Category Archive: பயணம்

தனிமையும் பயணமும்
அன்புள்ள ஜெயமோகன், வீடு துறந்தவர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு மிகுந்த பிரமிப்பும் பொறாமையும் ஏற்படும். எத்தனையோ முறை அவர்களை ஏக்கத்தோடு கடந்து சென்றிருக்கிறேன். இதில் வாழ்க்கைச் சூழ்நிலைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு சாரர் இருந்தாலும் என்னைக் கவர்ந்தவர்கள் தன்னை அறியும் தேடலுக்காக நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளத் துணிந்தவர்களே. உங்களின் “புறப்பாடு” அனுபவங்களைப் படித்தேன். இலக்கற்ற பயணத்தில் கிடைக்கும் சுதந்திரம் ஒரு Planned Tour-ல் கிடைப்பதில்லை. இலக்கை நிர்ணயித்து ஒரு இடத்திற்கு சென்று திரும்பி வர வேண்டும் என எண்ணும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/92026

சிங்கப்பூரில் இரண்டுமாதங்கள்…
உலகமெங்கும் கல்விமுறையில் மொழியின் இடம் மேலும்மேலும் முக்கியத்துவம் அடைந்துகொண்டே செல்லும் காலகட்டம் இது. குறிப்பாக அமெரிக்காவிலிருந்து இந்த அவதானிப்பு நிகழ்த்தப்பட்டு கல்விமுறையின் மையப்போக்காக ஆகியது. மொழியாக வழியாக அறிவதும், மொழியாக மாற்றப்படுவதும்தான் உண்மையில் அறிவென ஆகிறது. ஆகவே நூல்வாசிப்பை மிகப்பெரிய அளவில் இன்றைய கல்விமுறை வலியுறுத்துகிறது. சொல்லப்போனால், வாசிப்புப்பழக்கத்தை உருவாக்கி வழிகாட்டினால் மட்டுமேபோதும், குழந்தைகளே கற்றுக்கொள்ளும் என்பதே இன்றைய சிந்தனை இதில் புனைவுவாசிப்பு மேலும் முக்கியமான பங்கை வகிக்கிறது. அது பொழுதுபோக்கு அல்ல. கற்பனை மூலம் கற்கவும், …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/89036

மீண்டும் நாகர்கோயில்…

IMG_6945[1]
  இன்று, ஜூலை ஆறாம் தேதி மாலை எட்டு மணிக்கு திருவனந்தபுரம் வந்தோம். முந்தையநாள், ஐந்தாம் தேதி இரவு தொடங்கிய பயணம். அபுதாபி விமானநிலையத்தில் ஏழுமணிநேரம் காத்திருப்பு. திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு அரங்கசாமி வந்திருந்தார். நள்ளிரவு 1130 மணிக்கு நாகர்கோயிலை வந்தடைந்தோம் சென்ற மே 19 ஆம் தேதி நான் வீட்டைவிட்டுக் கிளம்பியது. சினிமா வேலைகள். அப்படியே ஸ்பிடி சமவெளி. திரும்ப வந்தது ஒன்பதாம் தேதி. பத்தாம்தேதி லண்டனுக்குக் கிளம்பிவிட்டேன். இருபத்தைந்து நாட்களுக்குப்பின் மீண்டும் நாகர்கோயில். கிட்டத்தட்ட இரண்டுமாதம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88778

ஸ்பிடி சமவெளிப்பயணம்
பெங்களூரிலிருந்து நேற்று காலை 930க்கு விமானத்தில் சண்டிகர் வந்தோம்.  ராக்கெட் ராஜா என்று அழைக்கப்படும் நண்பர் இளையராஜா வரவேற்றார். அவர் ஏற்பாடுசெய்த காரில் சிம்லாவைக்கடந்தோம். ஒரு சிற்றூரில் தங்கியிருக்கிறோம். இம்முறை அன்றன்று பயணக்குறிப்பு எழுதமுடியாது. இனிமேல் இணைய வசதி கிடையாது. ஆகவே வந்தபின் பாக்கலாம் ஜெ    
Permanent link to this article: http://www.jeyamohan.in/88047

ஸ்பிடி சமவெளி
நாளைக்காலை ஒன்பது மணி விமானத்தில் பெங்களூரிலிருந்து சண்டிகர் சென்று அங்கிருந்து காரில் இமாச்சலப்பிரதேசம் சென்று ஸ்பிடி சமவெளிக்கு ஒரு மலைப்பயணம் மேற்கொள்கிறோம். வழக்கமான கூட்டம்தான். ஸ்பிடி சமவெளிக்குச் செல்லலாம் என்று கண்டுபிடித்துச் சொன்னது கிருஷ்ணன். இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள இந்தப்பகுதி திபெத்திய பௌத்த மடாலயங்களுக்குப் புகழ்பெற்றது. இச்சமவெளி கோடைகாலத்தில் மட்டுமே அணுகக்கூடியது. மேமாதம் திறந்திருக்கும் என்பதை உறுதிசெய்துகொண்டு கிளம்பினோம். ஆனால் மழைக்காலம் தொடங்கிவிட்டது. பிரச்சினை ஏதுமிருக்காதென நினைக்கிறேன் ஸ்பிடி சமவெளி மலையுச்சியிலிருக்கும் ஒரு பெருந்தரிசு நிலம். ஸ்பிடி என்றால் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87912

