Category Archive: தத்துவம்

அறிதல்-அறிதலுக்கு அப்பால்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களுடைய கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களுடைய பணி தமிழில் ஒரு முக்கியமான   இடத்தை வகிக்கிறது. உங்களுடைய ஒரு கருத்துடன்  நான் மாறுபாடுகிறேன். இந்திய மதங்களில் தத்துவமே அதி கடைசி  எல்லையாக அல்லது தத்துவமே அதனுடைய இறுதி லட்சியமாக முன்வைக்கப்படுகிறதாகத் தாங்கள் எழுதுவது (அல்லது   நான் அப்படிப் புரிந்துகொள்கிறேனா என்று தெரியவில்லை) மிகவும் முரணாகத் தெரிகிறது. இந்திய மதங்களின் சாரமே  தத்துவத்தின் எல்லையை எப்படி மீறுவது என்பதே. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/19614

சக்ரவாளம்

1அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் பௌத்த கொள்கை மற்றும் தொன்மங்கள் பற்றி அதிக கனமில்லாமல், எளிய மொழியில் வாரம் ஓர் இடுகை என்ற எண்ணத்தில் புத்த பூர்ணிமா தினத்தன்று தொடங்கினேன். பௌத்த கோட்பாடு, தொன்மவியல் மற்றும் வரலாறு குறித்து எழுதலாம் என்று எண்ணம். இது வரை நான்கு கட்டுரைகளை வலையேற்றியிருக்கிறேன். https://hemgan.wordpress.com/category/buddhism/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/ அன்புடன் கணேஷ்
Permanent link to this article: http://www.jeyamohan.in/75785

மலரிலிருந்து மணத்துக்கு…
அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் அவ்வப்போது பழைய பாடல்களுக்கு அளிக்கும் விளக்கங்களை வாசிக்கிறேன். ஆனால் நம் பக்தி மரபில் பெரும்பாலும் தோத்திரப்பாடல்கள்தானே உள்ளன. முருகா உனக்கு அதைத்தருகிறேன் இதைத்தருகிறேன், எனக்கு நீ இதையெல்லாம் தரமாட்டாயா என்ற மாதிரியான பேரம்பேசல்கள். நீ அப்படிப்பட்டவன் அல்லவா, இன்னாருக்கு மருமகன் அல்லவா, இன்னாருக்கு பிள்ளை அல்லவா, இத்தனைபெண்களுக்கு  கணவன் அல்லவா, என்பதுபோன்ற துதிகள். இவற்றை ஒருவன் மனப்பாடம்செய்து தினமும் சொல்லிக்கொள்ண்டிருப்பதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது? எங்கள் அப்பா முருக பக்தர். சின்ன …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/4003

அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்
நான் நம் பெரும்பான்மை மார்க்ஸியர்கள் மேல் சொல்வது இதே குற்றச் சாட்டைத்தான். அவர்கள் தங்கள் மூடத்தனத்தால் ஒரு பழம் பெரும் பாரம்பரியம் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளால் வேருடன் கெல்லி அழிக்கப்படும் கொடூரமான வரலாற்று அநீதிக்கு துணை நிற்கிறார்கள். அதன் கருவியாகச் செயல்படுகிறார்கள். ஒருநாள் இதற்காகவும் அவர்கள் வருந்துவார்கள். இது நீங்கள் எழுதிய வரி. இதை என்னால் சரியாகப்புரிந்துகொள்ள முடியவில்லை. மார்க்ஸியர்கள் பழபெரும்பாரம்பரியத்தை அழிக்கிறார்கள் என்றால் எந்தப்பாரம்பரியத்தை? அஸீஸ் அன்புள்ள அஸீஸ், இந்துமதம், இந்துசிந்தனை மரபுதான். இந்தச் சொல் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/74909

நமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன?
  அன்புள்ள ஜெ, நான் வளர்ந்தது அருமனை. அங்கே என் உறவினர்களில், கம்யூனிஸ்ட் கட்சியிலும் தொழிற்சங்கங்களிலும் இருப்பவர்கள் ஒரு புறம், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியில் இருப்பவர்கள் மறு புறம் என்கிற சூழலில் தான் நான் வளர்ந்தேன். ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் சிறுவனாகக் கலந்து கொண்டிருக்கிறேன். விளையாட்டும், உடற்பயிற்சியும், தேசபக்தி பாடல்களுமாக கழியும் அந்தி வேளைகள் எனக்கு அப்போது மிகப் பிடித்திருந்தன. பிறகு மெல்ல வாசிக்கும் பழக்கம் ஆரம்பித்த போது இடதுசாரி சிந்தனை உள்ளவர்களே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/16742

