Daily Archive: September 13, 2017

திமிரம்




என் கண்ணாடியை நான்காண்டுகளுக்கு முன் சென்னையில் அணுவணுவாகச் சோதித்து போட்டேன். வெள்ளை விளிம்புள்ள கண்ணாடி. அது இயக்குநர் மிஷ்கின் எனக்கு அளித்த பரிசு. அதற்கு முன்பு போட்டிருந்த கண்ணாடி மணிரத்னம் அளித்த பரிசு. என் பார்வைகளில் அவர்களின் பங்களிப்பு உள்ளது என்று பொருள். நாலைந்து மாதங்களுக்கு முன்பு நண்பரும் கண்கண்ணாடிக்கடை உரிமையாளருமான முத்து பிரதாப் பிளாஸாவுக்கே அத்தனை கருவிகளுடனும் உதவியாளர்களுடனும் வந்து கண்ணை பரிசோதனை செய்தார். நோக்கு மாறியிருக்கவேண்டும் என்பது அவரது உறுதியான நம்பிக்கை. மாறவில்லை. அதே …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/102202

தன்னம்பிக்கை மனிதர்கள் -கடிதங்கள்




தன்னம்பிக்கை மனிதர்கள் அன்புள்ள ஆசிரியருக்கு, தங்களின் தன்னம்பிக்கை மனிதர்கள் படித்தேன். கிருஷ்ணன் ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறார். மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போது தேறி விட்டாரா! என் வரையில் மிகவும் நல்ல மனிதர். நான் அறிந்த வரையில் உங்களின் மிகவும் அன்பிற்கு உரியவர் மற்றும் தேர்ந்த வாசகர். கொல்லிமலை சந்திப்பில் நாங்கள் என்ன கேட்பது என்று விழித்தபோது மிக இயல்பாய் பேசி எங்களை சகஜமாக்கினார். அதுவும் நண்பர் ஒருவர் அக்கப்போர் பண்ணப்போய் கடைசியில் நீங்கள் பொறுமை இழந்த …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/102233

தொல்பழங்காலம்




கீழடி – நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும் இனிய ஜெயம், கீழடி குறித்த பதிவு வாசித்தேன். கொஞ்சநாள் முன்பு ஒரு வீடியோ உலவியது. பதிவின் ஓரத்தில் புதைக்கப்படும் தமிழர் வரலாறு எனும் தலைப்பு. படு சோக பின்னணி இசை. அகழ்வாய்வு களம் ஒன்று, [கீழடியாம்] டிப்பர் கொண்டு, மணலால் ஸ்லோ மோஷனில் மூடப் படுகிறது. இறுதியில் உண்மையான தமிழனாக இருந்தால் எனத் துவங்கி ஏதேதோ பிதற்றல்கள். கீழடி விவகாரத்தில் முதல் சிக்கல் அது மதுரைக்கு அருகே இருக்கிறது என்பது. …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/102191