ஒருங்கிணைவின் வளையம்
  [பிரசாத் பரத்வாஜ், காங்கோ மகேஷ், மது] கர்நாடகத்தில் மைசூருக்கு அருகே பெலவாடி என்று ஒரு கோயில் இருக்கிறது. 2015 செப்டெம்பர் 15 ஆம் தேதி நாங்கள் அந்த ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். ஹொய்ச்சாளப்பேரரசால் எழுப்பப்பட்ட ஆலயங்களைப் பார்ப்பதற்கான ஒரு வாரப்பயணம். ஹொய்ச்சாள ஆலயங்களில் முதன்மையானவை பேலூர் , ஹளபீடு இரண்டும்தான். அவை கோயில்களே அல்ல, கல்லில் செதுக்கப்பட்ட நகைகள். சிற்பங்களையே வைத்து கட்டப்பட்டவை அவற்றிலிருந்து பெலவாடி ஆலயம் முற்றிலும் வேறுபட்டது. அங்கே ஆலயத்துக்கு வெளியே சிற்பங்களே இல்லை. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/86346

பயணம் – பெண்கள்- கடிதங்கள்
அன்புள்ள  ஜெ  உங்களின் நாவல்களின் மூலமும் , கட்டுரைகளின்  வாசிப்பின் வாயிலாகவும் தொடர்ந்து உங்களின் அருகாமயிலேயே  இருக்கிறோம் அகவே உங்களை அன்னியமாக உணர முடியவில்லை. எனது  எல்லா கேள்விகளுக்கும்  உங்களின் தளத்தில் , ஏதோ  ஒரு வடிவில்  அது கதையாகவோ அல்லது கட்டுரையாகவோ  , அவ்வளவு ஏன்,  விமர்சனக் கட்டுரையில் கூட  பதில் கிடைத்து விடும்.உங்களின்,  பெண்களுக்கான  இலக்கிய சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருத்தி , அதுவும் எங்களுரிலேயே  நடக்க இருப்பதால்  இரட்டிப்பு ஆர்வம் . …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85794

கடிதங்கள்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம் , நலம் தங்களின் நலம் விழைகிறேன் . ஒருவர் தன்னிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பது என்பது ஓர் தவம் என அறிகிறேன் . அது புத்தியில் ,மனத்தில் நிலைகொண்டுள்ளதாக இருக்கிறது . பல விவகாரங்களில் தங்களின் கருத்தாக சொல்லிவருவதை ஆழ்ந்து படித்து வருகிறேன் . பல சமயம் அது என் கருத்தாகவும் ஆகிவிடுகிறது .அதற்கு ஆதாரம் தாங்கள் கூறியிருப்பது , ஆம் எப்பேற்பட்ட  உண்மை , தான் ஜெயித்தே ஆகவேண்டும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85620

எல்லைகள் மேல் முட்டுவது…
இன்று காலை இணையத்தில் [வழக்கம்போல மிகவும்பிந்தி] வாசித்த இந்தச்செய்தி ஒரு மெல்லிய சிலிர்ப்பை உருவாக்கியது.. அற்புதங்கள் எப்போதாவதுதான் நடக்கின்றன. இது அவற்றில் ஒன்று. அந்த மனைவியின் சிரிப்பைப்பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. சியாச்சின் பனிப்பாளத்தைப் பார்க்கவேண்டும் என்ற அவா இருந்தது. அதற்குஇணையானதும் இரண்டாவதுமான த்ராங் த்ரங் பனிப்பாளத்தை  லடாக் பயணத்தின்போது பார்த்தோம்.21,490 அடி உயரத்தில் உள்ள பென்ஸீ -லா கணவாயின் வழியாக டோடோ என்னும் மலைச்சிகரத்தின் பனி பிதுக்கித்தள்ளப்பட்டு உருவாவது இந்தப்பனிப்பாளம் நாங்கள் போனது கோடைகாலத்தின் உச்சத்தில். கஷ்மீரிலேயே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/84495

குகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்
  எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு. அப்துல் ஷுக்கூர் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். என்னுடைய நூறு நாற்காலிகள் மலையாளத்தில் ஒரு சிறு நாவலாக வெளிவந்துள்ளது. அதற்கு பதிப்புரிமை இல்லை என அறிவித்திருந்தமையால் ஏழு வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது அது. அந்நாவலைப்பற்றி ஒரு விவாதம் நிகழ்த்தவேண்டும் என ஷுக்கூர் அழைத்தார். நான் அமைப்புசார்ந்த இலக்கியக் கூட்டங்களை விரும்பாதவன். கல்லூரிகளின் கூட்டங்களைப்போல வீண்வேலையே வேறில்லை. ஆனால் ஷுக்கூரின் கூட்டம் என்னைக் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/81860

Older posts «