Category Archive: விருது

இயல், தமிழ் இலக்கியத்தோட்ட விருதுகள்
டொரெண்டோவில் 2016, ஜூன் 18ம் தேதி அன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினாறாவது இயல் விருது விழா ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. உலகளாவிய பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை ஆற்றல் வாய்ந்த குழுமமாக உருவாக்கியதே திரு மயூரநாதனின் சாதனையாகும். இயல் விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் அறிவிக்கப்பட்டன. சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட காலச்சுவடு அறக்கட்டளை ’கணிமை விருது’ திரு சே.இராஜாராமன் எனும் இயற்பெயர் கொண்ட நீச்சல்காரனுக்கு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88573

அசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது

1374507701043
  கனடா இலக்கியத்தோட்ட விருது  கண்டிவீரன் என்னும் தொகுதிக்காக ஷோபா சக்திக்கும் அபுனைவு பிரிவில் குறுக்குவெட்டுக்கள் என்னும் தொகுப்புக்காக அசோகமித்திரனுக்கும் வழங்கபட்டுள்ளன ஷோபா சக்தியும் அசோகமித்திரனும் தமிழ் இலக்கிய உலகின் இரு பெரும் படைப்பாளிகள். இருவருக்கும் என் வணக்கமும் வாழ்த்தும்   ஜெ  
Permanent link to this article: http://www.jeyamohan.in/88399

குமரகுருபரனுக்கு விருது
  கனடாவில் இருந்து அளிக்கப்படும் இலக்கியத்தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குமரகுருபரன் எழுதிய மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது என்ற தொகுதிக்காக கவிதைக்கான விருதைப்பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்  
Permanent link to this article: http://www.jeyamohan.in/88394

கசப்பு அண்டா மனிதன்! -செல்வேந்திரன்
நண்பர்களே, ஒரு காலை நடை விவாதத்தில் ஜெயமோகன் ஒரு அவதானத்தை சொன்னார். நம் ஊர்பக்கம் வீட்டுப் பக்கம் நாம் சந்திக்கிற வயதானவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அறுவை கேஸூகளக இருப்பார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி அறுப்பார்கள் அல்லது நாங்கள்ளாம் அந்த காலத்துல என நோஸ்டால்ஜிக் கலர் ரீல் ஓட்டுவார்கள், அல்லது கடுவன் பூனைகளாக கடித்து வைப்பார்கள். ஆனால், நைனா கி.ராஜநாராயணனுக்கு 98 வயது, அசோகமித்திரனுக்கு 85 வயது, இந்திரா பார்த்தசாரதிக்கு 86 வயது, இலங்கை எழுத்தாளர் தெளிவத்தை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/86581

கோவை ரோட்டரி விருது விழா
  என் நண்பரும் விஷ்ணுபுரம் அமைப்பின் நலம்நாடிகளில் ஒருவருமான திரு.நடராஜன் அவர்கள் கோவை ரோட்டரி அமைப்பு வழங்கும் துறைமேன்மைக்கான விருதை பெற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டார். ஒரு அறிவிப்பும் கௌரவமும் மட்டும்தான். நான் பொதுவாக இத்தகைய மன்றங்களில் ஆர்வமில்லாதவன். இதுவரை எந்த மன்றத்தின் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்ததில்லை, இனி பங்கெடுப்பதாகவும் இல்லை. ஆனால் இவ்வமைப்பின் முன்னணிப்பொறுப்பாளர்கள் வெண்முரசின் தீவிர வாசகர்கள். அவர்களைச் சந்தித்தபோது அந்நிகழ்ச்சியில் பங்குகொண்டு அவர்களால் கௌரவிக்கப்படுவது மதிப்புக்குரியது என்னும் எண்ணம் ஏற்பட்டது சென்ற பெப்ருவரி 20 …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85136

கோவையில் ஒரு விருது
மீண்டும் கோவை வருகிறேன். வரும் 20-2-2016 அன்று கோவையில் ரோட்டரி அமைப்பு அளிக்கும்  துறைச்சாதனைக்கான விருதை பெறவிருக்கிறேன். என்னைப்பற்றி ஒரு சிறிய ஆவணப்படம் திரையிடப்படும். என் நண்பர்கள், வாசகர்கள் நிறைந்த அமைப்பு இது.பலவகையிலும் விஷ்ணுபுரம் நிகழ்வுகளுக்கும் வெண்முரசு உருவாக்கத்திற்கும் உதவுபவர்கள் அவர்கள். அவர்களின் பிரியத்தின் வெளிப்பாடான இவ்விருதை ஒரு கௌரவமாக கருதுகிறேன். இருபதாம்தேதி மட்டும் கோவையில் இருப்பேன். இந்நிகழ்ச்சி அனைவரும் பங்குகொள்ளத்தக்கது. நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன். இடம்  இந்திய வர்த்தகசபை அவிநாசி ரோடு கோவை நேரம்  மாலை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/84752

