Category Archive: நிகழ்ச்சி

வாசகசாலை நிகழ்ச்சி
அன்புள்ள ஜெமோ, நலமா? வாசகசாலை பற்றிய உங்களது கருத்துக்களை எங்களுக்காக வீடியோ வழியாக பகிர்ந்து கொண்டதில் உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி. அதற்காக வாசகசாலை சார்பாகவும், தனிப்பட்ட முறையில் என் சார்பாகவும் மனமார்ந்த நன்றி..! உங்களது பேச்சின் you tube link இதோ:- https://www.youtube.com/watch?v=trgczXWhLDY&feature=youtu.be வாசகசாலை ஆண்டுவிழா மற்றும் தமிழ் இலக்கிய விருதுகள் நிகழ்விற்கான முழுமையான அழைப்பிதழை இந்த மெயிலுடன் இணைத்துள்ளேன். உங்கள் பேச்சின் you tube link , நிகழ்விற்கான அழைப்பிதழ் ஆகிய இரண்டையும், வாசகசாலை மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய கீழ்க்காணும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/82943

ஆ.மாதவனுக்குப் பாராட்டுக்கூட்டம்
ஜெ நாஞ்சில்நாடனும் பூமணியும் சாகித்ய அக்காதமி விருது பெற்றபோது பாராட்டுக்கூட்டம் நடத்தினோம். ஆ.மாதவனுக்காக பாராட்டுக்கூட்டம் நடத்தும் எண்ணம் உண்டா? செல்வராஜ்   அன்புள்ள செல்வராஜ் பொதுவாக பிறரால் பாராட்டப்படாத சிற்றிதழ்சார் எழுத்தாளர்களுக்கு மட்டும் பாராட்டுக்கூட்டம் நடத்துவது என்பது எங்கள் வழக்கம் ஜோ டி குரூஸுக்கு பாராட்டுவிழா நடத்த விரும்பி கேட்டோம். அது தனக்குக் கூச்சமாக இருக்கிறது என்றும், பாராட்டுக்கூட்டம் என்பது மூத்த எழுத்தாளர்களை மிஞ்சி நிற்பதான தோரணையை அளிக்கும் என்றும் ஜோ சொன்னார். நண்பர் சிறில் அலெக்ஸ் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/82868

குகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்
  எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு. அப்துல் ஷுக்கூர் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். என்னுடைய நூறு நாற்காலிகள் மலையாளத்தில் ஒரு சிறு நாவலாக வெளிவந்துள்ளது. அதற்கு பதிப்புரிமை இல்லை என அறிவித்திருந்தமையால் ஏழு வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது அது. அந்நாவலைப்பற்றி ஒரு விவாதம் நிகழ்த்தவேண்டும் என ஷுக்கூர் அழைத்தார். நான் அமைப்புசார்ந்த இலக்கியக் கூட்டங்களை விரும்பாதவன். கல்லூரிகளின் கூட்டங்களைப்போல வீண்வேலையே வேறில்லை. ஆனால் ஷுக்கூரின் கூட்டம் என்னைக் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/81860

கோவையில் சங்கரர் குறித்து…
[கோவையில் நாளை [3-1-2016] அன்று சங்கரர் பற்றி உரையாற்றுகிறேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடுசெய்திருக்கும் எப்போ வருவாரோ என்னும் உரைநிரையின் மூன்றாவது நிகழ்ச்சி. கிக்கானி பள்ளி அரங்கு. மாலை ஆறுமணி] பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஏன் கோவையை சுற்றியே அமைகின்றன?.கடைசியாக உங்களின் ‘நேர் உரையை’  ‘ஹிந்து தமிழ்’ பதிப்பின் ஆண்டுவிழாவில் நெல்லையில் கேட்டதுதான். அதற்கு பின் இந்தப் பக்கம் வரவேயில்லை. அண்மையில் அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்பதை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/82686

