தினசரி தொகுப்புகள்: October 23, 2016

இலக்கியத்தின் தரமும் தேடலும்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். அண்மையில் எழுந்த சர்ச்சைகள் குறித்து எனக்கு சில கேள்விகள். இலக்கியம் என்பதன் வரையறை எது? எது சரியான இலக்கியம் என்று புதிய வாசகர்கள் எப்படி அறிவது? இன்றைய இணைய காலகட்டத்தில்...

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 8

  உயர்திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். விஷ்ணுபுரம் விருது குறித்து அறிந்தேன். கல்யாண்ஜியோ, வண்ணதாசனோ, அவரின் இலக்கியம் மிக மென்மையானது. வெற்றிலையை மெத்தென்ற தொடையில் வைத்து நீவி நீவி அடியையும் நுனியையும் வலிக்காமல் கிள்ளி, களிப்பாக்கை அதோடு...

காந்தி -கடிதங்கள்

வணக்கம். நல்லாருக்கீங்களா?  சிங்கப்பூர் படைப்புகளின் விமர்சனங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நான் இப்போது பெங்களூரில் இருக்கிறேன்.  முன்பு சென்னையில் இருந்தபோது பனுவலுக்கு நீங்கள் வந்தபோது, என் தேவையில்லாத சிந்தையால் உங்கள் பேச்சைக் கேட்பதைத் தவறவிட்டுவிட்டேன்.  இப்போதும் வாய்ப்பின்மையால்...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4

அத்ரி முனிவரின் சௌகந்திகக் காட்டின் அழகிய காலையொன்றில் தொலைவில் மரம்செறிந்த காட்டுக்குள் ஒரு கங்காளத்தின் ஒலி கேட்கத் தொடங்கியது. அப்போது அங்கு வைதிகர் நீராடி எழுந்து புலரிக்கு நீரளித்து வணங்கிக்கொண்டிருந்தனர். பெண்டிர் அவர்களுக்கான...