Daily Archive: November 7, 2017

நாராயண குரு எனும் இயக்கம்-2




தொடர்ச்சி நடராஜகுரு   நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது. நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/7524

மையநிலப்பயணம் கடிதங்கள்




  ஜெ வணக்கம் படேஸவர் ஆலய தொகுதி பற்றிய குறிப்பு படித்தவுடன் பெறும் வருத்தம் ஏறபட்டது. பெரு நாட்டில் மாச்சூ பிச்சு (15ஆம் நூற்றாண்டு) நகரத்தை விட பல நூற்றாண்டுகள் புராணமான இடம் கவனிப்பற்று இருக்கிறது. ஃப்ரண்ட் லைன் பத்திரிக்கையில், திரு முகம்மது அவர்களின் பேட்டி (http://www.frontline.in/static/html/fl2702/stories/20100129270212200.htm) ஒன்று உள்ளது. நில நடுக்கத்தில் பெரும்பாலும் அனைத்து கோயில்களும் தகர்ந்து விட்டனவாம். அந்த இடமே கற்களின் குவியலாக இருந்ததாம். சுல்தான்களால் அழிக்க பட வில்லை என்கிறார். ஆச்சரியமான தகவல், …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103557

அயினிப்புளிக்கறி கடிதம்




அன்புள்ள ஜெயமோகன், அயினிப்புளிக்கறி சிறுகதை மிக எளிமையான கதையாகத் தோன்றினாலும் உள்ளே விரிந்துகொண்டே செல்கிறது. அயினி மரத்தின் பழம் காயாக இருக்கும்போது புளிப்பாக அல்லது கடுப்பாக இருக்கிறது. பழமாக முதிரும்போது நல்ல இனிப்பாக மாறிவருகிறது. யோசித்துப் பார்த்தல் ஆசானின் வாழ்க்கையும் அதுபோலவே என்றுதான் தோன்றுகிறது. அவரின் இளமைக் காலம்கொந்தளிப்பாக இருக்கிறது. திமிரும் பிடிவாதமும் நிறைந்ததாக இருக்கிறது. அதனால் முதலாவது சம்சாரத்தை இழக்க நேருகின்றது. ஆனால், அவர் வாழ்க்கை முதிர்ந்து கனிந்து ஒரு கட்டத்தை எட்டும்போது கனிந்த அயினிப்பழம் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103559

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 54




ஏழு : துளியிருள் – 8 தொலைவிலேயே மதுராபுரியின் துறைமுகப்பு பந்தங்களின் செவ்வொளியில் காட்டெரியெனத் தெரிவதை யௌதேயன் பார்த்தான். பீதர் நாட்டின் பளிங்குக் குமிழ் விளக்கொளியில் படித்துக்கொண்டிருந்த பூர்ஜ மரப்பட்டைகளாலான ஏட்டை சீராக அடுக்கி பட்டுநூலால் கட்டி பேழைக்குள் வைத்தபின் அருகே மூங்கில் அழியில் தொங்கிய மேலாடையை எடுத்து அதன் மடிப்புகளை நீவி சீராக தோளிலிட்டபடி படகின் முகப்பிற்கு வந்தான். அவன் குழல்கற்றைகள் காற்றில் எழுந்து பறந்தன. இடையில் இருந்த பட்டு நூலை எடுத்து குழல்கற்றைகளைக் கட்டி …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103609