டீக்கடை இலக்கியம்
அப்துல் ஷுக்கூர் என்னும் நண்பர் கேரளத்தில் கண்ணனூர் அருகே பெடையன்னூர் என்னும் கிராமத்தில் ஒரு சிறிய டீக்கடை நடத்துகிறார். சென்ற பத்தாண்டுக்காலமாக தொடர்ச்சியாக மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை தன் டீக்கடையில் இலக்கியக்கூட்டங்களை நடத்திவருகிறார். வரும் டிசம்பர் 13 அன்று என்னுடைய மலையாளநூல்களைப்பற்றி ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். என்னைக்கூப்பிட்டு தன் செயல்பாடுகளைச் சொல்லி பேசவரும்படி அழைத்தார். ‘பயணச்செலவோ தங்குவதற்கு விடுதிகளோ ஏற்பாடு செய்ய முடியாது. சாப்பாடு மட்டும்தான். என் செலவில் நடத்துகிறேன். கொஞ்சம் புத்தகம் விற்கும். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/81744

பாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் வலைப்பக்கத்தில் பாரதி தமிழ்ச்சங்கத்தின் மேல் அவதூறு பொழிந்திருக்கும் அரவிந்தன் கண்ணையன் என்பவரது வசைக்கடிதத்துக்கு பதில் அளிக்கும்பொருட்டு பாரதி தமிழ்ச்சங்கத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ள நான் இந்த மடலை எழுதுகிறேன். தமிழின் இலக்கிய வரலாறு தொடங்கிய நாள்முதலாக இன்றுவரை தமிழ் மொழியும் இந்து மரபும் பிரிக்கவியலாது ஒன்றுடனொன்று பிணைந்தே வளர்ந்திருக்கின்றன. சிவன் உடுக்கையில் ஒருபுற ஒலி சங்கதமாகவும் மறுபுற ஒலி தமிழாகவும் உயிர்த்தெழுந்து வந்தது என்பது பாரத அளவில் இந்து ஆன்மீகத்தை ஒன்றிணைத்து நோக்கும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/78222

பாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள் பதில்
அன்புள்ள ஜெயமோகன் அரவிந்தன் கண்ணையன் என்பவர் பாரதி தமிழ்ச் சங்கம் குறித்து தெரிவித்துள்ள அவதூறை நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கும் அந்த கண்டனத்தில் உடன்பாடு இருக்கும் என்று நம்புகிறேன். அரவிந்தன் கண்ணையன் யார் என்பது குறித்தோ அவரது இந்திய வெறுப்பு மற்றும் இந்து மத வெறுப்பு குறித்தோ நான் இங்கு சொல்லப் போவதில்லை. அரவிந்தன் கண்ணையன் ஒரு கிறிஸ்துவர் என்பதினாலும் இந்தியாவின் மீதும் இந்து மதத்தின் மீதும் கடுமையான காழ்ப்பையும் வெறுப்பையும் உமிழ்பவர் என்பதினாலும் இந்த மடலை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/78169

கோவையில் பேசுகிறேன்

Rasanai Mutram 16th Final
வரும் ஆகஸ்ட் பதினாறாம் தேதி கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் நிகழும் ரசனைமுற்றம் என்னும் அமைப்பின் கூட்டத்தில் பேசுகிறேன் தலைப்பு ‘கைவிடு பசுங்கழை’ – கவிதை ரசனையின் ஈராயிரம் வருடங்கள் இடம் சிந்து சதன் அரங்கம் ஆர் எஸ் புரம், கோவை. நேரம் காலை 1030 தொடர்புக்கு 9865643333 நேரம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/77719

கலிஃபோர்னியா சந்திப்பு நிகழ்ச்சி

JeMo and PAKPermanent link to this article: http://www.jeyamohan.in/76368

ஹூஸ்டன், ஆஸ்டின்

unnamed
டெக்ஸாஸில் என்னுடைய நிகழ்ச்சி விவரம் ஆஸ்டின் நிகழ்ச்சி ஜூலை 15 நேரம் மாலை 7-9 ஆஸ்டின் தமிழ்ச்சங்கம் மெட்ராஸ் பெவிலியன் தொடர்புக்கு anbu.austin.tx@gmail.com ஹூஸ்டன் நிகழ்ச்சி ஜுலை 16 மாலை 7:00 – 9:00 பாரதி கலை மன்ற நிகழ்வு உரை/கலந்துரையாடல் மீனாட்சி திருக்கோயில், பியர்லாந்து. Light dinner will be served தொடர்பு rmuthup@gmail.com அன்புடன், ராஜா
Permanent link to this article: http://www.jeyamohan.in/76637

Older posts «