Daily Archive: January 7, 2017

அபிப்பிராயசிந்தாமணி




    அபத்தப்பகடி எழுதுவது மிக எளிது, நம் அபிப்பிராயங்களைச் சொன்னாலே போதும். இவை அவைதான். சென்ற காலங்களில் ரத்தம் கக்கி பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். சொல்லி முடித்ததுமே ‘ரெம்ப ஓவராப்போயிடுச்சோ’ என்னும் சந்தேகம் வந்துவிடும். உடனே ஒரு பகடிக்கட்டுரையை எழுதுவேன். அது இந்தப்பக்கமாக ஓவராகப்போய்விடும். அடுத்து அந்தப்பக்கமாக ஓவராகப்போவதற்கான விசையை இது அளிக்கும். இப்படியாக எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. நானெல்லாம் எழுத வந்தகாலகட்டத்தில் பெருமூச்சுவாதம் என்னும் இலக்கிய அழகியல் பிரபலமாக இருந்தது.. என்னத்தச்சொல்ல என்னும் பாவனையில்தான் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/93741

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 21 -ராஜா




  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களை பற்றியும் உங்கள் படைப்புகள் பற்றியும் நன்கறிந்தாலும் உங்கள் இணையதளத்துக்குள் மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துக்குள் நான் சமீபத்தில்தான் நுழைந்தேன். விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ் கண்டு ஒரு வித தயக்கத்துடன்தான் கோவை வந்தேன். வந்தவுடன்தான் அறிந்தேன் ‘சோற்றுக்கடன்’ என்பது ஒரு சிறுகதை மட்டுமல்ல என்று. கெத்தேல் சாஹிப் உயிருடன்தான் இருக்கிறார் என்று. பசிக்கு மட்டுமல்ல, செவிக்கும், சிந்தைக்கும், வயிற்றுக்கும் விஷ்ணுபுரம் வட்டம் கெத்தேல் சாஹிப் கரம் போன்று உணவை அள்ளி …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94194

என் கல்யாண்ஜி




வணக்கம். வண்ணதாசன் ஆவணப்படத்தின் இரண்டு இடங்களில் அழகான சில கணங்கள் வருகின்றன. அவற்றைத் திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவற்றை GIF படங்களாக இணைத்துள்ளேன். சன் கீர்த்திக்கு என் எல்லையில்லா அன்பும் நன்றியும். நன்றி. வே. ஸ்ரீநிவாச கோபாலன்    




Permanent link to this article: http://www.jeyamohan.in/94147

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 80




[ 33 ] காளி தான் சேர்த்துவைத்திருந்த கிழங்குகள் கொண்ட கூடையை எடுத்துக்கொண்டாள். அர்ஜுனனுக்கு இன்சுவைக் கிழங்குகளை அளித்தாள். அவன் அவற்றை உண்டதும் மலைத்தேன் குடுவையை அளித்தாள். சுனைநீருண்டதும் அவன் உடலாற்றல் மீண்டான். அவன் உடலில் இருந்த அம்புகளை அகற்றி பச்சிலை சாறூற்றினாள். அனலென எரிந்து குளிர்ந்தணைந்தபோது புண் மூடிக்கொண்டுவிட்டதை அவன் அறிந்தான். நடந்தபோது வலியிருக்கவில்லை. வெந்நீர் ஓடிய சிற்றோடைகளையும் விழுந்து கிடந்த பெருமரங்களையும் கடந்து அவர்கள் சென்றனர். அவர்களுடன் செல்கையில் அந்தச் சிறுகாடு அவன் அப்போதுவரை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94305