Category Archive: வாசிப்பு

சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ. ஒரு புதிய வாசிப்பனுபவம். இரண்டு அல்லது மூன்று குறியீடுகள் தோன்றி மறைந்தன.. மனதில். சுக்கிரன் அல்லது வீனஸ் ஒரு முகம் மட்டுமே சூரியனை நோக்கி. எனவே ஒருபுறம் அதிக வெப்பம். மறுபுறம் அதிக குளிர். என்றென்றும் பகல் தரும் கிரகம். (அல்லது இரவு தரும்). தன்னைத்தானே சுற்றிக் கொள்ளவும், சூரியனைச் சுற்றி வரவும் சுமார் 230 பூமி நாட்கள். (ஒரு சில அறிஞர்கள் இந்தக் கணக்கில் வேறுபடுகிறார்கள்) எனினும் மனதில் அசை போட ஒரு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/91206

மகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்
அன்புடன்  ஆசிரியருக்கு ஒவ்வொரு  துளியையும் பற்றி கீழிறிங்க வேண்டிய  பெரும்  படைப்பு பின் தொடரும்  நிழலின்  குரல். கட்சியினால்  வெளியேற்றப்பட்டு  பிச்சைக்காரனாக இறந்த அந்த இளம் கவிஞனின்  மனச்சாட்சியாக நின்று  பெரும்  விவாதங்களை எழுப்புகிறது.   பத்து நாட்களாக ஏறக்குறைய  மனம்  பிசகிவிட்டதோ என குழம்பும்  அளவுக்கு  “பின் தொடரும் நிழலின் குரல்”  என்னை எண்ண வைத்து விட்டது. குற்றமும்  தண்டனையும்  நாவலில்  (இன்னமும்  முழுதாகப் படிக்கவில்லை) ரஸ்கால்நிகாப் காணும்  ஒரு கனவில்  ஒரு குதிரையை  குதிரைக்காரனும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/89001

சிங்கப்பூரில் இரண்டுமாதங்கள்…
உலகமெங்கும் கல்விமுறையில் மொழியின் இடம் மேலும்மேலும் முக்கியத்துவம் அடைந்துகொண்டே செல்லும் காலகட்டம் இது. குறிப்பாக அமெரிக்காவிலிருந்து இந்த அவதானிப்பு நிகழ்த்தப்பட்டு கல்விமுறையின் மையப்போக்காக ஆகியது. மொழியாக வழியாக அறிவதும், மொழியாக மாற்றப்படுவதும்தான் உண்மையில் அறிவென ஆகிறது. ஆகவே நூல்வாசிப்பை மிகப்பெரிய அளவில் இன்றைய கல்விமுறை வலியுறுத்துகிறது. சொல்லப்போனால், வாசிப்புப்பழக்கத்தை உருவாக்கி வழிகாட்டினால் மட்டுமேபோதும், குழந்தைகளே கற்றுக்கொள்ளும் என்பதே இன்றைய சிந்தனை இதில் புனைவுவாசிப்பு மேலும் முக்கியமான பங்கை வகிக்கிறது. அது பொழுதுபோக்கு அல்ல. கற்பனை மூலம் கற்கவும், …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/89036

”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”
‘நல்ல கதை என்பது எலியின் உயிர்வாதையையும் பூனையின் பசியையும் ஒரேசமயம் சொல்வது’– மிகப்பழைமையான சொலவடை இது. சொல்வது எத்தனை எளிதோ அத்தனை சிரமமானது சாதிப்பது. இன்னொரு கோணத்தில் நிரந்தரமான விவாதத்துக்கு உரியது. ‘அம்மையை அடித்தாலும் அதிலிமிருக்கும் இரண்டு பக்கம்’ என்று மலையாளப் பழமொழி. அப்படியானால் நியாயம் என்றும் தர்மம் என்றும் ஒன்றுமில்லையா என்ன? உண்டுதான். கலைஞன் எப்போதுமே நீதியின்குரல்தான். நீதி என்பது பலவகை. அன்றாட உலகியல் நீதி ஒன்று நம் கண்ணுக்குப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மண்ணில் மனிதரை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/17235

வாழும் கணங்கள்
    ரயிலில் ஒருவர் கூடவே பயணம் செய்தார். என்னைப்பற்றி விசாரித்தார். நான் எழுத்தாளன் என்று பொதுவாகச் சொல்லிக்கொள்வதில்லை, உடனே எழுத்தாளன் என்றால் யார், அவனுக்குப் பொதுவாகத் தமிழில் என்ன வருமானம் வரும், அவன் எப்படி முதல்வகுப்பு அறையில் பயணம்செய்யக்கூடியவனாக ஆனான், எல்லாவற்றையும் நான் விளக்கியாகவேண்டியிருக்கும். ’பிஸினஸ் செய்கிறேன்’ என்று மட்டும் சுருக்கமாகச் சொல்வேன். ‘என்ன பிஸினஸ்?’ என்று கேட்டால் ‘கொடுக்கல்வாங்கல்’ என்று சொல்வேன். உண்மையில் இந்த வார்த்தைக்குச் சரியான அர்த்தம் என்ன என்று எனக்கு இன்றுவரை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/19762

