Daily Archive: January 11, 2017

திருக்குறள் உரையாற்றுகிறேன், கோவையில்




    வரும் 14,15, 16 தேதிகளில் நான் கோவையில் திருக்குறள் பற்றிப் பேசுகிறேன். மூன்றுநாட்கள் வரிசையாக மூன்று உரைகள். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பாக. திருக்குறள் பற்றிய உரைகளைப் பார்க்கும்போது வியப்பூட்டும் ஒன்று தோன்றியது, அது ஓர் இலக்கியநூல். ஆனால் புதியகாலகட்டத்தில் இலக்கியவாதிகள் மிகக்குறைவாகவே அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதை ஒரு பண்பாட்டு அடையாளமாக ஆக்கிக்கொண்டமையால் அறிஞர்கள், ஆய்வாளர்கள் அதைப்பற்றி பேசியிருக்கிறார்கள். அரசியலாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப பேசிப்பேசி மேற்கொண்டு எவரும் அதைப்பற்றிப் பேசாமலாக்கிவிட்டிருக்கிறார்கள் இலக்கியவாதியாக குறளைப்பற்றிப் பேசலாமென நினைக்கிறேன். …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94401

அராத்து கேள்விகள்…




அன்புள்ள ஜெயமோகன் என் புத்தக வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வதற்கு நான் என்னென்னமோ பிரயத்தனம் செய்ததாக பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முன்பின் அறிமுகம் இல்லாத நான் ஒரே ஒரு இரண்டு வரி மெயில் மூலம் அழைத்து உங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன் என்றால் யாருக்கும் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.என்ன செய்வது? எல்லாவற்றையும் கடினமாக்கியே பழக்கப் படுத்திக்கொண்டனர். நீங்கள் உறுதிப்படுத்திய பின்புதான் சாருவிடமே சொன்னேன். 6 பிரபலங்களை அழைத்து என்னுடைய 6 புத்தகங்களைப் பற்றி பேச விட்டு அகமகிழ்வதை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94388

விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்- முழுத்தொகுப்பு




அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். இந்த காணொளியில் விஷ்ணுபுரம் விருது நிகழ்வில் நீங்கள் (அரங்கா) உட்பட மற்ற விஷ்ணுபுரம் நண்பர்கள் பேசியது முழுவதுமாக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான விருந்தினர்களின் உரையிலிருந்து சில பகுதிகளை மட்டும் இணைத்துள்ளோம். எச். எஸ். சிவப்பிரகாஷ் பேசும் போது ஏற்பட்ட ஆடியோ கோளாறுகள் சரி செய்யப்பட்டு இந்த தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் விஷ்ணுபுரம் விருது 2016 – சிறப்பு தொகுப்பு Vishnupuram Award 2016 – Highlights https://www.youtube.com/watch?v=rR-HyMwAV1o நன்றி கபிலன் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94378

சென்னை கொண்டான்




  உண்மையில் இந்தப் புத்தகக் கண்காட்சி பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலருக்குமே ஓர் அற்புத தருணம்தான். ஆனால் கண்காட்சியை ஒருங்கிணைக்கும் பபாஸி குறைந்த பட்சம் மூன்று விடயங்களில் கவனம் செலுத்தினால் அனைத்துத்தரப்பினருக்குமே பெரும் பலனைக்கொடுக்கும். 1.நூலை சுமந்து செல்ல சிறிய வண்டிகள். பேரங்காடிகளில் வழங்கப்படும் இதுபோன்ற வண்டிகளை குறைந்த வாடகைக்கேனும் தயார்    செய்தால் அதிக புத்தகங்களை வாங்குபவர்கள் நூல்களைச் சுமந்துசெல்வதில் சிக்கலை எதிர்நோக்க மாட்டார்கள். மேலும் அதிக நூல்களை வாங்கவும் வாய்ப்புண்டு. 2.வாங்கிய நூல்களின் கனத்தை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94383