Daily Archive: March 10, 2017

முற்போக்கின் தோல்வி ஏன்? -1
ஜெ, காந்தியம் இன்று உரையை அதிகாலையில் கேட்டேன் மீண்டும். உலகச்சிந்தனை போக்கு முதல் அது இந்தியாவுக்கு வந்தது வரை ஒரு வரலாற்று சித்திரத்தையும் அளித்த உரை. கேட்கும்போது தோன்றியதும், பதில் தெரியாததுமான கேள்வி இது. சிந்தனையும் சமூகமும் முன்னேதானே செல்லும்? தன் எல்லா போதாமைகளுடனும் இடதுசாரிச் சிந்தனை உலகை நல்ல விஷயங்களை நோக்கித்தானே முன்னகர்த்தியது? நம் காலத்தில் நாம் மேலும் முன்னல்லவா நகரவேண்டும்? ஜனநாயகம் உள்ள தேசங்களில் மக்கள் என்ன நினைகிறார்கள் என்பதை வாக்குகள் மூலமாவது அறிய …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/95955

பனித்தமிழ்
ஜெ, இந்தச்செய்தியை பார்த்தீர்களா? உங்கள் கருத்து என்ன? பெருமாள் எஸ் பனிமனிதன் பேசியது தமிழா? *** அன்புள்ள பெருமாள், தமிழில் பெர்முடா முக்கோணம், எகிப்திய பிரமிடு, சைபீரியப்பனி, வேற்றுகிரக மனிதர்கள், எய்ட்ஸ் கிருமி, யோகம், தியானம் எல்லாவற்றையும் பற்றி இதே தரத்தில்தான் எழுதப்படுகின்றன. நான் முன்பொருமுறை வேடிக்கையாகச் சொன்னேன். நான் வெண்முரசில் புராணங்களை அறிவியல் நோக்கில் புரிந்துகொள்ள முயல்கிறேன். நம் மக்கள் அறிவியலை புராணநோக்கில் புரிந்துகொள்கிறார்கள். இரு எல்லைகள் இந்த பனிமனிதனை இல்லுமினாட்டி என அடித்துவிட்டால் என்ன …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96201

யோகமோசடி -கடிதங்கள்
  அன்புள்ள ஜெயமோகன், கார்ல் பாப்பரை முன் வைத்து அறிவியல் என்று எப்படி வரையிறுப்பது என மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுதி விட்டீர்கள். பாப்பரை நான் இன்னும் முழுமையாக வாசித்ததில்லை அவர் சொன்னதன் சாராம்சம் என்று நான் மற்ற இடங்களில் வாசித்ததை உங்கள் குறிப்பு துல்லியமாக பிரதிபலிக்கிறது. முன்பொரு முறை சொன்னதை மீண்டும் சொல்கிறேன். பதஞ்சலியின் யோக சூத்திரம் பற்றி டேவிட் கார்டன் வைட் எழுதிய புத்தகத்தைப் படித்த போது உங்கள் கட்டுரைகளை சேர்த்தே படித்தேன். உங்கள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96164

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–38
38. நீர்க்குமிழிமாலை மஞ்சத்தில் காத்திருக்கையில் அவ்வறைக்குள் நுழையும் அசோகசுந்தரியை நகுஷன் பல நூறு உருவங்களில் கற்பனை செய்துகொண்டான். நாணத்தின் எடை உடலெங்கும் அழுத்துவது சிலம்பொலியில் தெரிய நடந்து வந்து, தயங்கிய உடலை அணியோசைகளே அறிவிக்க கதவோரம் நின்று மிரண்ட விழிகளால் நோக்குபவள். அரசிக்குரிய நிமிர்வுடன் அஞ்சா விழிகளும் திரண்ட தோள்களுமாக வந்து  ஆலயக்கருவறையில் எழுந்த தேவியென வாயில்சட்டம் நிறைய நின்று அளவோடு புன்னகைத்து அரைச்சொல்லில் பேசுபவள். ஆர்வமும் அச்சமும் கொண்ட காட்டுப்பெண். குடி பயிற்றுவித்த மிகைநாணத்தைச் சூடிவந்து …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96112