடம் கண்டுகொள்கிறான் மனிதன்.அயனிமரம் கணேசனுக்கு நான்கு லட்சம் மதிப்புள்ள வெறும் மரம் மட்டுமே ஆனால் ஆசானுக்கு அது தன்னுடைய எல்லையற்ற காதலின் சாட்சியாக உள்ளது,தனக்காக கனிந்து காத்திருக்கும் ஆச்சியாகவும் தெரிகிறது. வயதான காலத்தில் நினைவுகளால் மட்டுமே பெரும்பாலான மனிதற்கள் வாழ்கிறார்கள் அந்த நினைவுகளின் சுவடுகள் திடீரென அழிக்கப்படுதல் தன்னுடைய இறப்பிற்க்கு மற்றும் ஒட்டு மொத்த புறக்கணிப்புக்கு சமம் அதனால் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103480

பணமதிப்புநீக்கம் -கடிதங்கள்




அன்பு ஜெ, உங்கள் பதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு உருவான எதிர்வினைகளை ஒற்றை தரப்பாக மிகவும் எளிமைப்படுத்தி விட்டதாக தோன்றுகிறது. ஆம், எந்த கட்சியையும் போலவும் பிஜேபிக்கும் அரசியல் எதிரிகள் இருப்பார்கள். பிஜேபி எதைச் செய்தாலும் அதற்கு ஒரு குறுகிய எதிர்மறை நோக்கம் கற்பித்து திட்டங்களை திரித்து காழ்ப்பும் வசைகளும் கூடிய கோஷங்களை வைக்கும் தரப்பு இருக்கும்தான். அந்த குரலுக்கு அதன் பரபரப்பு கருதி ஊடகங்களில் பெரும் கவனமும் கிட்டும் அதனாலேயே அது முக்கிய ஒற்றை தரப்பு என்ற …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103736

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 59




ஏழு : துளியிருள் – 13 அஸ்தினபுரியின் எல்லையை எந்த அடையாளங்களும் இல்லாமல் சர்வதன் தொலைவிலேயே அறிந்துகொண்டான். “அஸ்தினபுரி அணுகுகிறது, மூத்தவரே” என்றான். “எப்படி தெரியும்?” என்றான் சாம்பன். சர்வதன் மறுமொழி சொல்லவில்லை. ஒருகையால் சுக்கானை பிடித்துக்கொண்டு எழுந்து நின்று கரையை நோக்கிக்கொண்டு வந்தான். எப்படி அவன் அதை உணர்ந்தான் என சாம்பனுக்கு புரியவில்லை. நீர்வெளி ஒற்றை ஒளிப்பெருக்காக சிற்றலைகள் சுழிக்க சென்றுகொண்டிருந்தது. சாம்பன் “இன்னும் அஸ்தினபுரி அணுகவில்லை” என்றான். சர்வதன் மறுமொழி சொல்லவில்லை. “என்ன பார்க்கிறாய்?” என்றான் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103741