Category Archive: புகைப்படம்

காந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி?]
அரசாங்க ஆவணங்களில் மகாத்மா என்றும் மற்றவர்களால் மோகன்தாஸ் என்றும் அழைக்கப்படும் காந்தி பிற்பாடுவந்த பல காந்திகளில் காந்தி அல்லாதவர்களை வடிகட்டிவிட்டால் எஞ்சுபவர். வாசிக்கும் பழக்கம் இல்லாதவராதலால் இவர் ஏராளமாக எழுதி சிந்தனையாளராக ஆனார். இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறுவதற்காக முப்பதாண்டுக்காலம் பலவகையிலும் போராடி சம்பந்தமில்லாத வேறு ஒருவகை சுதந்திரத்தைப் பெற்று சம்பந்தமில்லாதவர்களின் கையில் கொடுத்தமையால் இவரை தேசப்பிதா என்றும் அழைக்கிறார்கள். இவர் தேசியவிடுமுறைநாளான அக்டோபர் இரண்டாம் தேதியன்று குஜராத்தில் போர்பந்தர் ஊரில் ஒரு பனியா குடும்பத்தில் 1822ல் பிறக்க …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/4431

வாழ்வின் ஒரு கீற்று

Jaya mohan,writer
முன்பு இருத்தலியல்சிந்தனைகள் வந்து அலையடித்த காலகட்டத்தில் மலையாளச்சிந்தனையாளர் எம். கோவிந்தன் கேட்டாராம் “எல்லாம் சரி, அதற்கெல்லாம் பொன்னானியில் என்ன இடம்?” பொன்னானியில் எந்துகாரியம்? என்னும் அந்தக்கேள்வி புகழ்பெற்ற ஒன்று. கோவிந்தனின் ஒரு புகழ்பெற்ற கவிதை ‘ஒரு பொன்னானிக்காரனின் மனோராஜ்யம் [ஒரு பொன்னானிக்காரனின் பகற்கனவு] அவரை பொன்னானிக்காரனாக மட்டுமே முன்னிறுத்துகிறது. கோவிந்தன் பெரும்பாலும் வாழ்ந்தது சென்னையில் உள்ள ஹாரீஸ்சாலையில் இருந்த அவரது இல்லத்தில். எம்.என்.ராய்க்கு நெருக்கமானவராக இருந்தார். ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியை தென்னகத்தில் செயல்படச்செய்தார். மலையாளத்தில் நவீனத்துவசிந்தனைகள் வேரூன்ற …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/83945

காந்தியின் முகங்கள்
  காந்தியின் அரிய புகைப்படங்களுடன் அப்புகைப்படங்களைப்பற்றி ஒரு கட்டுரை http://www.bbc.com/news/world-asia-india-35259671
Permanent link to this article: http://www.jeyamohan.in/83100

விழா படங்கள்

dev1
விழா புகைப்படங்கள்     https://www.facebook.com/vishnupuram.vattam/   Vishnupuram Award Function 2015 Photos    
Permanent link to this article: http://www.jeyamohan.in/82314

விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…
 ஜெயமோகன் சார், தங்களின் ராஜா ரவி வர்மா பதிப்பை இப்பொழுது தான் படித்தேன். எங்கள் வீட்டில் அதே சரஸ்வதி படம் உள்ளது. மிகவும் அழகாகவும் தெய்வீகமாகவும்    இருப்பதாகவே உணர்கிறேன்.  ஆனால் விவேகனந்தர் அதை பற்றி கூறியது ஞாபகம் வந்தது. தங்களின் பார்வைக்காக பின்வருமாறு. இது  “ஈஸ்ட் அண்ட் வெஸ்ட்” கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. As regards ourselves, we need not, of course, at any rate for the present, go in for collecting …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/2493

குரு நித்யா புகைப்படங்கள்
அன்புமிக்க ஆசிரியருக்கு, தற்செயலாக குரு நித்யாவின் 408 புகைப்படங்கள் அடங்கிய இந்த நெகிழ்ச்சியான தொகுப்பை பார்த்தேன். உங்களுக்கு பகிர வேண்டும் என்று தோன்றியது. அன்பன், அருண் குரு நித்யா புகைப்படங்கள்
Permanent link to this article: http://www.jeyamohan.in/80946

