Category Archive: காண்டீபம்

காண்டீபம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு




  காண்டீபம் நாவல் முன்பதிவு வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரதத்தின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது. இந்த செம்பதிப்பில் வண்ண ஓவியங்கள் இல்லை. இதை நீங்கள் விபிபியில் ஆர்டர் செய்யமுடியாது. இப்புத்தகம் உங்களுக்கு மே முதல் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும். முன்பதிவு செய்ய கடைசி நாள் – ஏப்ரல் 20, 2016. முன் பதிவு செய்பவர்களுக்கு தபால் செலவு …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/86265

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74




பகுதி ஆறு : மாநகர் – 6 மாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்!” என்றான். செவிலி கண்களால் நகைத்துவிட்டு முன்னால் சென்று “வணங்குகிறேன் இளவரசி” என்றாள். சுபத்திரை வெண்பட்டாடை அணிந்து இளநீல பட்டை மேலாடையாக போட்டிருந்தாள். குறைவான அணிகளும் சற்றே கலைந்த குழலுமாக இருந்தாள். “மேலே வருவீர்கள் என்று எண்ணினேன்… காத்திருந்தபின் நானே வந்தேன்” என்றாள். “வரத்தான் எண்ணினேன். மைந்தருடன் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/81127

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73




பகுதி ஆறு : மாநகர் – 5 மதுராபுரியின் சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட அரண்மனை வாயிலில் அர்ஜுனன் தன் ஒற்றைப்புரவித் தேரில் வந்து இறங்கி உள்ளே நின்று எம்பி எம்பிக் குதித்த சுருதகீர்த்தியை இடையைப் பிடித்து தூக்கி கீழே இறக்கினான். “தந்தையே, தந்தையே, தந்தையே” என்று அழைத்து அவன் காலை உலுக்கிய சுருதகீர்த்தி “நாம் இந்தப் புரவியிலே வரும்போது… நாம் இந்தப் புரவியிலே வரும்போது…” என்றான். “ஒரு முறை அழைத்தால் போதும்” என்றான் அர்ஜுனன். “நாம் இந்தப்புரவியில்…” என்று …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/81112

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 72




பகுதி ஆறு : மாநகர் – 4 அர்ஜுனனை எதிர்கொண்ட சிற்றமைச்சர்கள் சுஷமரும் சுரேசரும் தலைவணங்கி முகமன் கூறினர். சுஷமர் “இந்திரபுரிக்கு இந்திரமைந்தரின் வரவு நல்வரவாகட்டும்” என்றார். சுரேசர் “ஒவ்வொரு முறையும் பிறிதொருவராக மீண்டு வருகிறீர்கள். இம்முறை ஒரு சிற்பியைப்போல் தோன்றுகிறீர்கள்” என்றார். அர்ஜுனன் நகைத்து “ஆம், கலிங்கத்திற்கு சென்றிருந்தேனல்லவா” என்றான். “அஞ்சவேண்டாம், சில மாதங்கள் இங்கிருந்தால் மீண்டும் வெறும் பாண்டவனாக மாறிவிடுவேன்.” “தங்கள் அறிவு எங்களுக்கு பகிரப்படுகிறது. சுமை அழிந்து கிளை மேலெழுவது போல் இயல்பாகிறீர்கள்” என்றார் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/81089

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 71




பகுதி ஆறு : மாநகர் – 3 நகரின் உள்கோட்டைகள் சற்று உயரம் குறைந்தவையாகவும் சிற்பங்கள் மிகுந்தவையாகவும் இருந்தன. வாயிலின் முகப்பில் நின்றிருந்த பேருருவ வாயிற்காப்போன் சிலைகள் வலக்கையில் வஜ்ராயுதமும் இடக்கையில் அஞ்சல் அறிவுறுத்தல் குறிகளுமாக பெரிய பற்கள் செறிந்த வாயும் உறுத்து கீழே நோக்கிய கண்களும் சல்லடம் அணிந்த இடையும் சரப்பொளி அணிந்த மார்புமாக நின்றன. அவற்றின் கழல் அணிந்த கணுக்கால் உயரத்திலேயே அங்குள்ள அனைத்து வணிகர்களும் புரவி வீர்ர்களும் நடமாடினர். கோட்டைமேல் இந்திரப்பிரஸ்தநகரின் வஜ்ராயுதக் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/81060

