Category Archive: சிறுகதை

மத்துறு தயிர்-கடிதங்கள்

அன்பு ஆசிரியருக்கு, அறம் வரிசை கதைகள் ஒவ்வொன்றும் பல முறை படித்தாகி விட்டது. மத்துறு தயிர் ஒரு நூறு முறையாவது! (கிட்டத்தட்ட நான் அனுபவித்த வேதனை என்பதாலா என்று தெரியவில்லை) ராஜம் அண்ணாச்சி யார் என்று யூகிக்க முடியவில்லை. அந்த நாயர் பெண்ணும் யாரென்று ஒரு ஆயிரம் பேரிடமாவது வினவி இருப்பேன்! உயிர் பிரிந்தது போல ராஜம் அந்த பெண் ஊரை விட்டு சென்றதும் துடித்தது, பேராசியர் ராஜம் குறித்து பட்ட வேதனை, ராஜம் அண்ணாச்சியின் தந்தை …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/72611

நிலம் ஒரு கடிதம்

வணக்கம். இலக்கியம் மனிதனின் சளசளப்பைப் போக்கி அவனை மிகச் சிறந்த விவேகியாக்குகிறது என்ற சு.ரா. சொல்லிப் படித்திருக்கிறேன். அதை என் வாழ்க்கையின் அனுபவத்தில் நான் கண்டு வருகிறேன். நான் ஏன் இத்தனை அமைதியானவனானேன் என்று என்னையே பலமுறை கேட்டுக் கொள்ளும் அளவுக்கு என் மனம் தனிமைப்பட்டு, அமைதியின் ஆழத்தில் அமிழ்ந்து போகிறது. இப்படியான இருப்பிலேயே இலக்கியம் இன்னும் பலவற்றை எனக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டே வருகிறது. அப்படி ஒன்றைப் படித்து நான் மனமுருகிய நாள்தான் இன்று. ஏற்கனவே ஒரு …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/72036

உச்சவழு-கடிதம்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, “உச்சவழு” பலமுறை வாசித்தேன். நான் புரிந்துகொண்டவற்றை எழுதுகிறேன். மலை அடிவாரத்திலிருந்து மலைக்குச் செல்லும் வரையிலான இடைவெளியில் மரம், காடு, யானை முன்சித்திரமாகத் தீட்டப்படுகின்றன. அப்பொழுது அது சாதாரண வர்ணனையாகத் தோன்றினாலும் கதை முழுக்கப் பரவியிருக்கும் அவை உணர்த்துவது மெல்ல மெல்லப் புரிய ஆரம்பிக்கிறது. கதையின் முடிவில் ஏற்படுத்தும் அதிர்வை மீண்டும் மீண்டும் படித்து உணர்ந்து கொண்டே இருந்தேன். இருக்கிறேன். தங்குவதற்கு அனுமதி கிடைத்தபின் அவன் காட்டை நோக்கி நடக்கிறான். பங்களாவை அடைந்தவுடன் அவனுடைய மனக்குழப்பம் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/72040

ஓலைச்சிலுவை – கடிதம்

அன்பு அண்ணா நாம் இளமையில் பார்த்து வளரும் ஆளுமைகள் நம்முள் நிகழ்த்தும் பாதிப்பு அளப்பரியது. நம்மை அவர்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்கின்றோம். அவர்களாக வாழ விழைகிறோம். அவர்கள் வாழ்வின் மெய்மை நம்முள் எங்கோ படிந்து விடுகின்றது . ஆனால் அவர்களை போன்ற ஒரு புற வாழ்வை அமைத்துக் கொள்ள முடிந்த போதிலும், அகத்தே நம்மால் அவர்களை எளிதில் சென்றடைய இயல்வதில்லை . அதற்காக அவர்களை விட்டு விலகவும் முடியாது .நம் ஆன்மா விழித்தெழும் தருணம் வாய்க்கும் வரை …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/72038