பத்மஸ்ரீ – விவாதங்களின் முடிவில்
பத்மஸ்ரீ விருது தொடர்பாக கிட்டத்தட்ட ஆயிரம் கடிதங்கள். கடிதங்கள் எழுதிய அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி. அக்கறையுடன் ஆலோசனை சொன்னவர்கள், வருந்தியவர்கள், வாழ்த்தியவர்கள் அனைவரையும் புரிந்துகொள்கிறேன். சென்ற சிலநாட்களாக செல்பேசியை எடுக்கவில்லை. மின்னஞ்சல்களுக்கு பதிலும் போடவில்லை. ஒவ்வொருநாளும் ஆயிரம் அழைப்புகள் வரை வந்தன. தேசிய, வட்டார செய்தியூடகங்களின் தெரிந்த , தெரியாத நிருபர்கள் அழைத்துக்கொண்டே இருந்தனர். அழைத்து பதில்பெறாது சினம் கொண்ட நண்பர்களிடம் பொறுத்தருளக் கோருகிறேன். எனக்காக சிபாரிசு செய்தவர்கள் தமிழின் மூன்று முதன்மை ஆளுமைகள். அவர்களிடம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/83865

பத்மஸ்ரீ – இறுதியாகச் சில சொற்கள்
  முந்தைய பதிவு   பத்மஸ்ரீ விருது குறித்து பலகோணங்களில் கடிதம் எழுதியவர்கள் அனைவருக்கும் பொதுவாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சில விளக்கங்கள் 1. இது அரசுக்கு எதிரான நிலைப்பாடெல்லாம் அல்ல. நான் உடனடி அரசியலில் ஈடுபடுவதும் ,கட்சி நிலைப்பாடுகள் எடுப்பதும் எழுத்தாளனின் இயல்புக்கு மாறானது என நினைப்பவன். 2.மேலும் விருதை அளிப்பது அரசு அல்ல. அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் தேசம். ஏனென்றால் இது இந்திய மக்களால் ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. 3.மறுப்பை ஏன் அறிவிக்கவேண்டும் என்றால் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டதும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/83799

பத்மஸ்ரீ
இன்று மாலை ஆறரை மணிக்கு டெல்லியில் இருந்து கலாச்சாரத்துறை உயரதிகாரியான சௌகான் என்பவர் அழைத்தார். எனக்கு வரும் குடியரசுதினத்தில் பத்மஸ்ரீ அளிக்கப்படவிருப்பதாக அறிவித்தார். நான் ஒருமாதம் முன்னரே அதை அறிந்திருந்தேன். சென்னையிலிருந்து என் நெடுங்கால நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான காவல்துறை உயரதிகாரி கூப்பிட்டு பத்ம விருதுகளுக்கான நுண்ணோக்குப் பட்டியலில் என் பெயர் இருப்பதாகச் சொன்னார். உண்மையில் நான்காண்டுகளுக்கு முன் என் எழுத்துக்களின் தீவிர வாசகரான கலாச்சாரத்துறை உயரதிகாரி ஒருவரால் இந்த எண்ணம் முன்வைக்கப்பட்டது. அவரது முயற்சியால் அப்போது என்பெயர் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/83792

ராஜாவுக்கு விருது
  எல்லா மின்னஞ்சல்களையும் வாசிக்காமல் இருக்கும் திமிரின் விலையாக ஒரு நல்ல நிகழ்ச்சியைத் தவறவிட்டேன். கேரள அரசின் சுற்றுலாத்துறை வழங்கும் பெருமதிப்பிற்குரிய விருதாகிய நிஷாகந்தி புரஸ்காரம் இவ்வருடம் இளையராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேரளமுதல்வர் உம்மன்சாண்டி விருதை வழங்கி ராஜாவைக் கௌரவித்தார் ராஜா தமிழ்நாட்டில் பெருமதிப்புக்குரியவராக மக்களிடையே இருந்தாலும் அரசுசார்ந்து அவர் பெரிதாக மதிக்கப்பட்டதில்லை. இங்கே எந்தக்கலைஞரும் அப்படி அரசாலோ அரசுப்பொறுப்பில் இருப்பவர்களாலோ மதிக்கப்பட்டதில்லை என்பதே உண்மை. மிகப்பிந்திக்கிடைத்த பத்மபூஷண் மட்டுமே அவர் பெருமைகொள்ளத்தக்க விருது எனலாம். கேரள அரசு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/83672

Older posts «