Category Archive: மொழிபெயர்ப்பு

வாசித்தே தீர வேண்டிய படைப்பு ! – கடிதம்
விஜயராகவன் அவர்களின் இந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும்… வாழ்த்துக்களும்…” போப் ஆண்டவர் செய்ட்லுஸ்” எனும் இந்த கதையினை எழுதிய ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் எனும் எழுத்தாளனைப் பற்றியும், இப்படியொரு நுட்பமான, மிகச் சிறந்த சிறுகதையினையும் எனக்கு அறிமுகப்படுத்திய வகையில், நண்பர் விஜயராகவன், அண்ணன் ஜெயமோகனுக்கு மட்டும் பிறந்த நாள் பரிசாக இக்கதையினை மொழி பெயர்த்து வழங்கவில்லை… என்னைப்போல் பல்வேறு வாசிப்பு விரும்பிகளுக்கு ஒரு அற்புதமான படைப்பை … படைப்பின் கனம் குறையாத எளிமையுடன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87667

போப் ஆண்டவர் செய்ட்லுஸ்- ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்
[1 ]   பழங்காலம் தொட்டு , சாத்தான் ஆன  என்னாலேயே வழக்கமான வழிகளில்  கெடுக்க முடியாத மனிதர்கள் சிலர் எல்லா தலைமுறை காலகட்டங்களிலும் இருந்து வந்துள்ளார்கள். அவர்களை கொலைக்கும் கொள்ளைக்கும் கற்பழிப்புக்கும் தூண்டவே முடியாது, அவர்களின் சட்ட படிப்பை கூட என்னால் நிறுத்த முடியவில்லை என்றால் பார்த்துகொள்ளுங்களேன் ., அவர்களின் நேர்மையான ஆத்மாக்களில் நுழைந்து கெடுக்கஒரே வழி  அவர்களின் தற்பெருமையை உபயோகித்துதான்செய்யமுடியும்.   செய்டேல்  கோஹேன் அப்படிப்பட்ட ஒரு மனிதன்தான்.அவர் மதிப்பான மூதாதையர் வழி வந்தவர்.அதுவே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87441

முள்வில்லில் பனித்துளி அம்புகள்
  அன்புள்ள ஜெ சமீபத்தில் ஒரு மொழியாக்கம் வாசிக்க நேர்ந்தது. சில்வியா பிளாத்தின் ஒரு கவிதை. குறுகலான சில சொற்களால் காட்சிகளையும் உணர்ச்சிகளையும் சொல்வதற்கு முயற்சி கொள்கிற தொடக்கத் தலைமுறை கவிஞர்களில் ஒருவர் அவர். தற்கொலை செய்து கொண்டவர் அவர். அவரது பெரும்பாலான கவிதைகள் பெண் வாழ்க்கையின் கைவிடப் பட்ட தன்மையையும் [கையறு நிலைதானே?] தனிமையையும் காட்டக் கூடியவை. மனச்சிதைவின் சில அம்சங்கள் கொண்டவை. இந்தக் கவிதையில் பாலுக்காக விடிகாலையில் ஒரு பெண் கணப்பருகே காத்திருக்கிறாள் எனபதே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/8609

ஒளியை நிழல் பெயர்த்தல்
  இலக்கியத்தில் எது மிகக் கடினமோ அதுதான் மிக எளிதாகத் தோன்றும் என்று படுகிறது. அதில் ஒன்று கவிதை மொழிபெயர்ப்பு. கவிதைகளை வாசித்ததுமே அதை மொழியாக்கம்செய்யவேண்டுமென்ற உற்சாகம் தோன்றிவிடுகிறது. முதற்காரணம், நல்ல கவிதை மிகமிக எளிமையானது என்பதே. நாம் அனைவரும் அறிந்த எளிமையான சொற்களை சேர்த்து வைத்து அது தன் வெளிப்பாட்டை நிகழ்த்தியிருக்கிறது. அச்சொற்களுக்கான இன்னொரு மொழியின் சொற்களும் நமக்குத்தெரியும். மொழிபெயர்க்கவேண்டியதுதானே? வரிகளும் மிகக்குறைவு. சிறுகதைபோல பக்கக்கணக்கில் இல்லையே. அதைவிடப்பெரிய அபாயம் என்னவென்றால் கவிதையை மொழியாக்கம் செய்யச் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/10922

செவ்விலக்கியங்களும் செந்திலும்
தமிழில் சென்ற சில ஆண்டுகளில் சீரிய இலக்கிய வாசிப்பாளனுக்கு இலக்கியத்தின் அடிப்படை இலக்கணம், நோக்கம் ஆகியவற்றை தெளிவாக்கும் சில பேரிலக்கியங்கள் மொழியாக்கங்களில் கிடைத்தன. தல்ஸ்தோயின் போரும் அமைதியும் டி எஸ் சொக்கலிங்கத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டு முன்னரே வெளிவந்திருந்தாலும் சமீபமாகத்தான் மறு அச்சு வெளிவந்தது. தஸ்தோயின் அன்னா கரீனினா க.சந்தானத்தின் சுருக்கமான மொழியாக்கமே முன்னர் இருந்தது. இப்போது முழுமையாகக்கிடைக்கிறது. அன்னா கரீனினா [நா தர்மராஜன்],  தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் [எம்.ஏ சுசீலா] ,அசடன் [எம். ஏ சுசீலா] ஆகியவை வெளிவந்தன. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/83439

