Category Archive: விழா

நெல்லைவிழா-கடிதங்கள்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இந்த வருட தொடக்கத்தில் கோவைக்கு அடிக்கடி வருவது போல், நெல்லைக்கு ‘இலக்கிய நிகழ்வுகளுக்காக’ அடிக்கடி வருவதில்லையே என்ற எனது கேள்விக்கு, இதை நடத்தக் கூடிய அமைப்புக்கள் இங்கு இல்லாததும் ஒரு காரணம் என்று எழுதி இருந்தீர்கள்.நீண்ட நாள் கழித்து நெல்லைக்கு வரப்போகிறீர்கள் என்ற மகிழ்வுடன் காலையிலேயே எனது ஊரில் (ஆழ்வார்திருநகரி) இருந்து புறப்பட்டு 9:45 மணிக்கு கூட்ட அரங்கிற்கு வந்து விட்டேன் நிகழ்ச்சி நிரலின்படி 9:30 மணிக்கே கூட்டம் துவங்கி இருக்கும்,அதுவும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/86641

வானவன் மாதேவி இயலிசை வல்லபி- இல்லத்திறப்புவிழா
வாழ்க்கையின் அபூர்வமான தருணங்களில் நாம் நம்முள் இருக்கும் மாறா அவநம்பிக்கையை மீறி நம்பிக்கையின் ஒளியை கண்டடைகிறோம், அத்தருணங்களைத்தான் பேணிப்பேணி வளர்த்து மேலே கொண்டுசெல்கிறோம். அதன் வழிகாட்டலில் அனைத்தையும் கடந்துசெல்ல முயல்கிறோம். இலட்சியவாதத்தை, அன்பை, பெருங்கனவுகளை நம் அனுபவ அறிவின் விளைவான பொதுப்புத்தி நம்ப மறுத்துக்கொண்டே இருக்கிறது. அனைத்து மகாவாக்கியங்களையும் நோக்கி அது முகம் சுளிக்கிறது. அவ்வப்போது ஏதோ ஒன்று நம்மை ஆட்கொண்டு அங்கே கொண்டுசெல்லவேண்டியிருக்கிறது சென்ற மார்ச் 11 ஆம் தேதி சேலத்தில் வானதி- வல்லபியின் இல்லத்திறப்புவிழாவுக்குச் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85709

வானதியும் வல்லபியும் – ஒரு கனவின் ஈடேற்றம்
  சில ஆண்டுகளுக்கு முன்பு என் பிரியத்திற்குரிய வானவன் மாதேவியும் இயலிசை வல்லபியும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு தங்குமிடம் அமைக்க முடிவெடுத்தபோது எனக்குத் தோன்றியது கடும் சினம்தான். அவர்களின் உடல்நிலை எனக்குத்தெரியும். அந்த அழுத்தம் அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் என்பதற்கு அப்பால் எனக்கு ஏதும் எண்ணத்தோன்றவில்லை. ஒரு தந்தையின் இடத்திலன்றி அவர்களை நான் பார்க்க முடிந்ததில்லை ஓர் இலட்சியம் எத்தனை பெரிய இன்பத்தை அளிக்கும் என்றும் அதில் செலுத்தப்படும் உழைப்பளவுக்குக் களியாட்டம் வேறல்ல என்றும் எனக்குத்தெரியும். என்றாலும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85436

மும்பை கேட்வே இலக்கிய விழா
  மும்பையில் சில மலையாள இதழாளர்களின் முன்னெடுப்பில் கேட்வே லிட் ஃபெஸ்ட் என்னும் இலக்கியவிழா கடந்த சில ஆண்டுகளாக நடந்துவருகிறது. சென்ற ஆண்டே என்னை அழைத்திருந்தனர். நான் தவிர்த்துவிட்டேன். இந்த ஆண்டு அருண்மொழியை அழைத்துக்கொண்டு சும்மா ஒரு மும்பைப் பயணமாகச் சென்றுவரலாமே என எண்ணி ஒப்புக்கொண்டேன் ஆனால் அதே நாளில் கோவை ரோட்டரி சங்க நிகழ்ச்சிக்கும் நாள் கொடுத்திருந்தேன். கடைசிநாளில் அது தெரியவர ஒரே திகைப்பு, குழப்பம். ஒருவழியாக பயணச்சீட்டை மாற்றிக்கொண்டு கோவை நிகழ்ச்சியை முடித்தபின் காரில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85146

கோவை ரோட்டரி விருது விழா
  என் நண்பரும் விஷ்ணுபுரம் அமைப்பின் நலம்நாடிகளில் ஒருவருமான திரு.நடராஜன் அவர்கள் கோவை ரோட்டரி அமைப்பு வழங்கும் துறைமேன்மைக்கான விருதை பெற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டார். ஒரு அறிவிப்பும் கௌரவமும் மட்டும்தான். நான் பொதுவாக இத்தகைய மன்றங்களில் ஆர்வமில்லாதவன். இதுவரை எந்த மன்றத்தின் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்ததில்லை, இனி பங்கெடுப்பதாகவும் இல்லை. ஆனால் இவ்வமைப்பின் முன்னணிப்பொறுப்பாளர்கள் வெண்முரசின் தீவிர வாசகர்கள். அவர்களைச் சந்தித்தபோது அந்நிகழ்ச்சியில் பங்குகொண்டு அவர்களால் கௌரவிக்கப்படுவது மதிப்புக்குரியது என்னும் எண்ணம் ஏற்பட்டது சென்ற பெப்ருவரி 20 …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85136

