Category Archive: இசை

சாதிமல்லி பூக்கும் மலை
  https://ecommerceherald.com/vanchesa-palan-ozhimuri/ அன்புள்ள ஜெ ஒழிமுறி வந்தபோதே இந்த தலைப்புப்பாடலைக் கேட்டேன். அன்றும் இது ஒரு முக்கியமான பாட்டாகவே தோன்றியது. ஆனால் இன்றைக்குத் தனியாக இதைக்கேட்கும்போது ஒரு பெரிய நெகிழ்ச்சி ஏற்பட்டது. குமரிமாவட்டத்தின் ஒரு multi cultural face இந்த பாடலில் அற்புதமாக வந்திருக்கிறது. முதலில் பழைய தமிழ்-மலையாள [அல்லது மலையாண்மை] மொழியில் ஒரு தோத்திரம். அது சேர் அரசனுக்குரியது. அடுத்தது நல்ல மலையாளத்தில் திருவிதாங்கூர் அரசனைப்புகழ்கிறது. அடுத்து நேரடியான அடித்தளத்தமிழ். அடுத்து கேரளத்தின் அடித்தளத்து நாட்ட்ப்புற …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87832

ரஃபி சாஹிபும் மறையும் விண்மீன்களும்
      ரஃபி  சாஹிப் என் வாழ்க்கையின் அருந்துணை. ஒருபோதும் ரஃபி என்று மட்டும் சொல்ல மனம் குவிந்ததில்லை. இன்று, வெண்முரசின் மிகக்கொடூரமான ஓர் அத்தியாயத்தை எழுதியபின் அவரது இனிய துயர் கொண்ட குரலில் ஆழ்ந்திருக்கிறேன். குறிப்பாக இந்தப்பாடல். 1956 lவெளிவந்த சந்திரகாந்தா என்னும் படம். இசை. என்.தத்தா. பாடல். சாஹிர் லுதியானவி நான் விண்மீன்களுக்காகவும் நிலவுக்காகவும் ஏங்கினேன் இரவின் இருளையன்றி எதையும் காணவில்லை காதலுடன் முயங்காத பாடல் நான் இலக்கில்லாது செல்லும் பயணி நான் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/86811

மோகனரங்கா…
சில சமயம் சில பாடல்கள் செவி நுழைந்து நாட்கணக்காக ஆட்கொண்டு விடும்.  தொடர்ந்து அப்பாடகர்கள். சமீபமாக அப்படி ஆட்கொண்ட பாடகி எம்.எல்.வசந்தகுமாரி. தொடக்கமாக அமைந்த இப்பாடலை நூறுமுறை கேட்டுவிட்டேன்  
Permanent link to this article: http://www.jeyamohan.in/85098

எம்.எஸ்.வி பாடும்போது
இளையராஜா ஒருமுறை சொன்னார், ”எத்தனை பாடல்களில் அவர் என் நெஞ்சை உருகவைத்து மெய்மறக்கச்செய்திருக்கிறார்! அவரது ஒவ்வொரு பாடலும் விலைமதிக்க முடியாத ரத்தினங்கள் அல்லவா? இசைவழியாக நான் எதையாவது அடைந்திருக்கிறேன் என்றால் அதை நான் எம் எஸ் வியின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன் ஷாஜி எழுதி [நான் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து உயிர்மையில் முன்பு வெளியான ] கட்டுரை
Permanent link to this article: http://www.jeyamohan.in/77336

எம்.எஸ்.வி பற்றி சுகா
எம்.எஸ்.விஸ்வநாதன் மேல் எனக்கிருக்கும் தனிப்பட்ட ஈர்ப்புக்குக் காரணம், அவரது குரல். விஸ்வநாதனின் குரல் என் மனதுக்கு அளித்த சுகத்தை, வேறெந்த பாடகரின் குரலும் தரவில்லை. தேர்ந்த பாடக, பாடகிகளுடன் விஸ்வநாதன் இணைந்து பாடும் போது கூட, என்னால் விஸ்வநாதனின் குரலையே அதிகம் ரசிக்க முடிகிறது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தின் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடலில் ஜானகியை விடவும், ‘முத்தான முத்தல்லவோ’ படத்தின் ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ பாடலில் பாலசுப்பிரமணியத்தை விடவும் விஸ்வநாதனின் குரலே ஆத்மார்த்தமாக மனதை வருடுகிறது. சுகா …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/77329