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70




பகுதி ஆறு : மாநகர் – 2 கிழக்கிலிருந்து இந்திரப்பிரஸ்தத்தை அடைவதற்கான மைய வணிகப்பாதையின் பெயர் அர்க்கபதம். அதன் வலப்பக்கம் அமைந்திருந்த இந்திரகீலம் என்ற பெயருடைய செம்மண் குன்றின் உச்சிமேல் வானிலிருந்து விழுந்தது போல் அமைந்திருந்த பெரிய பாறையின் மீது இந்திரனின் சிலை நின்றிருந்தது. இடக்கையில் அமுத கலசமும் வான் நோக்கி தூக்கிய வலக்கையின் நுனியில் வஜ்ராயுதமும் ஏந்தி வலக்காலை முன்னால் தூக்கி நின்றிருந்தான் விண்ணவர்கோன். அப்பெரும் பாறையில் புடைப்புச் சிற்பமாக ஐராவதத்தின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. இந்திரப்பிரஸ்தத்தை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/81017

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69




பகுதி ஆறு : மாநகர் – 1 தொல்நகர் அயோத்திக்கு செல்லும் வணிகப்பாதையின் ஓரமாக அமைந்த அறவிடுதியின் கல்மண்டபத்திற்குள் வணிகர்கள் கூடியிருந்தனர். நடுவே செங்கல் அடுக்கி உருவாக்கப்பட்ட கணப்பில் காட்டுக்கரியிட்டு மூட்டப்பட்ட கனல் சிவந்து காற்றில் சீறிக்கொண்டிருந்தது .அதன் செவ்வொளியின் மென்மையான வெம்மையும் கல்மண்டபத்திற்குள் நிறைந்திருந்தது. வெளியே மழைச்சாரல் சரிந்து வீசி காற்றில் சுழன்று மறுபக்கமாக சென்று மீண்டும் விழுந்தது. அதன் மேல் மின்னல் அவ்வப்போது ஒளிவிட்டு அணைந்தது. வெளியே தாழ்வான கொட்டகைகளில் வணிகர்களின் அத்திரிகள் குளிரில் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/80996

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 68




பகுதி ஐந்து : தேரோட்டி – 33 தேர் இடப்பக்கம் திரும்பி சற்றே பெரிய பாதை ஒன்றில் சென்றது. திடீரென்று பன்னிரண்டு படிகள் தெரிய சுபத்திரை எழுந்து இருகால்களாலும் பீடத்தையும் தாமரை வளைவையும் பிடித்து சரிந்து நின்று கடிவாளத்தை முழுக்க இழுத்து பற்றிக்கொண்டாள். தலையை பின்னால் வளைத்து வாய் திறந்து கனைத்தபடியே சென்ற புரவிகள் அந்தப் படிகளில் இறங்கின. இருவரையும் தேர் தூக்கி அங்குமிங்கும் அலைத்து ஊசலாட்டியது. படிகள் நகைப்பது போல் ஒலி எழுந்தது. கீழே சென்றதும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/80874

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67




பகுதி ஐந்து : தேரோட்டி – 32 சகடங்களின் ஒலி எழுந்து சாலையைச் சூழ்ந்திருந்த மாளிகைகளின் சுவர்களில் பட்டு எதிரொலித்து முழக்கமெனச் சூழ சாலைகளில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர்களையும் புரவிகளையும் பல்லக்குகளையும் விலங்குகளையும் பதறி இருமருங்கும் ஒதுங்கச் செய்தபடி பாய்ந்து முன்னால் சென்றது அர்ஜுனனும் சுபத்திரையும் சென்ற தேர். தேர்த்தட்டில் எழுந்து பின்பக்கம் நோக்கி நின்ற அர்ஜுனன் தன் வில்லை குலைத்து சற்று அப்பால் கையிலொரு பெரிய மரத்தொட்டியுடன் வந்து கொண்டிருந்த முதிய பணியானையின் காதுக்குக் கீழே …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/80867

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66




பகுதி ஐந்து : தேரோட்டி – 31 “நாண் இழுபடுகையில் வில்லின் இரு முனைகளையும் சீராக இழுக்குமெனில் மட்டுமே அம்பு நேராக செல்லும்” என்று அர்ஜுனன் சொன்னான். “விசை தோளிலிருந்து நாணுக்கு செல்கிறது. நாணிலிருந்து தண்டுக்கு. தண்டிலிருந்து அம்புக்கு. தண்டின் இருமுனைக்கும் விசையை பகிர்ந்தளிப்பது நாண். எனவேதான் வில்லின் நாண் ஒற்றைத் தோலில் அமைந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.” “எருமையின் கொம்பின் அடியிலிருந்து பின்கால் குளம்பு வரைக்கும் வளைந்து செல்வதாக தோலைக்கீறி எடுத்து நாணை அமைக்கிறார்கள். நீர் அருந்துவதற்காக …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/80862

Older posts «