Daily Archive: March 20, 2017

மௌனி எனும் தொன்மம்




அழியாச்சுடர்களில் வெளிவந்துள்ள எம்.வி.வெங்கட்ராமின் இந்த கட்டுரை முக்கியமான ஓர் இலக்கிய ஆவணம். இதன் உள்ளடக்கத்தை அவர் என்னிடம் நேரில் சொல்லியிருக்கிறார். பின்னர் கட்டுரையாகவும் எழுதினார். அதற்கு நான் மறுமொழியும் எழுதியிருக்கிறேன். இணையத்தில் இப்போதுதான் வருகிறதென நினைக்கிறேன். தமிழ்ச்சூழலில் மௌனி பெயரைச் சொல்வதென்பது அன்றெல்லாம் தன்னை அதிநுட்பமானவராகக் காட்டிக்கொள்வதற்கான ஒருவழியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் நகுலனுக்கு அந்த இடம் சிலரால் அளிக்கப்பட்டது. மௌனி, நகுலன் படைப்புகள் முழுமையாக அச்சில் கிடைக்க ஆரம்பித்ததுமே அந்த தொன்மம் கலையத் தொடங்கிவிட்டது. ஆனால் அன்று …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/96385

ஈரோடு சந்திப்பு, சுபவீ, லிங்கம்- கடிதங்கள்




அன்புள்ள ஜெ, ஜக்கி பற்றிய தங்களின் சமீபத்திய கட்டுரை வழக்கம்போல பல விவாதங்களை எழுப்பியுள்ளது. நிறைய எதிர்வினைகளையும் நீங்கள் எதிர்கொண்டிருப்பீர்கள். எனக்கும் உங்கள் கருத்துகளில் நிறைய முரண்பாடு இருக்கிறது. அது இருக்கட்டும். நான் சொல்ல வந்தது வேறு விஷயம். நேற்று (25.02.2017) அன்று தூக்கத்தில் எனக்கு ஒரு கனவு வந்தது. அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. நான் மிக ஆர்வமாக அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கூர்ந்த கவனிப்புக்குக் காரணம் அந்த நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களும் சுப. …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/96236

பேருந்துகள்




  அன்புள்ள ஜெ   நான் தங்கள் தளத்தின் ஒரு தொடர் வாசகன், ஒரு எழுத்தாளனாகும் சிறுவயது ஆசை தந்த தைரியத்திலும், எது வேண்டுமானாலும் எழுதினால் பிரசுரிக்க முடியும் என்ற வசதியினாலும் வலைப்பக்கம் துவங்கி சில கிறுக்கல்களை வலையேற்றி ப்ளாக்கில ப்ளாப் ஆகி ஒரு நேரத்தில் உங்கள் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்தபின் ‘இன்னும் நாமல்லாம் வளரணும் தம்பி’ என்று எழுதுவதை நிறுத்தியவன்.   எழுதுவதை நிறுத்திய பின் கைஅரிப்பு தாங்காமல் பல நேரங்களில் தங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/96497

வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48




48. நில்லாத்துலா துலாவின் நடுமுள்ளென நடுங்கி நின்றிருக்கும்படியே அறத்தை தெய்வங்கள் அமைத்தன. எனவே தோன்றிய நாள்முதல் தேவரும் அசுரரும் போரிடுவது நின்றதில்லை. எவரும் முற்றிலும் வென்றதுமில்லை, முற்றழிந்ததுமில்லை. அழிந்தாலும் மீண்டு எழும் வல்லமை கொண்டிருந்தது தேவர்கள் கொண்டிருந்த அறம். ஒரு துளி ஆயிரமென கோடியென பெருகும் ஆற்றல் கொண்டிருந்தது அசுரர்களின் மறம். அமுதம் தேவர்களின் உணவு. நஞ்சே அசுரர்களுக்குரியது. அமுதோ நஞ்சின் இளையோள். தேவர்களின் ஆசிரியர் பிரஹஸ்பதி. அவருடைய முதல் மாணவராகிய சுக்ரரோ அசுரர்களுக்கு வழிகாட்டியென்றானார். அறிந்து …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/96529