2016 May

மாதாந்திர தொகுப்புகள்: May 2016

இறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி

திருவண்ணாமலையிலிருந்து மழித்த தலையுடனும் காவி ஆடைகளுடனும் துறவிக் கோலத்தில் திரும்பிய பின் எனது புதிய பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. என்னைச் சுற்றியும் அதே பழைய உலகம்தான். ஆனால் என் மனதுக்குள் ஏதோ...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 67

துரியோதனன் கர்ணனுடன் தனியாக வருவதை படகில் ஏறியபின்னரே  விதுரர் அறிந்தார். பறவைச்செய்திகள் வழியாக ஒற்றர்களுக்கு செய்தி அறிவித்து இருவரும் வரும் பாதையை கண்காணிக்க வைத்தார். புறாக்கள் படகிலேயே திரும்பி வந்து அவர்களின் பயணத்தை...

ஆற்றூர்

  சுந்தர ராமசாமியின் வீட்டிற்குச் சென்றபோது ராமசாமி ஒரு சிறு பரவசநிலையில் இருந்தார். ''என்ன சார்?'' என்றேன். ''ஆற்றூர் ரவி வர்மா வந்திருக்கார்...''என்று சொன்னார். அவரது 'ஜே.ஜே.சிலகுறிப்புக'ளை மலையாளத்துக்கு மொழியாக்கம்செய்ய ஆற்றூர் முனைந்திருப்பதைப்பற்றி நான்...

வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 66

துரியோதனனின் புரவி யமுனையை அடைந்ததும் நில்லாமல் பக்கவாட்டில் நீர்ப்பெருக்குக்கு இணையாகச் சென்ற பெருஞ்சாலையில் திரும்பி அங்கு கரைமுட்டி பெருகிச் சென்றுகொண்டிருந்த மக்கள்திரளில் மறைந்ததும் கர்ணன் தன் புரவியின் சேணத்தின்மேல் காலூன்றி எழுந்து தொலைவில்...

யதா யதாய

''மச்சினா, அம்பதாயிரம் ரூவா அட்வான்ஸ் வெங்கிப்போட்டு திண்ணவேலி சங்சனிலே வெத்திலப்பேட்ட சுப்பையாவை போட்டுத்தள்ளப்போன நம்ம 'கோழி' அர்ச்சுனனும் ஒப்பரம் போன 'உருண்டை' கிருஷ்ணனும் அங்கிண என்னதான் செய்யுகானுகோ? எளவு, நேரமாச்சுல்லா? '' என்று செல்போனில்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 65

எதிர்ப்படும் அனைத்தின் மீதும் கடும் சினத்துடன் கர்ணன் தன் அரண்மனைக்கு சென்றான். அவனால் அமரமுடியவில்லை. நிலையழிந்து சுற்றிக்கொண்டிருந்தான். ஏவலனை அனுப்பி திரிகர்த்த நாட்டு கடும் மதுவை வரவழைத்து அருந்தினான். மது உள்ளே சென்று...

துறைசார் நூல்கள்

        அன்புமிக்க திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நான் ’ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை’ நூலின் ஆசிரியன். டிசம்பர் 23, 2012ல் நீங்கள் என் நூலுக்கு உங்கள் இணையதளத்தில் எழுதிய விமர்சனத்திற்கு நான்காண்டுகளுக்குமேல் தாமதித்து நன்றி...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 64

அரசியின் அரண்மனையில் இருந்து ஏவல்பெண்டு ஒருத்தி வந்து அறைவாயிலில் நின்றாள். துச்சலன் “வருக!” என்றதும் அவள் வந்து கர்ணனை வணங்கி “தங்களை மகளிரறைக்கு வரும்படி காசிநாட்டரசி கோரியிருக்கிறார், அரசே” என்றாள். கர்ணன் எழுந்து...

பி.ராமன் கவிதைகள்

  வாசகர்கள் இல்லாத ஒரு கவிஞன் கண்ட கனவு ================================== தங்கள் மொழியை உதறிவிட்டுப்போன என் மக்களை என் கவிதையின் அடித்தளத்தில் சத்தித்தேன். உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று சீறினேன் பொருட்படுத்தாமல் சென்ற கூட்டத்தில்ருந்து ஒருவர்// அலட்சியமாகச் சொன்னார். ''நாங்கள் இப்போது சுதந்திரமானவர்கள் எல்லைகள் இல்லாதவர்கள் எங்கள் காலடிபட்டு சுயநிறைவடைந்தது உன்...

பி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்

  மொழி பெயர்ப்பு: ஜெயமோகன், நிர்மால்யா (பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. கனம் இல்லாதவற்றின் எடையெல்லாம் உள்ளவை சுமக்க வேண்டும் என்று ஓர் அறிவிப்பு இவ்வழி சென்றது அத்துடன் பகல் முதல் அந்திவரை நீண்ட இந்த இருப்பில் இல்லாத வேலையின் கனத்தை நான் அறியத் தொடங்கினேன் இல்லாத துயரத்தின் கனம் நீண்டு...