Daily Archive: November 10, 2017

தூய்மை பாரதம்?




  நாகர்கோயிலும் சுச்சா பாரதமும் மாபெரும் குப்பைக்கூடை     மதிப்பிற்குரிய ஜெயமோகன், தங்கள் ”நாகர்கோயிலும் சுச்சா பாரதமும்” என்ற தலைப்பிலான கட்டுரையில் “குப்பைகளை அள்ள எந்த நிதியமைப்பும் நிர்வாக அமைப்பும் செய்யாமல், எந்தக் கண்காணிப்பு அமைப்பும் உருவாக்காமல், வெறுமே வாரியல் எடுத்து புன்னகைக்கும் மோடி நம்மிடம் சொல்வதும் அதுதானே? “இந்தால வாரி அந்தால போட்டிருங்க மக்கா” என்று” எழுதியுள்ளீர்கள். இதை படித்து எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. நீங்கள் எந்த விஷயத்தையும் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுத்து அதை எழுத்தில் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103638

அயினிப்புளிக்கறி கடிதங்கள்




  அன்புள்ள ஐயா   அயினிப்புளிகறி சிறுகதை வாசித்தேன்   நாவில் சுவைபடாவிட்டால் மண்டையில் அறைகிறது. வாழ்வில் மனம் எதிர்பார்க்கும் சுவை கிடைக்காதபோது,  ‘செரியா வரலை’ என்பது தான் முடிவான பதிலாகிறது   அம்மை வந்து ஆசானுடன் இணக்கமானதும், இருவரின் சித்தமும்  மூத்து கனிஞ்சு, இனிக்க ஆரம்பித்து  விடலாம். அல்லது இந்த இணைப்பு ஒரு மாபெரும் மெய் நிகர் கனவோ?   சுவை என்பது தான் என்ன மூளையின் ஒரு நரம்பு சொடுக்கன்றி ? ஐம்புலன் கருவிகளில் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103548

முகங்களின் தேசம்பற்றி




  ஜெயமோகனின் ‘முகங்களின் தேசம்’ நூலை அலுவலகம் செல்லும் போதும் திரும்பி வரும் போதும் எம்.ஆர்.டி. ரயிலில் தினம் ஒரு கட்டுரை என்பதாகப் படித்து வந்தேன். ஒவ்வொரு நாளும் மிகுந்த மன எழுச்சியை அடைய இக்கட்டுரை வாசிப்பு உதவியது. சில கட்டுரைகளைப் பற்றிய எனது அனுபவங்கள்:   முகங்களின் தேசம் பற்றி ஆமருவி தேவநாதன் எழுதிய கட்டுரை




Permanent link to this article: http://www.jeyamohan.in/103561

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 57




ஏழு : துளியிருள் – 11 மதுராவின் யமுனைக்கரையில் அமைந்த சிறிய மாளிகையின் உப்பரிகையில் அமர்ந்து பிரமோதரின் சப்ததாராவலியை ஆராய்ந்துகொண்டிருந்த யௌதேயன் சர்வதனின் எடைமிக்க காலடிகள் மரப்படிகளில் ஓசையுடன் எழுந்து அணுகுவதை கேட்டான். அதிலிருந்த விரைவை உணர்ந்து ஏடுகளை அடுக்கி பட்டு நூலால் கட்டியபடி அவன் வருகைக்காக காத்திருந்தான். நீர் பிளந்து பெருமீன் எழுவதுபோல படிப்பள்ளத்தில் இருந்து மேலெழுந்த சர்வதன் அங்கிருந்தே உரத்த குரலில் “மூத்தவரே, நான் தங்களிடம் உரைத்ததுபோல நாம் எண்ணாத பிறிதொன்று நிகழ்ந்துள்ளது” என்றான். …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103688