Daily Archive: March 13, 2017

ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி
ஜெ, ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். [வெறும் 90 வாக்குகள். நோட்டாவை விடக்குறைவு] முற்போக்கின் தோல்வி என்னும் கட்டுரையே ஒருவகையில் முன்னுரைப்பது போல இருந்தது. ஐரோம் ஷர்மிளா பற்றி நீங்கள் முன்னர் எழுதிய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஆனாலும் ஓர் இலட்சியவாதியின் தோல்வி உங்கள் கொண்டாட்டத்திற்கு உரியதாக இருக்காதென்றே நினைக்கிறேன் எஸ்.ஜெயசீலன் *** ஜெ மே 2017ல், ஐரோம் ஷர்மிளா பற்றி கட்டுரை எழுதியிருந்தீர்கள். http://www.jeyamohan.in/89753#.WMXZCHqnyBZ பொது ஜன ஆதரவு பெற்றவர் அல்ல. பத்திரிக்கைகளால் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96302

நிழற்தாங்கலில் “ஜெயமோகனுடன் ஒரு நாள்’
நாகர்கோயில் “நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியின்” சிறப்பு நிகழ்வாக மார்ச் 26 ஞாயிறு “ஜெயமோகனுடன் ஒரு நாள் ” சந்திப்பு நடைபெற உள்ளது. காலை அமர்வு 8 மணிக்கு கவிஞர் பா. தேவேந்திரபூபதி Devendhira Poopathy Bhaskarasethupathy கவிதைகள் வாசித்து இந்நிகழ்வைத் தொடங்கி வைப்பார். மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் என்னுடைய Lakshmi Manivannan சில கவிதைகள் வாசிப்புடன் மதிய அமர்வு தொடங்கும். நாங்கள் ஏற்பாடு செய்த சில நிகழ்வுகளில் ஜெயமோகனுடன் சரியாக உரையாட இயலவில்லை என்கிற குறை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/95888

இரு கடிதங்கள்
  மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களை சந்திக்க வேண்டும் என்ற சந்தர்ப்பம் டெல்லிக்கு நீங்கள் சாகித்திய அகாடமி விழாவிற்கு வந்திருந்த போது கிடைத்தது. உவகை தரத்தக்க மகிழ்ச்சியான நேரங்கள், நான் விரும்பும் ஆதர்ச எழுத்தாளருடன் 2 மணி நேரம் என்பது எளிதாக கிடைக்க பெறாத ஒன்று. இலக்கியம் அல்லாத பொது தகவல்களை சார்ந்தே இந்த சந்திப்பு அமைய வேண்டும் என்று விரும்பினேன். இலக்கியம் சார்ந்த அறிவார்ந்த உரையாடல் உங்களுடன் நிகழ்த்த குறைந்தபட்ச தயாரிப்போடு உங்களை அணுக வேண்டும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96097

ஒற்றைக்காலடி
    ஒற்றைக்காலடியைத் திரும்ப திரும்ப மீட்டுருவாக்கம் செய்து கொண்டிருந்தேன். அப்பா காலையில், மக்கா! நைட் ஃபுல்லா ஒரே கனவு என்றார். ஒத்தைக் காலடியில தவம் செய்யுதா அம்மை. எதுக்கு? யாருக்கு? கொற்றவை! கொற்றவைனு காதுல உழுந்துட்டே இருக்கு. என்னதுனு சொல்லத் தெரியல. அரங்குக்குள்ள போய் கன்னியாரி அம்மைய பாத்தேன். என்னத்துக்குட்டி இப்படி நிக்க. உனக்கு காலு வலிக்கலியான்னேன். அவ உனக்கு கடைசி தங்கச்சி மக்கா! அப்படித்தான் தோணுகு. இத்தனைக்கும் அப்பா அந்த நாவலின் அட்டைப் புத்தகத்தை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96170

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–41
41. எழுபடை கம்பனன் ஹுண்டனின் அறையை அடைவதற்கு முன்னர் இடைநாழியிலேயே அவன் உவகைக் குரலை கேட்டான். கதவைத் திறந்ததும் அக்குரல் பெருகி வந்து முகத்தில் அறைந்தது. “அடேய் கம்பனா, எங்கு சென்றிருந்தாய்? மூடா, மூடா” என ஹுண்டன் நகைத்தான். கையை சேக்கையில் அறைந்தபடி “என்ன நிகழ்ந்தது தெரியுமா? நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். என் கால்களைக் கட்டிவைத்திருந்த கொடிகள் நாகங்களாக மாறி வழுக்கிச்செல்வதை உணர்ந்து நோக்கினேன். வலக்காலை அசைக்க முடிந்தது. அப்போது அருகே இருளுக்குள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96290