Daily Archive: January 10, 2017

முக்குடையும் பீலியும்




  2007ல் கிருஷ்ணன் உள்ளிட்ட ஈரோட்டு நண்பர்கள் அறிமுகமானபோது ஆண்டுக்கு இருமுறை ஈரோடு செல்லும் வழக்கமிருந்தது. அப்போது ஒருமுறை நண்பர்களுடன் இருசக்கரவண்டிகளில் விஜயமங்கலம், அரச்சலூர் உள்ளிட்ட சமணத்தலங்களுக்குச் சென்றிருந்தோம். இப்பகுதிகளில் எஞ்சியிருக்கும் ஓரிரு சமணர்களும் இந்துமதத்திற்கு மாறிவிட ஆலயங்கள் பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன. சில கோயில்களில் சமணதெய்வங்களுக்கு உள்ளூர் இந்துதெய்வங்களின் பெயர்களைச் சூட்டி வழிபடுவதும் நிகழ்கிறது அன்று சமணம் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். சமணத்தின் மையக்கொடை என்பது இந்தியா முழுக்க வணிகப்பாதைகளை உருவாக்கி ஒரு மாபெரும் குருதியோட்டத்தை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94235

பணமில்லா பொருளியல் -எதிர்வினைகள்




  அன்பின் ஜெ..   முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் தாள் பணம் இல்லாப் பொருளியலுக்கு எதிரானவன் இல்லை. இணையப் பொருளாதாரப் பரிவர்த்தனையின் பெரும் நுகர்வோன்.  மாதந்தோறும் தான்ஸானியாவில் இருந்து சென்னைக்குப் பணம் அனுபுவதில் துவங்கி, எனது இந்திய மொபைல்  எண்ணுக்கான பில், ரயில், விமான டிக்கட்டுகள், என மகனுக்கு சில சமயம் ஃபிளிப் கார்ட்டில் பணம் கட்டுவது வரை செய்கிறேன்.  என் போன்ற சந்தைப் பொருளாதார நெடுஞ்சாலையில் பயணிப்பவர்க்கு, இது பெரும் வசதி. …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94211

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83




[ 39 ] வேங்கடத்திற்கு வழிபடுநடை செல்லும் விண்ணடியார் எழுப்பிய இசை முதலில் தொலைவில் ஏதோ சிற்றூர் இருப்பதைப்போல எண்ணச் செய்தது. பின்னர் காற்றில் அது வலுத்து செவிதொட்டு அகன்றது. “அங்கு ஓர் ஆலயம் உள்ளது” என்றான் உக்ரன். அருகே புதர்களுக்கு அப்பால் அவர்களின் இசை எழுந்ததுமே சண்டன் “விண்ணிறைவழியினர்” என்றான். “யார் அவர்கள்?” என்றான் வைசம்பாயனன். “இசைச்சூதர்கள் போலிருக்கிறார்கள்” என்றான் சுமந்து. ஜைமினியின் தோளில் இருந்த உக்ரன் “பாடி ஆடுகிறார்கள். பாட்டில் ஒலியிலேயே ஆட்டத்தின் அலை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94366