2017 March 24

தினசரி தொகுப்புகள்: March 24, 2017

அசோகமித்திரனும் திருமாவளவனும்

  இன்று மாலை ஒரு மலையாள எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அசோகமித்திரனை மலையாளத்தில் வாசித்திருக்கிறார். “இங்கே அத்தகைய ஒரு மாபெரும் எழுத்தாளர் மறைந்தால் முதலமைச்சரே சென்று அஞ்சலி செலுத்தியிருப்பார். அத்தனை அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளும் சென்றிருப்பார்கள்” என்றார்....

அவ்வளவு சிறியது…

  அவ்வளவு சிறியதுதான் இந்த வாழ்க்கை இல்லையா? நாம் எதையும் திரும்பபெற முடியாத அளவு திருத்திக்கொள்ள முடியாத அளவு எந்த அன்பையும் எந்தப் பரிசையும் பதிலுக்குத் தரமுடியாத அளவு சொல்ல வந்தது தொண்டையிலே நின்று விடும் அளவு மின்மயானத்தில் பத்து வினாடிகளில் சாம்பலாகிவிடும் அளவு ஒரு சிறிய ஸ்டாம்பின் பன்புறம் எழுதக்கூடிய அளவு எவரும் எவரிடமும் திரும்ப...

இந்நாள்

நேற்று காலைமுதலே ஒருவகையான நிலைகொள்ளாமை இருந்துகொண்டிருந்தது. தர்க்கபூர்வமாக இதற்கெல்லாம் ஓரு அர்த்தமும் இல்லை. ஆனால் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். எழுதமுடியாமல் கீழே சென்று படுத்துவிட்டேன். உடல் எடைமிகுந்து அசைக்கவே முடியாமலானதுபோல. விழிப்பு வந்தது....

‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ – 4 – இளையராஜா

4 இழைகளின் இசை 1.நம் பிரபஞ்சத்தின் அடிப்படை கட்டுமானப் பொருட்கள் எவை? 2.நம் பிரபஞ்சம் எத்தனை பரிமாணங்களைக் கொண்டது? 3.இணை பிரபஞ்சங்கள் உள்ளனவா? 4.காலப்பயணம் சாத்தியமா? 5. நம் பிரபஞ்சத்தின் ஆதியும் அந்தமும் என்ன? இவையெல்லாம் நாம் அறிவியல் மூலம் எழுப்பும்...

தஞ்சைச் சந்திப்பு -கடிதம்

  தஞ்சை சந்திப்பு மறக்க முடியாத நிகழ்வாக, முன்பே கூறியது போல 'நல்ல திறப்பாக' அமைந்தது. சில தீவிர வாசகர்களின் அறிமுகமும் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு வருவதற்கு முந்தைய இரண்டு நாட்களாக தூங்காமல்...

வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52

52. வெண்மலர்தேவன் மூன்று மாதம் அன்னைப்புலியின் பாலை உண்டு புலிக்குருளைகளில் ஒன்றென தானும் புரண்டு வளர்ந்தது குழந்தை. மார்கழிமாதம் மகம்நாளில் பிறந்தவள் புவியாள்வாள் என்றனர் மகளிர். நிமித்திகர் கூடி அவள் நாளும் பொழுதும் கோளமை...