Daily Archive: February 15, 2017

புரட்சி, மக்களின் திருவிழா!
  சிலநாட்களாக பாதிநேரம் செல்பேசியை அணைத்தே வைக்கவேண்டியிருக்கிறது. மலையாள டிவிக்களிலிருந்து அழைத்து கொஞ்சம் பேசமுடியுமா என்கிறார்கள். ஒப்புக்கொண்டால் நம் படத்தை போட்டு “தமிழ் எழுத்துக்காரன் ஜெயமோகன் நம்முடே ஒப்பம் உண்டு. ஸ்ரீ ஜெயமோகன், அவிடே எந்து சம்பவிக்குந்நு?” என ஆரம்பிப்பார்கள். ஊழல்வழக்குகள் வழியாகத்தான் தமிழகம் இந்தியாவில் புகழ்பெற்றிருக்கிறது. மற்றவிஷயங்களைப் பேசினால் மைக்கை நாசூக்காக நகர்த்திவிட்டு நன்றி சொல்லிவிடுவார்கள். தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு நான் தொலைக்காட்சி ஆளுமை அல்ல என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். விடமாட்டார்கள். ’நீயெல்லாம் அண்ணா தம்பியோட பொறக்கலையா” …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/95371

அங்கே அப்பா காத்திருக்கிறார்!
  வாழ்க்கையைப்பற்றி சுருக்கமான தத்துவங்களுக்கு எப்போதுமே நல்ல மவுசு உண்டு. அந்தக்காலத்தில் குமுத விகடங்களில் ‘யாரோ’ என்ற ஞானி அரிய பல கருத்துக்களைச் சொல்லி வாசித்திருக்கிறேன். சாணக்கியன் சொல் தந்தியில் இன்றைக்கும் வாசிக்கப்படுகிறது. ‘என்பான் புத்திசாலி’ என்ற வார்த்தைகளுக்கு முன்னால் எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்பது அதன் வடிவ ஒருமை. இன்றைக்கு காலை நான் ஒரு வரியைக் கண்டடைந்தேன். ‘வாழ்க்கை என்பது அப்பாவாக ஆகிக்கொண்டே இருப்பது’ ரத்தினச்சுருக்கம். ஆனால் என்ன ஒரு ஆழம்! நானே அரைமணிநேரம் மகிழ்ந்துகொண்டேன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/66264

கந்து -கடிதம்
ஜெ, கந்து பற்றிய உங்கள் குறிப்பு வாசித்தேன். நாங்கள் ஊரில் சாதாரணமாக மாடு கட்டும் குற்றியைத்தான் கந்து என்று சொல்வோம். அதில் கட்டிவைத்து அடிக்கும் தண்டனையை கந்து அடிப்பு என்றும் சொல்வோம். திருடர்களை அப்படி அடிப்பதுண்டு. இதில் என்ன சொல்லாராய்ச்சி என்றுதான் தோன்றியது. சொற்கள் மக்களிடம் எப்படிப் புழங்குகின்றன என்று தெரியாமல் புத்தகங்களை வைத்துப் புரிந்து கொள்வதிலுள்ள மடமை இது. கந்து என்ற தூய தமிழ்ச்சொல்லில் இருந்துதான் ஸ்கந்தன் என்ற வடமொழிச்சொல் வந்திருக்கும் என்று உங்கள் கட்டுரையில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/95343

சு.வேணுகோபால் -இருகடிதங்கள்
  இனிய ஜெயம், இளம் வாசகர் சுரேஷ் பிரதீப் பதிவுகளின் தொடர் வாசகன் நான். என்னை தொகுத்துக் கொள்ளவும், புதிய கோணங்களை விவாதிக்கவும் அவை எனக்கு அணுக்கமாக இருக்கின்றன. சு.வேணுகோபால் படிப்புகளில் தீமையின் சித்திரம் குறித்த அவரது மதிப்பீட்டு கட்டுரை தனித்துவமானது. முதல் தளத்தில் தான் வகுத்துக்கொண்ட கேள்வியின் பரிமாணங்களை தான் வாசித்த பிற இலக்கிய ஆக்கங்களுடன் உரசி விவாதித்து விரிக்கிறார். இரண்டாவதாக காலத்தின் முன் உறவுகளை நிறுத்தி சுரா விவாதிக்க எடுத்துக்கொண்ட கலைக்களத்தை அதன் சாரத்தை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/95339

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
15. இருகருவிருத்தல் தாரை  கருவுற்றிருக்கும் செய்தி அவர்கள் இருவரையுமே விடுவித்தது. அவர் அனைத்தையும் உதறி இளஞ்சிறுவன் என்றானார். குழவியின் நினைவன்றி பிறிதில்லாதவராக முகம் மலர காடுகளிலும் நகர்தெருக்களிலும் அலைந்தார். பிறக்கவிருக்கும் குழவிக்கு விளையாட்டுப்பொருட்களும் ஆடைகளும் கொண்டுவந்து சேர்த்தார். மனைவிக்கு வேதுவைக்கவும் மூலிகைச்சாறு கொடுக்கவும் தானே முன்னின்றார். பிறர் நகையாடுவதுகூட பெருமையென்றே தோன்றியது. “முதுமையில் பிறக்கும் மைந்தன் முற்றறிஞன் ஆவான் என சொல்லுள்ளது” என்று சொன்ன காமிக முனிவரிடம் அவர் அருகே நின்ற முனிவர்களின் ஏளனப்புன்னகையை உணராமல் “ஆம், …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/95313