போதி – சிறுகதை குறித்து..
  அன்பு ஜெயமோகன், போதி சிறுகதையைப் படித்தேன். ஏனோ, எனக்கு அது க.நா.சு.வின் பொய்த்தேவு நாவலையும், ஜெயகாந்தனின் துறவு சிறுகதையையும் நினைவூட்டியது. அவிசுவாசியாக இருப்பதற்கு ஒருபோதும் நாம் ஒப்புக்கொள்வதில்லை. நம் இயல்பான நிலை அதுதான் என்று தெரிந்தபின்னும் விசுவாசத்தை நோக்கியே நாய்போல் ஓடுகிறோம். நிலைத்த சமூக வாழ்விலிருந்துதான் நம்மிடம் விசுவாசம் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். கல்வி, காதல், கல்யாணம், குடும்பம், மரணம் என வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஏதோ ஒன்றின் மீதான் விசுவாசத்துடன்தான் இருக்கிறோம். விசுவாசம் நம்மை ஏமாற்றும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87790

பின் தொடரும் நிழலின் குரல் – அறம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வெகுசமீபமாக தங்களின் பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்தேன். உங்கள் படைப்புகளில் நான் வாசிக்கும் இரண்டாவது படைப்பு இது. முதலாவதாக நான் வாசித்த அறம் என்னுள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியதோ அதற்கு சற்றும் குறையாத பாதிப்புடனே பின் தொடரும் நிழலின் குரலையும் வாசித்து முடித்தேன். என்னளவில் ஒரு சிறந்த நாவல்\சிறுகதை\கதை என்பது முழுகவனம் செழுத்தி வாசிக்க விடாமல் வாசிக்கும் வரியை பற்றிய சிந்தனை உலகில் ஏகியவாறும், அதே நேரம் அடுத்த வரியை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87590

அசோகமித்திரனின் காந்தி
  இனிய ஜெயம், கோவை புதிய வாசகர்கள் சந்திப்பில் அமி யின் காந்தி சிறுகதையை குறிப்பிட்டீர்கள். நெடு நாட்கள் முன்பு வாசித்த கதை அமியின் தொகுப்பில் தேடிக் கண்டடைந்து மீண்டும் வாசித்தேன், பற்பல உள்ளடுக்குகள் கொண்ட புதுமை குன்றாத மாஸ்டர் பீஸ் கதை. கதையின் காலகட்டம் எழுபதுகளில் நடக்கிறது என யூகிக்கலாம். கதை சொல்லி காந்தி இறந்த சில வருடங்களுக்குப் பின் பிறந்தவன். பெயர் குறிப்பிடப் படாத அவன், அவனது நான்கு வருட நண்பனுக்கும் அவனுக்குமான நட்பு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87538

மனப் பிழைகள் பத்து
  சீசனல் என்ற வணிகம் சம்பந்தமான ஆங்கிலப்பத்திரிகையை யாரோ கொச்சி விமானநிலையத்தில் விட்டுச்சென்றிருந்தார்கள். அதில் வந்த ஒரு கட்டுரையை ஆர்வமில்லாமல் வாசிக்க மெதுவாக சுவாரசியம் ஏற்பட்டது. பொதுவாக நான் ’உன்னால்முடியும்தம்பி’ வகைகளை வாசிப்பதில்லை. இந்தக்கட்டுரை அப்போது கொஞ்சநேரம் என்னைப்பற்றி யோசிக்கவைத்தது. அன்றாட வாழ்க்கையில்நாம்செய்யும் பத்து மனப்பிழைகளை சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர் கட்டுரையில் எங்கும் ஆசிரியர் பெயரே இல்லை. 1.சூதாட்ட புத்தி Gamplers falacy தற்செயல்களைப்பொறுத்தவரை இதுவரை நடந்தவற்றுக்கு ஒரு ஒழுங்கு இருக்கிறது, ஆகவே இனிமேல் இப்படி நிகழும் என்று …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/9502

இலக்கியத்தை எடுத்துச்செல்லுதல்….
    ஜெயமோகன், அறிவியலில் Peer Review என்ற முறை பதிவிற்குத் தகுதியான ஆய்வுக்கட்டுரைகள் எவை என்பதை நிர்ணயம் செய்வதற்குப் பயன்படுகிறது.அறிவியலாளர்களாக அங்கீகாரம் பெற்றவர்கள் சக அறிவியலார்களின் படைப்புகள்பதிப்பிற்கு தகுதியானவையா என்று மதிப்பிடும் முறையே இது.விருதுகளுக்கும் இம்முறை பயன்படலாம். எழுத்தாளர்களாகிய நீங்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி peer review முறையில்விருதுகளுக்குத் தகுதியான எழுத்தாளர்களையும், நூல்களையும்தேர்ந்தெடுப்பீர்கள் என்றால் பரிசுகளுக்கான பணத்தை வாசகர்கள் திரட்டித் தரலாம். எழுத்தாளர்களாகிய உங்களுக்குள் இருக்கும் விருப்பு, வெறுப்புகள்இதில் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்வதும், தேர்வு முறை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/10313

Older posts «