Category Archive: நாவல்

காடு- கே.ஜே.அசோக் குமார்

111

கதையில் அவன் தோல்வியடைந்தவனாக சித்தரிக்கும்போது உண்மையில் அப்படி அவன் தோல்வியடைய முடியாது என்று தோன்றியது. இளமை எண்ணங்களை வைத்து அவன் முதுமையில் பிடிக்கும் இடத்தை ஒரு நேர்க்கோட்டால் இணைத்து சொல்லிவிட முடியவில்லை. காடு நாவல் பற்றி கே.ஜே.அசோக் குமார் அவரது இணையதளத்தில் எழுதியிருக்கும் கட்டுரை காடுபற்றிய அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: http://www.jeyamohan.in/71104

கசாக்கின் இதிகாசம்- சொற்கள்

O.-V.-Vijayan

ஆசிரியருக்கு, தற்போது யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் ஒ வி விஜயனின் மலையாள நாவலான கஸாக்குளின் இதிகாசம் (காலச் சுவடு பதிப்பகம்) படித்து முடித்தேன். அற்புதமான நாவல், மிக செறிவான மொழிபெயர்ப்பு. இது பல வகைகளில் மார்குவஸ்சின் 100 years of solitude ஐ நினைவு படுத்தியது. அனால் இது அதற்கு 20 ஆண்டுகள் முன்பே எழுதப் பட்டது. எனது ரசனையில் இது 100 ஆண்டு காலத் தனிமையை விட ஒரு படிமேல் நிற்கிறது. இதில் உள்ள ரசனை, …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/70917

விஷ்ணுபுரம் இன்னொரு கடிதம்

அன்பு ஜெயமோகன், விஷ்ணுபுரத்தில் நான் சந்தித்தவர்களை என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், அதனுள் முன்பின்னாகச் சிதறிக்கிடந்த உரையாடல்களில் பலவற்றிலிருந்து மீளவே முடியவில்லை. திரும்ப திரும்பச் சலிப்பை நோக்கியே திரும்பிவிடும் மனதை அவ்வுரையாடல்கள் விதிர்க்கச் செய்து விட்டன. அமைதியாய் இருக்கும் நடுக்கடல் திடீரென பொங்குவதைக் கண்ணுறும் ஒருவனின் கலக்கமும் அதற்கு நேர்ந்தது. ஒரு ஒழுங்கை முன்வைத்து அதை அடையப் போராடும் சராசரி மனம் குறிப்பிட்ட வடிவத்தை ஏங்கியே அலைபாய்கிறது. அப்போதைக்கு இணக்கமான வடிவத்தில் தன்னைப் பொருத்திக் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/70682

விஷ்ணுபுரம் இரு புதியவர்கள்

vishnu-puram-2

அன்புள்ள ஜெ புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் வாங்கினேன். போகும் வழியிலேயே வாசிக்க ஆரம்பித்து இப்போது முதல் காண்டத்தை கடந்துவிட்டேன். சீரியசான புத்தகம், வாசிக்கமுடியாத புத்தகம் என்றெலாம் சொல்லி ரொம்பவே பயமுறுத்தியிருந்தார்கள். ஆனால் தொடங்கியது தெரியவில்லை. அப்படியொரு கனவு சங்கர்ஷணன் காலையில் கண் விழித்து எழுந்து கண்டாகர்ணம் என்ற மணியைப் பார்க்கும் இடத்திலேயே நாவல் கனவுக்குள் போய்விட்டது. கீழெ தெரியும் பிரம்மாண்டமான கோயிலின் காட்சி. தெருக்கள். ரத்தச்சிவப்பான சோனா. இனி கொஞ்சநாள் விஷ்ணுபுரத்திலேயே வாழலாம் என்று தோன்றியது அருண் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/70308

விஷ்ணுபுர வாசிப்பாளனின் முதற்கடிதம்

untitled

அன்பு ஜெயமோகன், 1997ல் அகரம் வெளியிட்ட விஷ்ணுபுரம் நாவல் முதல் பதிப்பை வாசிப்புக்காகத் தந்துதவிய பு.மா.சரவணன் அண்ணாவுக்கு முதலில் என் நன்றி. அப்பதிப்பின் முன்னுரையிலிருந்து துவங்குகிறேன். மூன்று பக்கங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் முன்னுரை உங்களின் பல்லாண்டுகால மனத்திகைப்புகளைத் தெளிவாகச் சொல்கிறது. “வீடு நிரந்தரமாக அந்நியமாயிற்று” எனும் வரியை வாசகர்களான நாங்கள் எளிதில் கடந்துவிடுவோம். ஆனால், அவ்வரியை எழுதும்போதான உங்கள் மனநிலை உன்மத்தமானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. விடாமல் துரத்தும் படிமத்தைக் கவிமனநிலையிலேயே ஒரு எழுத்தாளன் கண்டுகொள்ள …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/70591

