Category Archive: விமர்சனம்

எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்
  1921இல் சென்னையில் பின்னி ஆலை வேலை நிறுத்தம் நடந்தது. இந்தியத் தொழிற்சங்க வரலாற்றிலேயே முக்கியமான போராட்டம் இது. திரு. வி.க. இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். தொழிற்சங்க முன்னோடியான வாடியாவின் பங்களிப்பு இதில் இருந்தது. எம்.சி.ராஜா இந்தியாவில் தொழிற்சங்கப் போராட்டங்கள் அப்போதுதான் ஆரம்பித்திருந்தன. தொழிற்சங்க இயக்கமே குழந்தை நிலையில்தான் இருந்தது. மும்பை, கல்கத்தா, சென்னை போன்ற ஊர்களில் உள்ள ஆலை ஊழியர் நடுவேதான் அது அரும்பியிருந்தது.   இந்தியத் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் அதற்கே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/5516

கார்ல் சகன், ‘தொடர்பு’
முடிவின்மையின் தொடர்பு ‘எல்லி அரோவே’ யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான தேடலை அறிவியலாளரான அவள் தந்தை கணிதத்தையும் அறவியலையும் நோக்கித் திருப்பினார். தந்தையுடன் அவளுக்கிருந்த உணர்வுப்பூர்வமான நுட்பமான உறவு அந்த தேடல் வலுப்பெற்று அதை மட்டுமே மையமானதாகக் கொண்டு அவளது ஆளுமை உருவாகக் காரணமாக அமைந்தது. இளமையின் சபலங்களுக்கோ உலகியல் ஆர்வங்களுக்கோ அவள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/5655

அசோகமித்திரனின் காந்தி
அன்புள்ள ஜெயமோகன், அசோகமித்திரனின் ‘காந்தி’ கதையை பல்வேறு இடைவெளிகளில் பலமுறை வாசித்திருக்கிறேன். இருந்தும் கதை பிடிபடாமலே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதத்தில் ஒரு நாள் இந்தக் கதையைப் படித்தபோது கதை ‘பிடிபட்டு விட்டது’ என்றே தோன்றியது. அதைப் பற்றி எழுத ஆரம்பித்தபோது எழுதவே முடியவில்லை. ‘சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று விட்டுவிட்டேன். ஆனால் அந்தக் கதை ஆழ் மனதில் வீற்றிருந்து உறுத்திக்கொண்டே இருந்தது. சென்ற மாதத்தில் ஒரு நாள் ‘எப்படியோ’ அதைப் பற்றி எழுதிவிட்டேன். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/80147

அசோகமித்திரனின் ’இன்று’
ஜெ, அசோகமித்திரனின் “இன்று” படித்தேன். அசோகமித்திரனுக்கே உரிய மனிதர்கள், தீவிரமாக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு இன்று கால் வலியை பற்றி பேசிக் கொண்டிருப்பவர், சுதந்திர போரட்ட வீரர்களின் ஒய்வில்லத்தை குடிக்கவும் பெண்களோடு இருக்கவும் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள், மூன்று குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட, வேலைக்கும் தினசரி சிக்கல்களுக்கும் நடுவே தடுமாறி குழந்தையின் ஒரு காலை இழக்கும் மனிதன், சாகும்பொழுதும் கொசுவத்தை இழுத்து முன்னால் விட்டு இறுக்கிக் கொள்ளும் பெண், அவள் கூட எல்லோரும் அவளை விபச்சாரி என்று அழைக்கும்படியான …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/79648

விஷ்ணுபுரம் முன்னுரை பற்றி
விஷ்ணுபுரம் நாவலின் முன்னுரை பற்றி கேசவமணி எழுதிய குறிப்பு
Permanent link to this article: http://www.jeyamohan.in/79365

சேலம் பகடால நரசிம்மலு நாயுடு
சுந்தரராமசாமியின் நூலகத்தில் இருந்து சேலம் பகடால நரசிம்மலு நாயிடு எழுதிய’ தென்னாட்டு யாத்திரை என்ற நூலை வாசித்தேன். கன்யாகுமரிக்குச் செல்லவேண்டுமென்றால் நாகர்கோயிலில் இருந்து நடந்து அல்லது மாட்டுவண்டியில்தான் செல்லவேண்டும் என்றும் , அங்கே சில அர்ச்சகர் வீடுகள் மட்டுமே உள்ளன என்றும், அங்கே அரிசி கொடுத்தால் சமைக்க பாத்திரங்களும் தண்ணீரும் கொடுபபர்கள் என்றும் வாசித்தபோது அதிர்ந்து வருடத்தை பார்த்தேன். 1908 ல் வெளிவந்த நூல் அது. மணல்மேடுகள் நடுவே ஏகாந்தமாக இருக்கும் கன்யாகுமரியின் அழகை அவர் வர்ணித்திருந்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/9512

