Category Archive: வாசகர் கடிதம்

தண்ணீர்த்தொட்டிக் கடல்

scan0002

அன்புள்ள ஜெ ஏன் சார் ? அருமையான அங்கதக் கட்டுரை. ஆடனின் ஒரு புகழ்பெற்ற கட்டுரையை நினைவுறுத்தியது. அதை இணைத்துள்ளேன் டேவிட் ராஜேஷ் அறியப்படாத குடிமகன் மூலம் The Unknown Citizen- கீழே டபிள்யூ எச் ஆடன் (JS/07 M 378 என்பவருக்காக இந்த பளிங்கு நினைவுச்சின்னம் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது) அவர் எந்த அலுவல்சார்ந்த புகாரும் பதிவு செய்யப்படாத ஒருவர் என‌ புள்ளியியல்துறை உறுதிசெய்தது அவரது செயல்பாடுகள் குறித்த அனைத்து அறிக்கைகளும் முற்றிலும் ஒத்துப்போகின்றன ஒரு பழமையான …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/67792

அங்காரகன்

WP_20141207_18_36_04_Pro

சார், இந்தச் சிற்பம் போரூர் கோயிலில் இருந்தது. விஷ்ணுபுரத்தில் மிருகநயனி என்ற ஒளிரும் தாவரத்தை கண்டு ஞானத்தை அடையும் அங்காரகன் என்ற யானையை நினைவூட்டியது ராதாகிருஷ்ணன் விஷ்ணுபுரம் அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: http://www.jeyamohan.in/66902

அன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”

o555jk

குழந்தைகள் தங்களுக்குக் கிடைத்த பிரியமான பரிசுப்பொருளை தங்களுடனே வைத்து கொள்வர் ,தூக்கத்திலும் விட்டு பிரிய மறுத்து அதனை கட்டி பிடித்துத்தான் உறங்கிப்போவார்கள்.கட்டிலின் அடியில் விழுந்து காணாமல் போன அந்த பரிசினை மீண்டும் அந்த குழந்தை கண்டுகொள்ளும் போது அடையும் ஆச்சரியமும் மகிழ்வும் தான் இன்று எங்களின் மனநிலையும். மீண்டும் ஒரு முறை யானை டாக்டர் கதையினை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முயற்சி இது… அப்படி என்ன இருக்கிறது இந்த கதையில்? கதையினை வாசித்த அத்தனை நண்பர்களின் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/67254

விடுதலையின் மெய்யியல்- கடிதம்

அன்பு ஜெயமோகன், நித்ய சைதன்ய யதியின் கட்டுரை ஒன்றை நிங்கள் “விடுதலையின் மெய்யியல்” எனும் தலைப்பில் மொழிபெயர்த்திருந்தீர்கள். தனிமனிதன் ஒருவனின் தவிப்பைக் கண்டு குமைந்துபோய் சைதன்ய யதி அக்கட்டுரையை எழுதி இருக்க வேண்டும். அதில் எவ்விடத்தும் பூடகங்களாய் நகரும் வாக்கியங்கள் இல்லை, ஒன்றைச் சுட்ட மற்றொன்றைச் சொல்லி மயக்கும் சொல்விளையாட்டுகளும் இல்லை, புனிதத்துவத்தைத் தக்கவைக்கும் வியாக்கியானங்களும் இல்லை. நேரடியான மொழியில் அமைந்திருந்த அக்கட்டுரையின் அடிப்படை எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடியது. தத்துவத்துறையில் குறைந்தபட்ச அறிவில்லாத ஒருவரால் கூட அக்கட்டுரையை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/66884

டோனி மோரிசன்

3534

[டோனி மோரிசன்] [நோயல் நடேசன்] அன்பின் ஜேயமோகன் நலமா? டோனி மோரிசனின் அபிமானியாகிய எனக்கு நீங்கள் அவரை நிராகரித்தது கண்டு பொறுக்காமல் அவரது நாவலை வாசித்து எழுதியது இந்தக் கட்டுரை. மீண்டும் வாசித்தது எனக்கு பல தெளிவைத் தந்தது. அதற்காக நன்றிகள் அன்புடன் நடேசன்

