Daily Archive: January 6, 2017

லண்டன் பிரபு,சு.வேணுகோபால்,ஒரு போட்டி




புத்தாண்டுக் குறிப்பில் லண்டன் பயணம் குறித்த நினைவுகளில் நான் லண்டன் பிரபுவை விட்டுவிட்டேன் என நண்பர் ஒருவர் கூப்பிட்டுச் சொன்னார். சொரேர் என்று உறைத்தது. அது ஏன் என்று நானே மண்டையைத் தட்டிக்கொண்டேன். பிரச்சினை இதுதான். ஒருவரை முதலில் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் ஆழ்மனம் பதிவுசெய்துகொள்கிறது. லண்டன் பிரபு ஊட்டி சந்திப்புகளுக்கு வந்து அறிமுகமானவர். அந்நினைவுடன் கலந்தே அவர் முகம் இருப்பதனால் லண்டனுடன் அவர் தொடர்பு படவே இலை. இது ஏன் என்பதை எவ்வளவு மண்டையை குடைந்தும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94249

குகாவை ‘மொழிங்கடித்தல்’




  இனிய ஜெயம்,   ராமச்சந்திர குகா அவர்களின் “சுற்று சூழலியல் ஒரு உலகம்  தழுவிய வரலாறு” நூலை திரு பொன் சின்னத்தம்பி முருகேசன் மொழி ” பெயர்த்து” இருக்கிறார்.   இப்படி.—-     நானும் காலையில் இருந்து தமிழில் இதை எப்பாடு பட்டேனும் மறு மொழி பெயர்த்து  விளங்கிக் கொள்ள முயல்கிறேன்.   முடிந்தால் உதவவும். கடலூர் சீனு அன்புள்ள சீனு,   தப்புசெய்துவிட்டீர்கள், சீனு தப்பு செய்துவிட்டீர்கள்   இதை தமிழாக்கம் செய்யக்கூடாது …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94219

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79




[ 32 ] வானில் எழுந்த கருமுகில் திரளிலிருந்து இடியோசையுடன் மின்னலொன்று இறங்கி அர்ஜுனனை தாக்கியது. விண்யானையின் துதிக்கையால் தூக்கி வீசப்பட்டு அவன் சென்று மல்லாந்து விழுந்தான். அவன் முடியும் தாடியும் பொசுங்கிய  எரிமயிர் மணம் மூக்கை நிறைத்தது. கண்களுக்குள் அவன் ஆழ்ந்திருந்த ‘பணிக சிவம்’ என்னும் நுண்சொல் ஒளியலையாக கொந்தளித்தது. அவன் பற்கள் கிட்டித்திருந்தன. அவை உரசும் ஒலியை காதுகள் கேட்டன. அத்தனை தசைகளும் இழுபட்டு இறுக இழுத்து வளைக்கப்பட்ட முற்றிய மூங்கில்வில்லென கிடந்து துள்ளியது …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/94294