Daily Archive: January 8, 2017

அராத்து விழா உரை- வீடியோ







Permanent link to this article: http://www.jeyamohan.in/94348

அராத்து விழா -கடிதம்




அன்புள்ள ஜெமோ விஷ்ணுபுர விருது விழா , வெண்முரசு விவாதம் போன்ற உங்கள் வாசகர்கள் கூடுகின்ற கூட்டங்களில் உங்கள் உரை எவ்வளவு சிறப்பாக இருக்குமோ அதே போன்ற சிறப்பான உரை ஒன்றை அராத்துவின் 6 நூல்கள் வெளியீட்டு விழாவில் வழங்கினீர்கள். நன்றி… சற்றே எதிர் கருத்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றுவதே ஒரு சவாலான பணி.. அதுவும் எதிர்கருத்து கூறுவது என்பது மிக மிக சவாலானது.. ஆயினும் மிக ஆழமான அற்புதமாக உரை வழங்கி கூட்டத்தை உங்கள் நாவன்மையால் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94341

மாக்காயீக்கா மாண்புகள்




  முப்பதாண்டுகளுக்கும் மேலாக மகஇக போன்ற அமைப்புக்களிலிருந்து விலகியவர்கள் வந்து கண்ணீருடன் புலம்புவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எல்லாக் குறுங்குழுக்களுக்கும் இருவகைப் பண்புகள் இருக்கும். ஒன்று அது சிறியது என்பதனாலேயே எந்த விதமான நீக்குபோக்கும் இல்லாத மட்டையடித் தீவிரம் ஒன்று இருக்கும். ஆகவேதான் இளைஞர்கள் அது ‘நேர்மையான’ அமைப்பு என நம்பத்தலைப்படுகிறார்கள். அவர்களுக்கு நேர்மையான அமைப்பாகத் தோற்றமளிப்பது தவிர வேறு பணிகளும் இல்லை என்பதனால் வண்டை வண்டையாக வசைபாடுவதை முழுநேரமும் செய்துவருவார்கள். அது ஒருவகையான விறுவிறுப்பை சின்னப்பயல்களுக்கு அளிக்கிறது   …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94157

தாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்




அன்பு ஜெ ,  தாளில்லா பொருளியல் பாலா தாளில்லா பொருளியல் கடிதங்கள் -அரங்கா     தாளில்லா பொருளாதார குறித்து வந்த கடிதங்களை பார்த்தேன்.எந்த மாற்றதையும் அது அளிக்கும் வசதி மற்றும் அதனால் வரப்போகும் நன்மைகளை மட்டுமே வைத்து எடைபோட்டுவிடலாகாது .  மோடி அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் பீம் செயலி , பெயரிலிருந்து அது எப்படி செயல்படும் என்பது வ்ரை எல்லாம் சரிதான் . ஆனால் இது குறித்த முக்கிய இரண்டு விஷயங்களையும் நாம் கணக்கில் கொண்டே அது …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94188

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 81




[ 35 ] அர்ஜுனன் கைலையின் மண்ணில் எடுத்த அந்தக் கூழாங்கல்லை நோக்கிக்கொண்டிருந்தான். அதன் பொருளென்ன என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் அதை கேலிக்கென சொல்லவில்லை என்பதை அவர்களின் முகக்குறி காட்டியது. கொம்பன் அவனிடம் “நீங்கள் அடுகலை கற்றவரா?” என்றான். “உங்கள் அடுமுறை நானறியாதது” என்றான் அர்ஜுனன். “எதுவானாலும் அடுமுறை நன்றே. அட்ட உணவு அமுது” என்றான் கொம்பன். அர்ஜுனன் “அடாத உணவு?” என்றான். அவன் சற்று எண்ணிநோக்கி “அதுவும் அமுதே” என்றான். எண்ணியிரா கணத்தில் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94318