Daily Archive: February 4, 2017

அஞ்சலி: க.சீ.சிவக்குமார்
  க.சீ.சிவக்குமார் [கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்] என்ற பெயரை நான் 1996 ல் இந்தியாடுடே நடத்திய ஒரு சிறுகதைப்போட்டியில் அவர் பரிசுபெற்றபோதுதான் கேள்விப்பட்டேன். அதுதான் அவருடைய இலக்கிய அறிமுகம் என நினைக்கிறேன். அவரும் பாஸ்கர் சக்தியும் சேர்ந்து இலக்கியத்திற்கு அறிமுகமானார்கள். இருவரின் எழுத்துமுறையிலும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அப்போது அவருக்கு ஒரு கடிதம்போட்டேன். பின்னர் நேரில் சந்தித்தபோது நன்கு தெரிந்தவர்களாக உணர்ந்தோம். க.சீ.சிவக்குமாரின் எழுத்து சுவாரசியமானது. அவர் எதை எழுதினாலும் பொதுவாசகன் ஆர்வத்துடன் வாசிக்கமுடியும். ஆனால் அந்தச் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/95052

மாமங்கலையின் மலை -4
கொல்லூர் செல்லும் வழியில் ஒரு சிற்றூரைக் கடக்கும்போது என் கண்ணில் ஒரு காட்சி பட்டது “அந்த பள்ளியின் சுவரிலிருந்தவை என்ன படங்கள் பார்த்தீர்களா?” என கிருஷ்ணனிடம் கேட்டேன். அவர் கவனிக்கவில்லை. “எழுத்தாளர்களின் படங்கள்” என்றேன். வண்டியை திருப்பும்படி கூவினார். திரும்பிச்சென்று பார்த்தோம். ஞானபீடப்பரிசுபெற்ற கன்னட எழுத்தாளர்களின் படங்கள் அச்சுவரில் வரையப்பட்டிருந்தன. இதுவரை எட்டு எழுத்தாளர்கள் ஞானபீடப்பரிசு பெற்றுள்ளனர். குவெம்பு, [கே.வி.புட்டப்பா] டி.ஆர். பேந்ரே, சிவராம காரந்த், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், வி.கே.கோகாக், யு.ஆர்.அனந்தமூர்த்தி, கிரீஷ் கர்நாட், சந்திரசேகர …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/95027

பக்தி ஒரு கடிதம்
  சங்க இலக்கியத்தில் பக்தி பற்றி சீனுவின் கடிதமும் அதற்கு உங்கள் பதிலையும் பார்த்தேன். சடங்குகள் நிறைந்திருந்த காலகட்டம், ஞானத்திற்கு முக்கியத்துவமளித்த காலகட்டம். பக்தி மிகுந்திருந்த கால கட்டம் என்று ஆன்மீக வரலாறை பிரித்தறிய அது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இம்மூன்றும் எவ்வொரு கால கட்டத்திலும் கலந்து இருந்திருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. வேள்விகள் சடங்குகளுக்கு முக்கியம் அளித்து, ஞானம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், பக்தியில் உருகி வழிபடாமல் என இருப்பவர்கள் எந்தக் காலத்திலும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94986

அருகர்களின் பாதை- வாசிப்பனுபவம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாயிருக்கிறீர்களா? ‘அருகர்களின் பாதை’ வாசித்தேன். எனது அனுபவத்தை வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.  தங்கள் பார்வைக்கு.. https://amaruvi.in/one-word-to-describe-this-book-magnificent-5b515dd13f76#.81zj8snkm நன்றி ஆமருவி www.amaruvi.in  
Permanent link to this article: http://www.jeyamohan.in/95023

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–4
4. ஏட்டுப்புறங்கள் அடுமனையின் தரையில் அமர்ந்து முண்டன் உணவுண்டான். அப்போதுதான் உலையிலிருந்து இறக்கிய புல்லரிசிச்சோற்றை அவன் முன் இலையில் கொட்டி புளிக்காயிட்டு செய்த கீரைக்குழம்பை அதன்மேல் திரௌபதி ஊற்றினாள். அவன் அள்ளுவதைக்கண்டு “மெல்ல, சூடாக இருக்கிறது” என்றாள். “உள்ளே அதைவிடப் பெரிய அனல் எரிகிறது, அரசி” என்றான் முண்டன். “சிற்றனலை நீர் அணைக்கும். காட்டனலை காட்டனலே அணைக்குமென்று கண்டிருப்பீர்கள்.” அவன் பெரிய கவளங்களாக உருட்டி உண்பதைக்கண்டு “உன் உடல் இப்படி கொழுப்பது ஏன் எனத் தெரிகிறது” என்றாள். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94988