Daily Archive: January 5, 2017

சென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து
சென்னையில் 7 ஆம்தேதி மாலை நானும் சாரு நிவேதிதாவும் மனுஷ்யபுத்திரனும் அராத்துவும் ஆறு நூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசுகிறோம். அனைவரும் வருக.  மூன்று பேரையும் ஃ என்று சொல்லலாம் என தோன்றுகிறது என்றார் ஒரு நண்பர். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!  
Permanent link to this article: http://www.jeyamohan.in/94288

இரும்புத்தெய்வத்திற்கு ஒரு பலி
  தல்ஸ்தோயின் பெரும்நாவல்களில் ‘அன்னா கரீனினா’ மட்டுமே வடிவநேர்த்தி கொண்ட படைப்பு என்று ஒரு பேச்சு உண்டு. அவரது கடைசிநாவலான புத்துயிர்ப்பு ஒரு வகையான சென்று தேய்ந்திறுதல் கொண்டது. ‘போரும் அமைதியும்’ வடிவமற்ற வடிவம் கொண்டது. ஹென்றி ஜேம்ஸ் அதை ஒரு மாபெரும் கதைமூட்டை என்று சொன்னார். ‘கொஸாக்குகள்’ போன்ற ஆரம்பகால நாவல்கள் நாவலுக்கான முயற்சிகளே. அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/6217

அன்னா கரீனினா -கடிதம்
  ஜெ, எல்லோரையும்போல பள்ளிக்கூட பாடபுத்தகங்களில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பட்டியலில்தான் முதன்முதலாய் லியோ டால்ஸ்டாய் அவர்களின் பெயரை நானும் மனப்பாடம் செய்திருக்கிறேன். அப்போதிலிருந்தே அவரின் பெயரை எனக்கு பிடிக்கும். பெயரிலேயே ஒருவித ஈர்ப்பு எனக்கு. கல்லூரியிலேயும் அவரின் பெயரை நினைவுபடுத்தினார்கள். ஆனால் அவர் என்ன அப்படி எழுதி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார் என எண்ணி வியப்பதோடு என் தேடலும் ஆராய்ச்சியும் நின்றுவிட்டது. ஒருவேளை பாடபுத்தகங்களைப் படிக்காமல் கதைபுத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தால் மார்க் குறைந்துவிடும் என்ற பயம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94095

விவேக் ஷான்பேக்- மீண்டும் ஒரு கடிதம்
  அன்புள்ள ஜெயமோகன், விவேக் ஷன்பேக் மொழியாக்கம் பற்றி விவேக் ஷன்பேக் ஒரு கடிதம் என் எழுத்து ஏதோ ஒரு வடிவத்தில் உங்கள் வலைத்தளத்தில், 50000+ வாசகர்களின் பார்வை பட! நள்ளிரவில்  இவ்வூரின் மெல்லிய குளிரில் அதை பார்த்து படித்தபோது எழுந்த பரவசமும் புல்லரிப்பும் இன்னும் நீங்கவில்லை. வேறொருவர் எழுதியது போல முற்றும் வாசித்தேன். மீண்டும் வாசித்தேன்.   இந்த சில வரிகளாவது எழுதும் அளவிற்கான ஊக்கம் பெருமளவிற்கு 2 1/2 ஆண்டுகளாக உங்கள் வலைத்தளம், நூல்கள், ‘நவீனத் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94258

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78
[ 30 ] மலையில் நின்றது தனிமரம். காய்ந்த மலர்களும் சருகுகளும் உதிர்ந்து அதன் காலடியை மூடின. எடையிழந்து எழுந்தாடி காற்றைத் துழாவின கிளைகள். பின்னர் மலர்களையும் கனிகளையும் உதிர்த்து தனக்கே அடிபூசனை செய்தன. பின்னர் இலைகளையும் காய்களையும் உதிர்க்கத்தொடங்கியது மரம். மெல்ல பிஞ்சுகளும் தளிர்களும் உதிரலாயின. இறுதியில் வெறுமையை சூடிநின்ற கிளைகள் உதிர்ந்தபின்  அடிமரம் வேர்மேல் உதிர்ந்தது. வேர் மண்ணில் பிடிவிட்டது. ஆணிவேரின் குவைக்குள் ஓர் உயிர்த்துளி மட்டும் அனன்றது. புவியை உண்டு முன்னகர்ந்தது மண்புழு. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94263