Daily Archive: November 8, 2017

குருவியின் வால்




நத்தையின் பாதை 6   1988ல் சுந்தர ராமசாமியைப் பார்க்க மலையாளக் கவிஞர் அய்யப்பப் பணிக்கர் வந்திருந்தார். அவர்கள் நெடுங்கால நண்பர்கள். அய்யப்பப் பணிக்கர் நெய்யாற்றங்கரையில் அப்போது வசித்துவந்த மூத்த காந்தியரான ஜி.ராமச்சந்திரனைச் சந்திக்கச்செல்வதாகச் சொன்னார். சுந்தர ராமசாமியும் உடன்கிளம்பினார். நான் அப்போது அங்கிருந்தமையால் சம்பிரதாயமாக  வருகிறீர்களா என்று கேட்கப்பட்டது. பாய்ந்து ஏறிக்கொண்டேன்.   அவர்கள் பேசிக்கொண்டே சென்றதிலிருந்து ராமச்சந்திரன் அவர்களைப்பற்றி ஒரு சித்திரம் எனக்குக் கிடைத்தது. ஆனால் அன்று இலக்கியவெறி கொண்டிருந்தமையால் இலக்கியம் அல்லாத எதையும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103100

மையநிலப்பயணம் -கடிதங்கள்




வணக்கம் ஐயா.. தங்களின் மைய நில பயண கட்டுரையில் வட இந்திய மாநிலங்களின் பின் தங்கிய கல்வி நிலை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் தங்கள் கவனத்திற்கு….. கீழே உள்ள இணைப்பு, இந்தியா முழுவதுமான மாநிலங்களில் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பை பற்றி குறிப்பிடுகிறது. http://www.deccanchronicle.com/nation/current-affairs/311017/of-8-lakh-tamil-nadu-state-board-students-only-20-enter-iits.html அன்புடன்  நாஞ்சில் சுரேஷ். ஜெ அவர்களுக்கு வணக்கம்.. மையநிலப் பயணம் தினசரி படிக்கிறேன். உங்கள் வாசகராய் இருப்பது எத்தனை சிறந்த அனுபவம்!! வாழ்நாளில் நாங்களெல்லாம் போகவே முடியாத, அற்புதமான இடங்களையும், வரலாற்று சின்னங்களையும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103581

என் படைப்புகள் பற்றி…




    அன்புள்ள ஜெயமோகன், நான் இதுவரை தங்கள் படைப்புகளுக்கு எழுதிய விமர்சனங்களைத் தொகுத்து “ஜெயமோகன் நாவல்களும் சிறுகதைகளும்” என்ற தலைப்பில் நூலாகப் பதிப்பித்திருக்கிறேன். இதில் வெண்முரசு வரிசை நாவல்கள் முதல் வேறு சில நாவல்களும் சிறுகதைகளும் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இது பேப்பர் பேக் நூலாகவும், கிண்டில் நூலாகவும் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. https://www.amazon.in/Jeyamohan-Novelkalum-Sirukathaikalum-Kesavamani/dp/1976563755 அன்புடன், கேசவமணி




Permanent link to this article: http://www.jeyamohan.in/103490

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 55




ஏழு : துளியிருள் – 9 அறைக்குள் சென்றதுமே சர்வதன் “நாம் ஓய்வெடுக்க வேண்டியதில்லை, மூத்தவரே. நீராடிவிட்டு நேராக களத்திற்கு செல்வோம். மூத்த யாதவர் அங்குதான் இருப்பார். அவரை அங்கு சந்திப்பதும் எளிது” என்றான். யௌதேயன் “ஆனால் நாம் அங்கு எதையும் பேசமுடியாது” என்றான். “நாம் அரசமுறையாக வரவில்லை. ஆகவே அவையில் எழுந்து முறையாக அறிவிப்பதற்கும் ஏதுமில்லை. அவருடன் தனியறையில் சொல்லவே செய்தி உள்ளது. அதற்கு முன் அவரிடம் சற்றேனும் அணுக முடியுமென்றால் நம் பணி எளிதாகிறது” …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103668