Permanent link to this article: http://www.jeyamohan.in/67001

முத்தம் -கடிதங்கள்

images

இனிய ஜெயம், முத்தம் பதிவு வாசித்தேன். இந்த முத்தப் போராட்டம் துளிர்த்த சூழல் தவிர்த்து, அது துளிர்த்த நிலம் சார்ந்து அப் போராட்டத்திற்கு ஒரு பண்பாட்டுப் பின்புலம் உள்ளது. அந்த நிலத்துக்கும் தமிழ் நிலத்துக்குமான பண்பாட்டு இசைவு பாரதூரமானது. அடிப்படையில் கேரளம் சக்தி பீடம். [கால் மேல் கால் போட்டு அமரும் நாயர் பெண்களின் தோரணைக்கு நான் பெரும் ரசிகன்] வரலாற்று இடர்களுக்குப் பின்னும் அங்கு பெண்களின் இடம் வலிமை மிக்கதாகவே இருக்கிறது. உலகின் எப் பகுதியிலும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/67110

கீதை -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார். கோவை விஷ்ணுபுரம் விருது விழாவில் உங்களுடன் இரவுமுழுவதும் உரையாடியது . வாசிப்பை விடவில்லை. ஆனால் எங்கள் தொழிலில் ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடியினால் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை. இன்றைய தமிழ் இந்து தலையங்கம் கீதை பற்றி வாசிக்கும்போது , அது நீங்கள் தான் எழுதியிருப்பீர்களோ என்ற சந்தேகம் வராமலில்லை. அதற்காகத்தான் எழுதுகிறேன். நேற்றுதான் சுஷ்மாவிற்கு பதிலான உங்கள் பதிவை படித்தேன். வார்த்தைக்கு வார்த்தை உங்கள் கருத்தை இந்து பிரதிபலித்திருந்தது. அதுமட்டுமின்றி உங்கள் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/66997

ராதாகிருஷ்ணன்

rrrrrrrrrrrrrrrrrrr

இனிய ஜெயம், ஒரு தொடக்கம் கட்டுரை வாசித்தேன் அறிமுகமான நாள் தொட்டு இலக்கிய வட்டத்தில் மனதுக்கு மிக நெருக்கமாக இருப்பவர் என் நண்பர் ரா கி. அவரது ‘மழலை’ மொழிக்கு எப்போதுமே நான் அடிமை. இரவுகளில் உறங்காமல் ‘விஷ்ணுபுறம்’ குறித்து பேசியபடி கோவை வீதிகளில் அலைந்தது இன்று கனவு போல இருக்கிறது. [கோவையில் ஏன் இத்தனை பேக்கரி? கோவை வாசிகள் அனைவரும் மூன்று வேளையும் பன்னும் பொறையும் உண்டே உயிர் வளர்கிரார்களா என்ன?] எனக்கு எப்போதுமே பிடித்த …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/66937

முன்விலை- கடிதம்

நான் பகிரப்போவது உங்களுக்குத்தெரிந்ததே. தமிழைக்காட்டிலும் ஆங்கிலப்பதிப்புத் துறையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள மெய்ப்பு நோக்குவது, பிரதிமேம்படுத்துவது, அட்டைவடிவமைப்பது போன்ற வேலைகளுக்கு ஊதியம் உண்டு. ஸ்திரமான பதிப்பகங்களில் entry level editor or rookie editors அவர்கள் பட்டமேற்படிப்பு முடித்து, நேர்முகத்தில் நடத்தப்படும் மொழி ஆளுமை மற்றும் இன்ன பிற தேர்வுகளில் வெற்றி பெற்றால். ஆரம்ப ஊதியம் 25 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்கும். அதிலும் பல்கலைக்கழகங்களின் பதிப்பகங்களில் ஊதியம் (ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி மற்றும் கேம்ப்ரிஜ்) தனியார் பதிப்பகங்களை விட அதிகம். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/66917

இந்திய வேளாண்மையும் உழைப்பும்

india2021

ஜெயமோகன் அவர்களுக்கு, இப்போதிருக்கும் எல்லா மாணவர்களையும் போல் பெற்றோரால் நானும் பொறியியல் கல்லூரியிலேயே சேர்க்கப்பட்டேன். கல்லூரியில் சோம்பித்திரிந்த காலத்தில், ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய ‘உலக சினிமா’ என்னும் புத்தகத்தை எதேச்சையாக படிக்க நேர்ந்தது. சினிமாவின்பால் ஈர்க்கப்பட்டேன். சினிமா சம்மந்தமாக புத்தகங்கள் தேடும் போது எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகங்கள் மூலம் இலக்கிய அறிமுகம் கிடைத்தது. ஒரு முறை என் நண்பன் ஈரோடு புத்தக கண்காட்சியில் இலவசமாக ஒரு புத்தகம் கிடைத்ததாக படித்து பார்க்க சொன்னான். அச்சிறிய புத்தகத்தில் இருந்த கதை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/66852

Older posts «