குருதியாறு

D

ஜெ, விஷ்ணுபுரம் வாசித்த போது எனக்கு பெரிய மனக்கிளர்ச்சியை அளித்தது அங்கே ஓடிய சோனா என்கிற சிவந்த நிறமான ஆறுதான். அதை விதவிதமாக வர்ணித்திருப்பீர்கள். ரத்த ஆறு, தீயால் ஆன ஆறு என்றெல்லாம். அதன் அருகே உள்ள மரங்களின் இலைகளில் அடிப்பக்கம் சிவந்த நிற ஒளி அலையடிக்கும் என்ற வர்ணனை அதை அப்படியே கனவுமாதிரி கண்ணில் நிறுத்தியிருக்கிறது அந்த நாவலில் எல்லாவற்றுக்கும் ‘அர்த்தம்’ உண்டு. சோனாவும் ஹரிததுங்கா என்ற குன்றும் மட்டும்தான் அர்த்தமே இல்லாதவை. அவை பாட்டுக்கு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/69986

புத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நடைபெற்று கொண்டிருக்கும் சென்னை புத்தக திருவிழாவில்(ஜன. 9-21), கிடைக்கும் முக்கியமான இந்திய நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் பற்றிய விவரங்களை கீழே கொடுத்துள்ளேன். உங்களுடைய வலைதளத்தில் உள்ள பக்கங்களை reference ஆக எடுத்துள்ளேன். http://www.jeyamohan.in/216 http://www.jeyamohan.in/217 http://www.jeyamohan.in/218 கீழே உள்ள பட்டியலை word documentஆகவும் இணைத்துள்ளேன். அன்புடன் முகமது இப்ராகிம் சாகித்ய அகாதமி வெளியிட்டு சாகித்ய அகாதமி ஸ்டாலில் கிடைக்கும் முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள் செம்மீன் [செம்மீன்]. மலையாளம். தகழிசிவசங்கரப்பிள்ளை. தமிழாக்கம் சுந்தர ராமசாமி …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/69634

மாதொருபாகன் எதிர்வினை 3

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு நான் தங்களின் படைப்புகளத் தொடர்ந்து படித்து வருபவர்களில் ஒருவனாயிருந்தும் இதுவரை உங்களுக்கு கடிதங்கள் எதையுமெழுதியதில்லை. ஆனால் மாதொரு பாகன் எதிர்ப்பு தொடர்பாக நீங்கள் முன் வைத்திருக்கும் வாதங்கள் தொடர்பாக என்னுள் இர்ண்டு வினாக்கள் எழுகிறது. புனைவு என்றாலும் கூட ஒருவர் ஒரு ஊரிலுல் உள்ள அனைத்துப் பெண்களும் விபச்சாரிகள் என்று எழுதுவார் ஆனால் அதனை எதிர்த்து யாரும் போராடக் கூடாது வழக்குத் தொடரக் கூடாது மாறாக தாங்கள் விபச்சாரிகள் இல்லை என்பதை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/69221

மாதொருபாகன் எதிர்வினை-2

திரு ஜெ அவர்களுக்கு, யுவ செந்திலின் வக்கீல் நோட்டீஸ் பாணி கடிதத்தை கண்டேன். அதில் உள்ள சில உண்மைக்கு புறம்பான விஷயத்தை மட்டும் தெளிவு படுத்த நினைக்கிறேன். மாதொரு பாகன் நாவலுக்கு பாஜகவும், இந்து இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தது உண்மை ஆனால் புத்தகத்தை எரித்தது பாஜகவோ, இந்து இயக்கங்களின் தலைவர்களோ அல்ல. அந்த கூட்டத்தில் இருந்த யரும் புத்தகத்தை முழுதாக படிக்க வில்லை. ஒரு பக்கம் ஜெராக்ஸ் ஆக எடுக்கப்பட்டு ஸ்கெட்ச்சால் அடிக்கோடிடப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. வாட்ஸ் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/69185

மாதொரு பாகன் – தெருமுனை அரசியல்

அன்புள்ள ஜெ, உங்கள் பெ மு நாவல் பற்றிய பதிவை படித்தேன். சிறு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் உங்களை ஒரு நடுநிலையான எழுத்தாளர் என்று உங்கள் வாசிப்பாளராக இருந்து வருகிறேன், உங்களின் சொற்பொழிவுகளையும் கேட்டுள்ளேன். உங்களுக்கு இதற்கு முன்பு கடிதம் எழுதியது இல்லை, இப்பொழுது எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. திருச்செங்கோடு என்னுடைய ஊராக இல்லாமலிருந்தாலும் அங்கு தங்கி 3 ஆண்டு படித்தவன் என்பதால் இந்த செய்தி என்னை கவர்ந்தது. உங்களின் கருத்துகளான புத்தகங்களை எரித்தல் மற்றும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/69178

Older posts «