Daily Archive: March 9, 2017

ஆளுமையை வரையறுத்தல் -அசோகமித்திரன்
அன்புள்ள ஜெமோ, சமீபத்தில் படித்த ஒரு அற்புதமான சிறுகதை போல் இருக்கிறது இந்த பேட்டி. அசோகமித்திரன் பேட்டி தொடங்குவதே அவருடைய சிறுகதை போலத்தான், முதுமையின் இயல்பால் இந்த மனுஷனுக்கு ஞாபகமறதி வேணும்னா வரலாம் ஆனா பழக்க தோஷத்துல அவருடைய படைப்பு வந்துகிட்டேதான் இருக்கும் போல.. வழக்கம்போல கிண்டலுக்கும் குறைவே இல்ல ஆனா அது கிண்டல்னு நினைக்க முன்னாடியே வேற ஒன்னு சீரியஸா சொல்லி நகர்ந்துறாரு.  (‘இதுவரை உங்களுக்குக் கிடைத்ததில் சிறந்த அங்கீகாரம் என்று எதைக் கருதுகிறீர்கள்?’ சாந்தோம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96053

அ.முத்துலிங்கமும் அனோஜன் பாலகிருஷ்ணனும்
  சொல்வனம் பிப்ரவரி 2017 இதழில் அ.முத்துலிங்கம் பற்றிய பல நல்ல கட்டுரைகள் உள்ளன. ஈழத்தின் இளம் எழுத்தாளர்களில் முக்கியமானவரான அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய இக்கட்டுரை முக்கியமானது. ஒரு முன்னோடியை பரவசத்துடனும் விமர்சனத்துடனும் சென்று பற்றிக்கொள்ளும் ஓர் இளம் எழுத்தாளனை இதில் காணமுடிகிறது அவர் ஓர் ஈழ தமிழ் எழுத்தாளர் என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. இதற்கு முன் வாசித்த ஈழ எழுத்தாளர்கள் அவ்வாறான கசப்பான அனுபவத்தையே தந்திருந்தார்கள். ஈழ எழுத்தாளர்கள் மீது கட்டிவைத்த விம்பத்தை அப்போதுதான் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96129

அலெக்ஸாண்டரின் சிரிப்பு
இன்று முழுக்க சோர்வு கைகளையும் கால்களையும் அழுத்திக்கொண்டிருந்தது. இணைத்து வேலைசெய்யவைப்பது பிரக்ஞை. அது தளர்கையில் கைகளும் கால்களும் வெறும் தசைச்சுமைகள். மெல்ல மாலைவரை கடந்துவந்தது அலக்ஸாண்டர் பாபுவின் இந்த தனிக்க்குரல்நகைச்சுவை நிகழ்ச்சிகளினால். நம்மூரில் இவ்வகையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் இல்லை, அவற்றில் இந்த அளவுக்கு பூடகமான அறிவார்ந்த விரைவான கிண்டல் இருந்தால் இங்குள்ள சபை மரணவீடுபோலத் தோற்றமளிக்கும். ஆகவேதான் நமது பிரபல நகைச்சுவையாளர்களான சுகி சிவம், லியோனி போன்றவர்கள் நகைச்சுவைத் துணுக்கை கதைபோல விரித்து விரித்து உரைக்கிறார்கள். நகைச்சுவை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96156

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–37
37. பாவையாடல் அசோகசுந்தரி வந்த வேளை குருநகரியை விண்ணகங்கள் வாழ்த்த வழியமைத்தது என்று நிமித்திகர் கூறினர். அவள் நகர்நுழைந்த அன்று மாலை இளவெயிலில் ஒளிப்பெருக்காக மழை ஒன்று பெய்தது. கீழ்த்திசையில் வானவில் ஒன்று நகர்மேல் வளைந்து நின்றது. அன்றும் தொடர்ந்துமென ஏழு நாட்கள் மழை பெய்து நகர் குளிர்ந்தது. மலைகளுக்குமேல் மின்னல்கள் பின்னப்பட்ட முகில்முடி அமைந்தது. மண்மணத்துடன் பெருகி வந்தன சிற்றாறுகள். ஏழாம்நாள் நகருக்கு வடக்கே வீடமைக்க மண்தோண்டியவர்கள் ஒரு புதையலை கண்டடைந்தனர். அறியாத தொல்லரசன் ஒருவனின் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96108