அச்சிதழ்கள்

july-2015-bigஅச்சு இதழ்கள் முன்னைவிட இப்போது நிறைய வருகின்றன. மின்னூடகம் வந்தபின் அச்சு ஊடகங்கள் குறையும் என்னும் எண்ணம் பரவலாக இருந்தது, ஆனால் அது பொய் என இவை காட்டுகின்றன. ஆனால் இவை தற்காலிகமாக நிகழ்பவையா என்றும் ஐயமாக இருக்கிறது. கல்குதிரை, சிலேட் ,மணல்வீடு போன்ற சீராக வெளிவராத சிற்றிதழ்கள் ஒருவரிசை. உயிர்மை , காலச்சுவடு, தீராநதி போன்ற நடுத்தர இதழ்கள் இன்னொரு பக்கம். அமிர்தா, அந்திமழை, ஆழம், நற்றிணை, உயிர் எழுத்து போல மேலும் ஜனரஞ்சகமாக, மேலும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/78538

மின் தமிழ் இதழ் 3

coverசி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துள்ள மின்தமிழ் இதழ் பெருமாள் முருகன் சிறப்பிதழாக அமைந்திருக்கிறது. பலகோணங்களில் பெருமாள்முருகனைப்பற்றிய் ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன. மாதொரு பாகன் பற்றிய சரவணக்கார்த்திகேயன் கட்டுரையும் நிழல்முற்றம் பற்றிய லேகா ராமசுப்ரமணியம் கட்டுரையும் கூளமாதாரி பற்றி கிருஷ்ணப்பிரபு கட்டுரையும் தெளிவான நோக்குகளை முன்வைக்கக்கூடியவையாக இருந்தன. ஒரு படைப்பாளியைப்பற்றிய இந்த விரிவான ஆய்வுக்கோவை முக்கியமான முயற்சி. ஆனால் புனைவுகளும் கவிதைகளும் பெரும் சோர்வையே அளித்தன. விபச்சாரியைப்பற்றி கவிதை எழுதுவதெல்லாம் எண்பதுகளிலேயே சிறுபத்திரிகைகளில் சலித்துப்போன விஷயங்கள். கதைகளை எழுதியவர்கள் இலக்கிய அறிமுகமில்லாதவர்களாக, …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/78427

முதற்கனல் – நோயல் நடேசன்
பாரதத்தின் ஆரம்பத் தொகுதியான முதற்கனல் குலவரலாற்றை பல உப கதைகளாக தருகிறது. அக்காலத்திற்கு ஏற்ற நதிகள், காடுகள், மற்றும் மலைகள் சக்திவாய்ந்த தேவர்கள், கந்தர்வர்கள் என்ற மாயாவாத தன்மையுடன் அமைந்திருக்கிறது. உண்மையில் மாயாவாத எழுத்துகள் தற்பொழுது எழுதும் அமெரிக்க , லத்தீன் அமெரிக்க இலக்கியம் எழுதுபவர்கள் தவறாமல் பாரதத்தை படித்தால் அவற்றின் உண்மையான ஊற்றுக்கண் இங்குள்ளது என்பதைப் புரிந்துகொள்வார்கள். அதேபோல் விலங்குகளை கதைப் பாத்திரமாக்கி உலாவ விடுதலின் ஆரம்பம் இந்தியாவே என மேற்குலகம் ஒப்புக்கொள்கிறது. அதற்குக் காரணம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/77397

இரவு – ஒரு வாசிப்பு
இரவு – ஜெயமோகன் இந்த நாவலை நான் ஃபேஸ்புக்கில் தமிழில் எழுதத் தெரியாதிருந்த காலத்திலேயே படித்து விட்டதால், இதைப்பற்றி அப்போது எழுத முடியாமலேயே போய்விட்டது. இது விமர்சனமல்ல, வாசிக்காதவர்களுக்கு அறிமுகப்படுத்தும் சிறு முயற்சி ! பாபநாசம் வெற்றிக்குப் பின் ஜெயமோகன் தலைக் கொம்பின் நீளம் சில செண்டி மீட்டர்கள் கூடிவிட்டிருக்கும் என்றாலும் இந்த இரவு நாவலுக்காக அவர் புகழ் பாடுவதில் தவறில்லை என்பது என் எண்ணம். இந் நாவலை எப்படி இன்னும் படமாக்காமல் விட்டிருக்கிறார் எனப் புரியவேயில்லை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/77001

Older posts «