Daily Archive: November 11, 2017

வாழும் தமிழ்




  க்க்காங்….ரீங்ங்ங்ங்ங்…..பேரன்பிற்கும் … ஓக்கே…. பேரன்பிற்கும், வணக்கத்திற்குமுரிய மீனாட்சிபுரம் நகர் வாழ் எனதருமை பொதுமக்களே, இங்கே இன்றைய தினம் இந்த அருமையான மாலை நேரத்திலே எங்கள் அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் அன்பான ஆணையினை ஏற்று இன்றைய தினம் இங்கே இந்த அருமையான மாலை நேரத்திலே அருமையானதொரு பொதுக்கூட்டத்தினைக் கூட்டி எங்கள் அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் கொடியினை ஏற்றும் பொருட்டு இன்றைய தினம் இங்கே கூடியுள்ள அருமைத்தலைவர் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/236

வெண்கடல் பற்றி ஒரு விமர்சனம்




எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல், உயிரோடு கலந்திருக்கும் பாடல்களை நினைவுபடுத்துகிறது லட்சுமண் ரானேவுடன் கலந்திருந்த இந்திப்படம் ராம்ராஜ்யாவின்  பீனா மதுர் மதுர் கச்சுபோல் பாடல்  …..கதையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆவல் தாங்காமல் யூடியூபில் அதன் காணொளியைச் சொடுக்கி அவரின் சிலிர்ப்பை நானும் கொஞ்சம் கடன் வாங்கிச் சிலிர்த்துக் கொண்டேன். அந்தப் பாட்டில் வரும் விரக வேதனையை என்னாலும் உணர முடிந்தது. வெண்கடல் ஒரு விமர்சனம்




Permanent link to this article: http://www.jeyamohan.in/103493

கடிதங்கள்




  அன்பின் ஜெ,   வணக்கம்!.   “ஒன்ற நாளுக்கு எதுக்கு இவ்ளோ டிரஸ் திணிச்சிகிட்டு வற?”. சுரைக்காய் வடிவமாகிவிட்ட தோள்பையை பார்த்தபடியே கேட்ட அப்பாவுக்கு சொன்ன பதில் சற்று இறுக்கமாய் இருந்த புறப்பாட்டு சூழ்நிலையை இலகுவாக்கியது.   ” அவம்பாட்டுக்கு பிரிச்சிவச்சிகிட்டு உக்காந்திருப்பான்.. டீ எதும் வேணுமுண்ணா பேசாம படுத்திருக்காத, அவன்ட்ட சொல்லி வாங்கிட்டுவரச்சொல்லு. செல்லு, காசெல்லாம் பத்திரம், ஆபரேசன் முடிஞ்சதும் அவனவிட்டு போன் பண்ண சொல்லு….”   அப்பாவிடம் கட்டளைகளை பிறப்பித்து காரை எடுக்கச்சொல்லி …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103564

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 58




ஏழு : துளியிருள் – 12 சர்வதன் மதுராவின் பெருந்துறை மேடைக்கு அரைக்காதம் அப்பால் யமுனைக்குள் கிளைதாழ்த்தி, படர்ந்து நின்றிருந்த பேராலமரத்தின் அடியில் கிளைவளைவுகளால் உருவான கூரைக்குக் கீழே மென்மரம் குடைந்துருவாக்கப்பட்ட சிறிய படகில் அமர்ந்து இரு விழுதுகளை கைகளால் பற்றிக்கொண்டு காத்திருந்தான். வானில் விண்மீன்கள் ஒவ்வொன்றாக எழத்தொடங்கியிருந்தன. யமுனையிலிருந்து பாசிமணம் கொண்ட நீராவிக்காற்று எழுந்தது. அவன் அமர்ந்திருந்த நீண்ட வாள் போன்ற படகு அலைகளில் எழுந்து அமைந்துகொண்டிருந்தது. சூழ்ந்திருந்த இருளுக்குள் வௌவால்களின் சிறகடிப்பும், மரத்தின் கிளைகளுக்கு …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103713