உச்சவழு- கடிதம்

IMG_1118

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உச்சவழு கதையை வாசித்தேன். ஒரு மனிதனின் மரணத் தேடல் அவன் மனதை காட்டை நோக்கி ஈர்க்கிறது. இத்தனை வருடங்களாக சிந்தையைக் கவராத காடு இன்று அவனுள் உறைவதை உணர்கிறான். காட்டின் அடர்த்தியும், இருளுமே அவனுக்குப் புலப்படுகின்றன. நினைத்தாலே நெஞ்சை உலுக்கும் பெரிய கரிய உருவை எதிர்கொள்ள விழைகிறான் அதற்காக அவன் காத்திருக்கிறான் அதுவும் அவனுக்காக காத்திருப்பதாக உணர்கிறான். அதன் அருகாமையை ஏனோ அவன் மனம் நாடுகின்றது. புலப்படும் ஒவ்வொன்றும் தங்களின் பிம்பங்களை எல்லாம் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/70943

ஓருலகம்- கடலூர் சீனு

garrydavis

மழை தரும் விண் என் தந்தை, வளம் தரும் மண் என் தாய், நான் இந்த பூமியின் மைந்தன்… [பழம்பாடல் ஒன்று] இனிய ஜெயம், மிக சமீபத்தில் ஒரு சம்பவம். அவர் ஒரு சாமியார் .இல்லறத் துறவி. நான் அத்து அலைந்து கொண்டிருந்தபோது பழக்கமானவர்களில் ஒருவர். புதுவை அருகே ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அவர் அடிக்கடி ஊழ்கத்தில் ஆழ்ந்துபோவார் அந்நிலை சில சமயம் இரு நாள் கூட நீடிக்கும். பெயர் பரவி. சிறு சிவன் கோவில் ஒன்று …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/70799

துக்கத்தால் கடையப்படும் உயிர்-கடிதம்

pain

உடல் பாண்டமாக, உயிர் தயிராக, துக்கம் மத்தாக, துக்கத்தால் கடையப்படும் உயிர். இனிய ஜெயம், கடந்த இரு கடிதங்களைத் தொடர்ந்து ஏதோ ஆவல் உந்த சட்டென்று அறம் தொகுதியை எடுத்து பிரித்தேன். தோழி ரீங்காஆனந்த் நினைவு, நறுமணம் கொண்ட ஐஸ்க்ரீம் புகை போல எழுந்து வந்தது. அவர்களின் பெயர் பொறித்த புத்தக பக்க அடையாள அட்டை மத்துறு தயிர் கதையில் நின்றிருந்தது. உணர்வு நிலையில் உன்மத்தம் கூடிய, தமிழ் இலக்கியம் அதிகமும் தொடாத தளம் ஒன்றை சேர்ந்த …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/70672

ஒற்றைக்கால் தவம்

116

இனிய ஜெயம், இப்போது யோசித்துப் பார்த்தால், மயில் கழுத்து சிறுகதையும், தாயார் பாதம் சிறுகதையும் எதோ ஒரு புள்ளியில் பிரிக்க இயலாதபடி பின்னிப் பிணைந்திருப்பதாகப் படுகிறது. தாயார் பாதம் சிறுகதையில் பிறிதொரு சமயம் ராமனும்,பாலுவும் கழுகுமலை செல்லப்போவதற்கான லீட் வந்துவிடுகிறது. அனைத்துக்கும் மேல் மயில் கழுத்து கதையில் ராமன் எழுத்து மற்றும் சங்கீதத்தை ஒப்பிட்டு சங்கீதத்துக்கு கொடுக்கும் இடம்.இலக்கியத்தில் உள்ளது போல தீமையும் குப்பையும் இல்லாத அதி தூயது சங்கீதம் என்றே சொல்கிறார். அவரது இலக்கும் கூட …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/70472

எஸ்ரா அனைத்துச்சிறுகதைகளும்

s.ra 6 books Invation(1)

Permanent link to this article: http://www.jeyamohan.in/69444

யானைடாக்டர்- கடிதம்

images (1)

மென்மையான செடியின் வேர்கள் கடினமான பாறைகளின் இடுக்குகளிலும், கடினமான நிலங்களிலும், ஒளி ஊடுருவமுடியாத இடங்களிலும், மலைகளின் அடிகளிலும் நுழைந்து செல்ல முடியும். யாராலும் தடுக்க முடியாது. அன்பும் செடியின் வேரைப்போல … –தோரோ எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு யானை டாக்டர் வழியாகத்தான் நான் உங்களை வந்தடைந்தேன். அப்போது நான் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருந்தபோது ஏதோ தொடர்பில் குக்கூ இயக்கத்தை சார்ந்த முத்து எனும் நண்பர் மூலம் யானை டாக்டரை ஒரு இரவில் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/68337

Older posts «