Daily Archive: July 11, 2017

சுராவும் சுஜாதாவும்




அன்புள்ள ஜெ சுந்தர ராமசாமி காலச்சுவடு இதழைத் தொடங்கும்போது நீங்கள் அதனுடன் நெருக்கமான தொடர்பில் இருந்திருக்கிறீர்கள். சுஜாதாவுக்கு காலச்சுவடு இதழின் முதல் இதழை சு.ரா அனுப்பி கருத்து கோரினார் என்று இணையத்தில் ஒரு விவாதம் நிகழ்கிறதே அதைப்பற்றி உங்கள் தரப்பு என்ன? சுந்தர்ராஜன் அன்புள்ள சுந்தர்ராஜன், காலச்சுவடு முதலில் சுந்தர ராமசாமி பொறுப்பில் வெளிவந்தபோது அதனுடன் மிகநெருக்கமான தொடர்பில் இருந்தேன். அதற்காக நிறைய பணியாற்றினேன். அதில்வெளிவந்த பிளாக்குகள் [படங்கள்] நான் சேகரித்து அளித்தவை. பலரை சந்தித்து எழுத்துக்களை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/100334

சீ முத்துசாமி நேர்காணல் -நவீன்




2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் மலேசியப்படைப்பாளி சீ. முத்துசாமியின் நேர்காணல். நவீன் எடுத்தது. சமீபத்தில் இலக்கியவாதிகளிடம் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த நேர்காணல் என்று இதைத்தான் சொல்வேன். அந்த இலக்கியச்சூழலை, அதன் வரலாற்றை, அவ்விலக்கியவாதியின் பங்களிப்பையும் குறைகளையும் நன்கு உணர்ந்து எடுக்கப்பட்ட நேர்காணல் இது “எளிய வாசிப்புத்தளத்தைத் திருப்திப்படுத்த நகர்த்தப்படும் எழுத்து நீர்த்துப்போவதை தவிர்க்கவியலாது” – சீ.முத்துசாமி ================================================ சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது ————————————————————————————————— சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன் சீ. முத்துசாமியின் ‘இருளில் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/100236

சிறிய மனங்கள்




ஜெ, உங்கள் இரு கட்டுரைகளைப்பற்றி முகநூலில் வந்த இரு எதிர்வினைகள். மன்னிக்கவும் உங்களை இந்த எல்லைக்கு இழுக்கவில்லை. ஆனால் நீங்கள் எங்கோ ஒருபக்கம் கடுமையான உழைப்புடன் , சொந்த அவதானிப்புகளுடன் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். மறுபக்கம் அது இப்படித்தான் வாசிக்கப்படுகிறது. இதை நான் உங்கள் கவனத்திற்குக்கொண்டுவருவது இதனால்தான் ரவிச்சந்திரன் * இந்த நபர் எவ்வளவு அற்பன் என்பதற்கு இந்தச் சொல்லாட்சி ஒரு சான்று. ஏலவே ‘இடதுசாரி’ என வழங்கிவரும் ஒன்று ஏன் ‘இடங்கை’ என ஆகிறது? இனி பொச்சுக் கழுவப் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/100351

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48




47. நிலவெழுகை காட்டுமுகப்பில் நின்ற வண்டியில் இருந்து பொதிகளை இறக்கிக்கொண்டிருக்கும்போது தொலைவில் கொம்பொலி எழுவதை முக்தன் கேட்டான். இரு பெரிய பித்தளை அண்டாக்களை ஒன்றுக்குள் ஒன்றெனப்போட்டு தோளிலேற்றி கொண்டு சென்று அடுமனைக்கென அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் வைத்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்த வலவன் நின்று இரு கைகளையும் இடையில் வைத்தபடி அத்திசையை நோக்கினான். கையில் எடுத்த கலத்துடன் என்ன செய்வது என்று அறியாமல் சம்பவன் முன்னும் பின்னுமெனத் ததும்பினான். கொம்போசை மீண்டும் எழ காவல் மாடங்கள் அனைத்திலும் கொம்புகள் ஏற்று …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/100375