Daily Archive: November 1, 2017

மையநிலப்பயணம் 8




  மாலை ஏழுமணிக்கெல்லாம் குவாலியர் வந்துவிட்டோம். குவாலியர் கோட்டை ரயில்நிலையம் அருகில்தான் இருக்கிறது. அங்கேயே அறைபோட்டோம். நான் எழுத அமர்ந்தேன். நண்பர்கள் அந்தியுணவை தேடி கிளம்பினார்கள். வரும்போதே வாங்கிவந்திருந்த வாழைப்பழத்தையும் ஆப்பிளையும் நான் சாப்பிட்டேன். வெண்முரசு ஓர் அத்தியாயம் கூடுதலாகத் தேவைப்பட்டது. அதன்பின் 28 ஆம் தேதிவரை கவலையில்லை   நான் ஆடைகளை அதிகமாக எடுத்துச்செல்லவில்லை. துபாயில் என் அறையிலேயே சலவை இயந்திரம் இருந்தது. கிரீன்பார்க்கில் சில ஆடைகளை சலவை செய்து வாங்கினேன். பாதி ஆடைகளை பெட்டியில்வைத்து …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103461

பயணம் -கடிதங்கள்




தங்களை மீண்டும் வாசிக்கிறேன், பனிமனிதன் படித்துக்கொண்டிருக்கிறேன், சிறுவயதில் வானொலியில் இளையபாரதம் மானுடம் வென்றது என்ற பகுதி நினைவுக்கு வந்தது.  இன்று சுட்டி டிவியே பல குழந்தை களுக்கு உலகம், வில்லனை அழிப்பபது தவிர வேறு கதைகள் இல்லை. Hydi னு ஒரு கதை நல்லாயிருக்கு. ஒவ்வொரு பனிமனிதன் அத்தியாயத்திலும் உள்ள விளக்க குறிப்புகள் அருமை. என் மகளுக்கு 5 வயதாகிறது. வருங்காலத்திற்கு இது உதவும். தங்களின் சங்கரர் உரை YouTube ல் கேட்டேன் அருமை, ஒரு மணி …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103041

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48




ஏழு : துளியிருள் – 2 துவாரகையின் அரண்மனை முகப்பு வழக்கத்திற்கும் மேலாக ஒளிகொண்டிருந்தது. இரவுகளில் அரண்மனையின் கீழ்அடுக்கின் மீன்எண்ணெய் விளக்குகள் மட்டுமே சுடர் கொண்டிருக்கும். அன்று மேலும் மூன்று அடுக்குகளிலிருந்த அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டிருந்தன. சுடர்நிரை கடற்காற்றில் நெளிந்தாட அலைமேல் நிற்கும் பெருங்கலம்போலத் தோன்றியது மையமாளிகை. செந்நிற ஒளி சகடங்கள் ஓடித்தேய்ந்த கற்கள் பரவிய முற்றத்தில் விழுந்து நீண்டு அங்கு அலையிலா நீர்கொண்ட குளமொன்றிருப்பதைப்போல் விழிகளுக்குக் காட்டியது. வழக்கமாக அரண்மனை முகப்பில் நின்றிருக்கும் பல்லக்குகளும் தேர்களும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103459