மார்க்ஸியம் இன்று தேவையா?
அன்புள்ள ஜெ.எம், மீண்டும் அன்பு. உங்கள் கடிதத்தை வாசித்து முடிக்கவே எனக்கு ஒருநாள் ஆகியது. அதற்குள் அந்த கடிதத்துக்கு மூன்று வடிவங்கள் வந்து சேர்ந்து விட்டன. அதில் பாதி எனக்கு இன்னும் புரியாததாகவே இருக்கிறது. நான் இன்னும் மார்க்ஸியத்தின் மீது ஒரு நம்பிக்கை கொண்டவனாகவே இருக்கிறேன். நீங்கள் மார்க்ஸியத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டீர்கள். மார்க்ஸியத்துக்கு இன்று எந்த பயனுமே இல்லையா? அது வரலாற்றுக்குமேல் நிகழ்ந்த ஒரு வன்முறை மட்டும்தான் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா என்ன? கெ.அன்புராஜ் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/10813

ஞானயோகமும் விவாதமும்
அன்புள்ள ஜெ, ஞான யோகத்தை பின்பற்றுபவர்களுக்கு பிற தரிசனங்கள் உள்ளவர்களுடன் விவாதிப்பது அவசியம் இல்லையா? விவாதிப்பது அறிதலின் ஒரு வழியாக அது சொல்லவில்லையா? அவசரமான கேள்வி. ஒரு வரி பதில் கூட போதும், இப்போதைக்கு. நன்றி, ஹரீஷ் அன்புள்ள ஹரீஷ், ஞானநூல்களை தத்துவத்தை விவாதிப்பது வேறு ஞானத்தை விவாதிப்பது வேறு. ஞானநூல்களை விவாதிக்காமல் கற்கமுடியாது. நூல்களிலிருந்து மேலே சென்று அடையும் ஞானத்தை விவாதிப்பதன் மூலம் நிறுவவோ மறுக்கவோ முடியாது. தத்துவப்பயிற்சியின் ஆரம்பநிலையில் இருக்கும் ஒருவர் ஒரு ஞானநூல்களை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/74235

விசிஷ்டாத்வைதம் ஓர் அறிமுகம்
நகைச்சுவை காசிரங்கா காட்டில் இருந்து விசிஷ்டாத்வைதியான பிரதிவாதி பிரியங்கரம் ஸ்ரீரங்கம் வரதாச்சாரியார் நேராக மதுரா போய் கள்ளக்காதலிசமேத கிருஷ்ணனை சேவித்துவிட்டு டெல்லிக்குச்சென்று தன் மருமான்கள் பாச்சாவையும் கிச்சாவையும் பார்த்துவிட்டு மெதுவாகத்தான் திரும்பி வந்தார். மருமான்களுக்கு டெல்லியின் அதிகாரச் சதுரங்கம் அன்றி வேறெதுவும் தெரியாது. மற்ற எல்லா கிச்சா பாச்சாக்களையும்போலவே ”எங்க அண்டர் செகரடரி ஒரு வேஸ்டு. ஒரு மண்ணும் தெரியாது. ரிசர்வேஷனிலே வந்துட்டான்…”என்ற முதல்வரியுடன் தங்களின் ஆபீஸ் விளையாடல்களை பற்றி ஓயாமல் பேசுவார்கள். அவர்களின் மனைவிமார்களுக்கு பாலிகாபஜாரில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/614

தத்துவத்தைக் கண்காணித்தல்
அன்புள்ள ஜெ…சார், 1980-90 களில் ரஜ்னீஷ் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை படித்துவிட்டு நண்பர்களிடம் விவாதித்துக்கொண்டிருப்போம். ஒரு நெருங்கிய நண்பர் திடீரென்று ஒரு நாள் மொட்டையடித்துக்கொண்டு வெள்ளை ஜிப்பா, வேஷ்டி அணிந்துகொண்டு வந்தார். ‘நான் இன்றுதான் பிறந்திருக்கிறேன். என்னை நான் diseducate செய்து கொண்டேன்.‘ என்றார்.  (அச்சில் வருவதை…பாடப்புத்தகங்கள் உள்பட…உண்மை என்று என்று நம்பிக்கொண்டுருந்த கால கட்டம் அது)      சிறிது நேரம் கழித்து ‘பசிக்கிறது…மசால் வடை சாப்பிடலாமா‘ என்றார். மற்றொரு நண்பர் ‘மசால் வடையை diseducate செய்யவில்லையா‘ என்று கேட்டார். அவ்வளவுதான்..அந்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/2226

அரதி
அன்புள்ள அண்ணணுக்கு, நான் என்னுடைய 7 ஆம் வயதில் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.11 வயதில் ஆரம்பித்தது நீல பத்மநாபன்.20 வயதில் நீங்கள்.இப்போது 32 வயதில் எதை படித்தாலும் அதில் எதுவுமே இல்லாதது போலத்தான் இருக்கிறது.எல்லோருமே ஒரே விஷயத்தை பன்னிப் பன்னி எழுதுவது போல இருக்கிறது. உங்களுடைய எழுத்துக்கள் அதிலும் இந்தியா மற்றும் நகைச்சுவை பற்றி மட்டுமே படிக்க பிடிக்கிறது.தினமும் உங்களை படிக்கிறேன்.இப்போது நான் என்ன செய்வது? அன்புடன் நடராஜன்   அன்புள்ள நடராஜன் எதிராஜ், நீங்கள் உங்கள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/1245

Older posts «