Daily Archive: January 28, 2017

நஞ்சு கசப்பு சிரிப்பு – வா.மு.கோமுவின் கதைகள்




பத்தாண்டுகளுக்கு முன்பு வாமுகோமு விஜயமங்கலத்திலிருந்து வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரு சிற்றிதழைக் குறித்து சில வரிகளில் நான் ஒரு மதிப்புரை எழுதியிருந்தேன். இலக்கியத்தை ஒரு அவச்சுவை விளையாட்டாக ஆக்கும் முயற்சி அவ்வெழுத்துகளில் இருப்பதாக. ஆனால் அவ்வப்போது அசலான நகைச்சுவை உணர்ச்சி அவற்றில் வெளிப்படுவதாகவும் கூறியிருந்தேன். குறிப்பாக அவ்விதழில் “அன்புள்ள கதலா…” என்று ஆரம்பித்து எழுதப்பட்டிருந்த ஒரு படிக்காத கிராமத்துப் பெண்ணின் காதல் கடிதம் போன்ற கவிதை சுவாரசியமாக இருந்தது. தமிழின் இரண்டு முதன்மையான இலக்கியப்போக்குகளுக்கும் வெளியே சில எழுத்துமுறைகள் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94848

காடு – பிரசன்னா




  நாவலைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டுவிட்டதால் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ஒரு இழையை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன் – சடுதியில் முடிந்துவிடும் வாழ்க்கை, அதன் நிலையாமை, உண்மையில் இந்த அம்சத்தை இப்பொதெல்லாம் நான் காணும், படிக்கும் அத்தனை விஷயங்களிலும் பாம்புத்தொடுகை போல் உடனே பிடித்துவிடுகிறேன் அல்லது அதை மட்டும் அதீதமாக கவனிக்கிறேன்.   ‘அவ்வளவேதானா இளமை?’ என்பது போல் அவ்வளவேதானா வாழ்க்கை என்று ஒவ்வொரு தினமும் தவிப்படைகிறேன். அப்படி கேட்டுக்கொள்ளாதவர்கள் யார் என கதையில் வருகிறது. இருந்தாலும் முப்பது …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94788