சென்னை கவிதை வெளியீட்டுவிழா

1
சென்னையில் குமரகுருபரனின் கவிதைவெளியீட்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக பத்தாம்தேதி மாலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் கிளம்பினேன். காலை எழும்பூர் ரயில்நிலையத்தில் குமரகுருபரனே நண்பருடன் வந்திருந்தார். வழக்கமான பிரதாப் பிளாசா ஓட்டலில் அறை. கவிஞர் நரன் , ஆத்மார்த்தி ஆகியோரைச் சந்தித்தேன். நரன் வசந்தபாலனுக்கு அணுக்கமானவர். ஒரே ஊர்க்காரர் என அறிந்தேன். ஆத்மார்த்தியை முன்னரே ஒரு நூல்வெளியீட்டுவிழாவில் சந்தித்திருந்தேன். நண்பர் சுகா அறைக்கு வந்திருந்தார். நானும் அவரும் ஒரு படம்செய்வதாக இருக்கிறோம். மாலையில் கவிதைவெளியீட்டுநிகழ்ச்சி. பொதுவாக என் ‘எதிரிகள்’ என இணையத்தில் தென்படுபவர்கள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/84691

விழா 2015 கடிதங்கள் -8
    எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விழாவின் முந்தைய நாள் இலக்கிய விழாவில் கலந்து கொண்டேன். சராசரி பெண்களுக்கு  இல்லத்தை விட்டு ஒருநாள் பிரிந்து வர வேண்டுமெனில் எத்தனை முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும்..? என்னுள் சுவையூறி கிடந்த இலக்கியம் நோக்கிய ஆர்வமே அதை வழிநடத்தியது. கிடைத்த அனுபவங்கள் அதனை சிறிதும் ஏமாற்றவில்லை. ஆனால் விழா நாளன்று நிகழ்ந்த நிகழ்வுகளாக பதியப்பட்ட தகவல்கள் என்னை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. எத்தனையெத்தனை விஷயங்களை தவற விட்டிருக்கிறோம் என்று தவிக்க வைத்தது. இது …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/82718

விழா 2015 கடிதங்கள் 7
[கவிஞர் இசை] அன்புள்ள ஜெ , நீங்கள் நண்பர் தூயனுக்கு எழுதிய பதிலில் சொன்னது போல ஒரு விழா முடிந்ததும் ஒருவிதமான சோர்வு சூழ்ந்து கொள்ளத்தான் செய்கிறது. ஆனால் அதில் நடந்த முக்கியமான விவாதங்கள் சந்திப்புகளை அசை போடுவதின் மூலமே நம்மை மீட்டுக் கொள்ளவும் முடிகிறது. முக்கியமாக புதியதாக வருகை தரும் நண்பர்களின் ஆர்வமும் பங்களிப்பும் உற்சாகம் தருவதாக உள்ளது.(பழைய நண்பர்கள் சிலர் பல் வேறு காரணங்களால் வராமல் இருக்க  நேர்வது சற்று ஏமாற்றம் அளித்தாலும்). புதியவர்கள் பெரும்பாலும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/82654

இலக்கியமெனும் கனவு
  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஒவ்வொரு தொடக்கமும் சிறந்த முடிவு கிடைக்கும் என்ற ஏக்கத்துடனேயே தொடங்குகின்றன. அனைத்திற்கும் தான் எதிர்பார்க்கிற சிறந்த முடிவுகள் கிடைப்பதில்லை. என் 2015ம் ஆண்டு தொடக்கத்தில் எதிர்பார்க்காத ஒரு சிறந்த முடிவாக விஷ்ணுபுரம் விருது விழா கிடைத்துள்ளது. அவ்வகையில் என் 2015 – என் மனநூலில் என்றென்றும் எடுத்து பார்த்து ரசிக்கப்போகும் – ஒரு அழகிய முழுமை கொண்ட வாக்கியமானது இந்த விழா என்னும் முற்றுப்புள்ளியில். சில மின்னஞ்சல் தொடர்புகள் மூலம் ஜெயமோகன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/82533

விழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு
  கும்பகோணத்தில் இருந்து கோவை செல்ல ஜனசதாப்தி ஆறுமணி நேரத்திற்கும் சற்று அதிகமாக எடுத்துக்கொள்கிறது. பகல் நேர சலிப்பூட்டும் பயணம். சலிப்பை விரட்டுவது அடுத்த இருபத்துநான்கு மணிநேரங்களுக்குள் நடக்கவிருந்த நிகழ்வுகள் குறித்த எதிர்பார்ப்புகள்தான்   கோபி ராமமூர்த்தி பதிவு    
Permanent link to this article: http://www.jeyamohan.in/82606

Older posts «