அட்டப்பாடி, திரிச்சூர்,ஆதிரப்பள்ளி, வால்பாறை
மழைப்பயணம் போய் ரொம்பநாளாகிறது. மழைப்பயணமாக உத்தேசிக்கப்பட்ட சதாரா பயணத்தில் மழை இல்லை. நடுவே கிருஷ்ணன் நண்பர்களுடன் பீர்மேடு வரை ஒரு மழைப்பயணம் போய் மீண்டார்.ஆகவே திரிச்சூர் பயணத்தை மழைப்பயணமாக அமைக்கலாம் என்றார் அரங்கா. கோவையிலிருந்து நானும் அரங்கசாமியும் திருப்பூர் கதிரும் அரங்கசாமியின் காரில் 21 ஆம்தேதி அதிகாலை கிளம்பினோம். வழியில் கிருஷ்ணனையும் மணிகண்டனையும் ராஜமாணிக்கத்தையும் ஏற்றிக்கொண்டோம். ஆரம்பமே பிரச்சினை. நான் தங்கியிருந்த விடுதியில் செல்பேசியை மறந்துவைத்துவிட்டேன். அதை ஓலா டாக்ஸியைச் சொல்லியனுப்பி எடுத்துவரவேண்டியிருந்தது. அரங்காவின் காரில் மாற்றுச் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/81069

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12
எரிமலையிலிருந்து இறங்கி மாலை சரிந்துகொண்டிருந்த மலைச்சரிவினூடாக வந்தோம். கிராமப்புறங்களில் ஒருவகையான அமைதியான விவசாய வாழ்க்கை. தோளில் விறகுடன் குனிந்து நடந்த பெண்கள். கூம்புத்தொப்பி வைத்த விவசாயிகள். முகம் முழுக்க சுருக்கங்களுடன் பாட்டிகள். கறைபடிந்த பெரிய பற்களுடன் பெரியம்மாள்கள் கார்களை கூர்ந்து நோக்கினர். எரிமலை மக்கள். அந்த எரிமலையை அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அடித்தாலும் அதுதான் சோறுபோடுகிறது அவர்களுக்கு. [ராஜமாணிக்கானந்தா] இன்றையநாளுடன் யோக்யகர்த்தா பயணம் முடிவுக்கு வருகிறது. செறிவான களைப்பூட்டும் பயணம் .ஆனால் பயணக்களைப்பு போல இனியது வேறில்லை.ஒவ்வொரு பயணமும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/80929

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11
காலையில் தாமதமாக எழுந்தால்போதும் என்று சரவணன் சொல்லியிருந்தார். அன்று முழுக்க யோக்யகர்த்தா நகரைப் பார்வையிடுவதுதான். ஆகவே காலை எழுந்ததும் வெண்முரசு எழுதிவிட்டு குளித்து நிதானமாகக் கிளம்பினேன். முந்தையதினம் காலை மூன்றரைக்குக் கிளம்பி இரவு பத்துக்கு வந்ததுமே அருண்மொழி அதே வேகத்தில் படுத்துக்கொண்டாள். நான் அதன்பின் வெண்முரசு கொஞ்சம் எழுதினேன். இத்தனை அலைச்சலிலும் அது கூடவே வந்துகொண்டிருக்கிறது. முன்னரே எழுதிவைக்கமுடியவில்லை .ஆகவே ஒவ்வொருநாளும் மறுநாளைக்குரியதை எழுதினேன்.ஆச்சரியம் என்னவென்றால் நெருக்கடியில் எழுதினால் சிறப்பாக வரும். யோசிக்க ஆரம்பித்தால் ஒன்றுமே தோன்றாமல் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/80924

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10
முன்பு ஒரு வெள்ளையத் துறவியை திருவண்ணாமலையில் பார்த்தேன். ‘ஏன் இங்கு வந்தீர்கள்?’ என்றேன். ‘இது அணைந்த எரிமலைகளின் நாடு” என்றார். அவர் அணையா எரிமலைகள் கொண்ட ஃபின்லாந்தில் இருந்து வந்திருந்தார். தென்னிந்தியாவின் நிலம் பல லட்சம் வருடங்களுக்கு முன்பு அணைந்த எரிமலைக்குழம்புப் பாறைகளால் ஆனது. நமது கருங்கற்களில் பெரும்பகுதி லாவாதான். நாம் அணைந்த எரிமலைகளை வீடுகளாக்குகிறோம். தெய்வச்சிலைகளாக்குகிறோம். வாழும் எரிமலைகளின் நாடுதான் இந்தோனேசியா. இங்குள்ள பல மலைகள் எரிமலைகள். செங்குத்தான கூம்புவடிவம். மேலே குடைபோல ஒரு வெண்முகில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/80879

Older posts «