இளையராஜா, எம்.எஸ்.வி, ஞாநி
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இளையராஜா நடத்தும் இசைநிகழ்ச்சி சார்பாக ஞாநி சங்கரன் எழுதிய குறிப்பை பிறிதொரு தருணத்தில் என்றால் கீழ்மையின் உச்சம் என்றே சொல்வேன். ராஜா எம்.எஸ்.வியின் இறப்பு உருவாக்கிய அனுதாபத்தை வைத்து பணம் சம்பாதிக்க முனைகிறார் என்றும் அது கிரிமினல் நடவடிக்கை என்றும் ஞாநி எழுதியிருக்கிறார். ராஜாவின் நிகழ்ச்சி மூலம் பெறப்படும் பணம் எம்.எஸ்.வி பேரால் ஒரு டிரஸ்ட் அமைக்க செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அச்செய்தியை அறிந்தும் பொருட்படுத்தாமல் ஞாநி இதை வன்மத்துடன் எழுதுகிறார். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/77246

எம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி
அன்பு ஜெயமோகன் கனடா, அமேரிக்கப் பயணம் சிறப்பு என நம்புகிறேன். அருண்மொழியும் குழந்தைகளும் நலம் தானே? எம் எஸ் வி யைப் பற்றி நான் மலையாளத்தில் எழுதிய விரிவான கட்டுரை (மலையாளம் வாரிக ஓணப்பதிப்பு 2014) நீங்கள் படித்திருக்கவில்லை என்று தெரியும். அவரது மலையாளப் பாடல்களைப் பற்றியான விரிவான பார்வை இதில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். சுட்டி இங்கே. http://epaper.malayalamvaarika.com/336496/Malayalam-Vaarika/05092014#page/98/1 வாய்பு கிடைத்தால் படித்து கருத்தை சொல்லுங்கள். ஷாஜி அன்புள்ள ஷாஜி வேறொருவர் இணைப்பை அளித்து இந்தக்கட்டுரையை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/77072

எம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்
விஸ்வநாதன்- ராமமூரத்தியின் இசையில் அறுபதுகளில் வெளிவந்த பாடல்களுக்கு எந்தவொரு புதிய பாராட்டும் தேவையில்லை. அவை அவற்றுக்கான உயரங்களுக்குச் சென்று அமர்ந்துவிட்டவை. ஆனால் எழுபதுகளில் எம்எஸ்வி இசையில் வெளிவந்த பாடல்கள் அவற்றுக்குரிய இடத்தை இன்னும் பெறவில்லை என்றுதான் எண்ணுகிறேன். – See more at: http://solvanam.com/?p=41097#sthash.hF7Kv5l6.dpuf
Permanent link to this article: http://www.jeyamohan.in/76989

அஞ்சலி – எம்.எஸ்.வி
எம்.எஸ்.விஸ்வநாதனை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன். முதல்முறையாகச் சந்தித்தது ஷாஜியின் நூல் வெளியீட்டுவிழாவில். ஷாஜி அவருக்கு நெருக்கமானவர். மீண்டும் சந்தித்தபோது அவருக்கு அந்நிகழ்ச்சி  நினைவில் இருக்கவில்லை. ஷாஜியையே நினைவிருக்கவில்லை. பொதுவாக அவரது இசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவரது பெரும்பாலான பாடல்களை அவர் நினைவில் வைத்திருக்கவில்லை. முதுமை என்பதை விட மேலாக அவரது இயல்பு அது என்று தெரிந்தது. மிதந்து சென்றுகொண்டிருந்தார். அந்த அலையெல்லாம் இசை. நான் நினைவறிந்த நாள்முதல் எம்.எஸ்.வி இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்றும்கூட கேட்டேன். ஒவ்வொருநாளும் அவரது …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/76968

தேவகாந்தாரி
அன்பு ஜெயமோகன், எப்படி இருக்கீங்க? ‘ஏறும் இறையும்’ என்கிற சிறுகதையை வாசித்தேன். என் போன்ற சங்கீதப் பைத்தியத்துக்கு இது போன்ற கதை எவ்வளவு உவப்பாய் இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. கதை சதாசிவத்தின் மன நிலையில் சொல்வது போல் கோயிலில் சிவனும் கணங்களும் உலா வரும் விவரிப்பை கூட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஏறு என்றால் என்ன? சிங்கமா அல்லது மாடா? தேவகாந்தாரியைப் பற்றி எழுதி விட்டு மைசூர் ராஜா ஐயங்காரைக் கேட்காமல் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/76354

Older posts «