வன லீலை
[விபூதிபூஷன் பந்த்யோபாத்யயா] [மாணிக் பந்யோபாத்யாய] தாராசங்கர் பானர்ஜி இந்திய வரலாறு குறித்து டி.டி. கோசாம்பி அளிக்கும் சித்தரிப்பை படிக்கும்போது மெதுவாக நம் மனதில் ஒரு சித்திரம் உருவாகி வரும். இந்திய வரலாறென்பது வனத்திற்கும் பிற நிலப்பகுதிகளுக்கும் இடையேயான தொடர்ந்த போராட்டம் தான். கோசாம்பி இதை ஒரு கொள்கை போலவே முன்வைக்கிறார். அது செவ்வியல் மார்க்சியத்தின் கொள்கை. சேகரப்பண்பாடுX உற்பத்திப்பண்பாடு, மேய்ச்சல் பண்பாடுX வேளாண் பண்பாடு என மார்க்ஸியம் எப்போதுமே இருமைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. மழைக்காடுகள் நிரம்பிய ஒரு பெரும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/8398

தேவதச்சன் ஆங்கிலத்தில்
  தேவதச்சன் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கமும் மூலமும். பதாகை இணையப்பக்கத்தில் இருந்து. மொழியாக்கம் உருவாக்கும் சிக்கல்களும் விவாதிக்கப்பட்டுள்ளது. அந்த விவாதம் கவிதைகளைப்புரிந்துகொள்ள சிறந்த வாசலாக உள்ளது.   http://padhaakai.com/2015/12/20/devatachan-nambi-lasttime/ http://padhaakai.com/2015/12/20/devatachan-nambi-goatherd/ http://padhaakai.com/2015/12/20/devatachan-nambi-washingcloth/ http://padhaakai.com/2015/12/20/devatachan-nambi-jellyfish/
Permanent link to this article: http://www.jeyamohan.in/82138

இவ்விரவில் மௌனமாக உருகு…
தனித்திருப்பது அத்தனை கடினமா என்ன? மன்னிப்பது அத்தனை பாரமா என்ன? எளிமை அத்தனை சங்கடமானதா? எல்லோருக்கும் என்ற சொல் ஒரு கூரிய வாளா? தெரியவில்லை. நீ அறிந்திருக்கலாம் முதல்முறை மேரியின் மடியில். இன்னொருமுறை மக்தலேனாவின் கண்ணீரில். மீண்டுமொருமுறை சிலுவையில். கடைசியாக, உயிர்த்தெழுகையில் நீ சொன்ன சொற்களில் அவை இல்லை நீ உருவாக்கிய சீடர்களில் அவை இல்லை உன்னை வழிபடும் பாடல்களில் உனக்காக எழும் வாள்முனைகளில் உன் ஆலய கோபுரங்களில் அவை கண்டிப்பாக இல்லை ஆனால் சொல்லின்மையில் மொழியின்மையில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/10966

மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்—ராஜகோபாலன்.
(சந்திரிகா – மலையாள இலக்கிய இதழுக்காக நண்பர் ராஜகோபாலன் எழுதிய கட்டுரை) 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே கலாசாரத்தைக் கொண்டிருந்த தமிழும், மலையாளமும் சகோதர மொழிகளாக மாறியது புவியியல், அரசியல் காரணங்களால். ஆனாலும் தமிழுக்கும், மலையாளத்துக்குமான ஒற்றுமைக் கூறுகள் கலாசாரரீதியில் இன்றும் தொடர்ந்து வருபவை. பழந்தமிழர் மரபின் அனைத்து சிறப்பு தினங்களும் கேரளத்தில்தான் இன்றும் கொண்டாடப்படுகின்றன. பழந்தமிழின் அற்புதமான வேர்சொற்கள் இன்றும் மலையாளத்தின் பயன்பாட்டு மொழியில் காணக்கிடைப்பது , சற்று மொழியைக் கவனிப்பவர்களுக்கும் தெரியும். 400 …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/78364

கோதானம்

1
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு கோதானம் நாவல் படித்து முடித்தவுடன் இம்மின்னஞ்சலை தங்களுக்கு எழுதுகிறேன். இந்த நாவல் காட்டும் இந்திய கிராமத்தின் சித்திரம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. அடுத்தவேளை உணவு பற்றி மட்டுமே சிந்தனை செய்து செய்து வாழ் நாளை கடத்துவது எத்தனை கொடுமையானது. எத்தனை கோடி ஹோரிராம்கள் இம்மண்ணில் இருக்கிறார்கள். இந்த கொடுமையான சூழலிலும் ஹோரி தனக்கென சில கடமைகளை மனதில் நிறுத்தி நெஞ்சில் அபரிமிதமான வலிமையோடு தன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான். குடும்ப வாழ்க்கை அளிக்கும் மனவலிமை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/78208

Older posts «