Category Archive: மதம்

யாகூப் மேமன் என்னும் தேசநாயகன்

1ஜெ, ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் இப்படி எழுதியிருந்தார். எனக்கு உண்மையில் இந்தத்தகவல்கள் பெருத்த ஆச்சரியத்தை அளித்தன. நானும் இந்திய ஊடகங்கள் திரும்பத்திரும்பச் சொல்வதுபோல இந்திய நீதிமன்றங்கள் இஸ்லாமியர்களை வேண்டுமென்றே தண்டிப்பதாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன ஆதாரம் என்று இதுவரை கேட்கத்தோன்றவில்லை. வேதனையாக இருந்தது சென்னை ரயில் குண்டுவெடிப்பு போன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக முழுமையாகவே முடங்கிக் கிடக்கின்றன என்று பி. ஏ .கிருஷ்ணன் எழுதியிருந்ததை வாசித்தேன். தீர்ப்பளித்த நீதிபதிகளை தீவிரவாதிகளுக்கு காட்டிக்கொடுக்கும் ஊடகங்கள் இருக்கும் சூழலில் அவர்கள் என்னசெய்யமுடியும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/77891

நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்
அன்புள்ள ஜெ, வணக்கம். உங்களின் வலைத்தளத்தில் “நான் இந்துவா?” என்ற கேள்விக்கான பதிலைப் படித்தேன். உணர்ச்சிவசப்பட வைத்தது. முக்கியமாக “உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?” என்ற வரிகள் ஓங்கி மண்டையில் அடித்தாற் போல இருந்தது உங்களின் பல கட்டுரைகளில் பதில்களில் “தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா” என்று அடிக்கடி கேட்கிறீர்கள். உங்களுடைய இந்தக் கேள்வி என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. தெரிந்து கொள்ளத் தூண்டுகிறது. நாற்பத்திரண்டு வயதில்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/22431

மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்
தமிழகத்தின் மதமாற்ற தடைச் சட்டம் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இக்கருத்தரங்கில் கூறப் பட்ட காரணங்களை நான் வழி மொழிகிறேன். இந்தச் சட்டம், சமூகங்களுக்கு இடையே மனக் கசப்பையும் அவநம்பிக்கையையும் வளர்க்கக் கூடியதாக உள்ளது. நம்முடைய தேசத்தில் மதம் சில தளங்களை தவிர்த்துப் பார்த்தால் தனிப்பட்ட நம்பிக்கை என்ற தளத்தில் இயங்கவில்லை. தனிப்பட்ட நிலைபாடு என்ற தளம் அதற்கு முற்றிலும் இல்லை.இங்கே மதம் என்பது மத அடிப்படையிலான சமூகங்கள் என்றே பொருள் படுகிறது. ஆகவே மத விஷயங்களில் கூட்டாகச் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/601

மதங்கள், நடைமுறை இஸ்லாம்
இஸ்லாம் மற்றும் மதங்கள் பற்றிய ஒரு பொதுப்புரிதலுக்காக ஒத்திசைவு ராமசாமி எழுதும் கட்டுரையின் முதல்பகுதி. சமீபகாலத்த்தில் மிகுந்த மனச்சமநிலையுடன் , உண்மையான வாசிப்புப்பின்புலத்துடன் எழுதப்பட்ட கட்டுரை எனத் தோன்றியது மதங்கள் நடைமுறைகள்
Permanent link to this article: http://www.jeyamohan.in/77714

கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா
அன்புள்ள ஜெயமோகன், நான்  உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன. நான் சமீப காலங்களாக ஒரு விதமான மன உறுத்தலில் இருக்கிறேன். அதை உங்களிடம் கூறி உங்கள் ஆலோசனையை பெறலாம் என நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறினால் அது மிகவும் பயனுடையதாய் இருக்கும் என நம்புகிறேன். நான் படித்து …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/637

மதங்களின் தொகுப்புத்தன்மை
  என் பெயர் கிரிதரன். சென்னையில் சாப்ட்வேர் எஞ்சினீயர் . நான் தங்களுடைய இந்திய ஞானம் படித்தேன். என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு eye opener. நான் தங்களுடைய இணைய தளத்தில் வடகிழக்கு நோக்கி 9,ஒரு மாவீரரின் நினைவில் வாசித்தேன்.தங்களுடைய இந்தக் கட்டுரையில் பத்மசம்பவர் எப்படி திபெத்திய பௌத்தத்தை நிறுவினார் என்று எழுதியிருந்தீர்கள். ’இந்திய ஞானம்’நூலில் இந்து மதம் எப்படிக் காலத்திற்கேற்ப உருமாறித் தன்னைத் தக்க வைத்துக் கொண்டது என்பதை விளக்கி இருந்தீர்கள். இந்து மதம் ஆரம்பம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/16866

3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!
சிலநாட்களுக்கு முன்னர் திருவையாறு  ஐயாறப்பன் ஆலயத்தில் சென்றுகோண்டிருந்தபோது வழிபாட்டுணர்வுடன் சென்றுகோண்டிருந்த மக்களைப் பார்த்துவிட்டு மலையாள இலக்கியத்திறனாய்வாளர் கல்பற்றா நாராயணன் என்னிடம் சொன்னார் ”பக்தியில் மட்டும்தான் ஒரு சிறப்பு உள்ளது, அதில் மூழ்கி மூழ்கிச் செல்வதற்கான இடம் இருக்கிறது” நான் சொன்னேன் ”பக்தி என்பது உண்மையில் ஒற்றைப்படையான ஓர் உணர்வே…பக்தியை இந்திய பக்தி இயக்கங்கள்தான் மூழ்கிச்செல்லவேண்டிய கடலாக மாற்றின. பக்தியை முழு வாழ்க்கையளவுக்கே பெரிதாக்கிக் கொண்டன அவை. பக்தியில் வாழ்க்கையின் எல்லா கூறுகளையும் கொண்டுவந்துசேர்த்துக் கொண்டன. நம்முடைய பக்தியில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/1337

2.மறைந்து கிடப்பது என்ன?
சாந்தோக்ய உபநிடதத்தில் ஆருணியாகிய உத்தாலகன் தன் மகன் ஸ்வேதகேதுவுக்குச் சொல்கிறான், மண்ணில் ஓடும் நதிகளெல்லாம் கடலையே அடைகின்றன. மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களுமெல்லாம் இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன. ஐநூறுவருடத்துக்கு மேல் காலப்பழக்கமுள்ள  ஏதாவது ஒரு மதத்தில், ஒரு தத்துவசிந்தனைமரபில் இதற்கிணையான ஒரு முழுமைநோக்கு பதிவாகியிருக்கின்றதா? உலகசிந்தனைகளை இன்று நாம் இணையம் மூலம் எளிதாக தொட்டுச்செல்லமுடிகிறது. நீங்களே இதற்கான விடையைத்தேடிக்கொள்ளலாம். என் எளிய வாசிப்பில் நான் அபப்டி எதையுமே கண்டதில்லை. மனிதசிந்தனை வெளியில் இந்தியஞானமரபுடன் இணைநோக்கத்தகுதியான சிந்தனைமரபுகள் இரண்டே. தொன்மையான …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/1333

1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!
வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமூகத்துக்கு நாகரீகத்திலும் மேலாதிக்கத்திலும் மேல்நிலை காணப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய சமூகம் இன்றுவரை அதற்கு இருக்கும் உயர்பண்பாட்டையும் வணிகமேலாதிக்கத்தையும் அடைந்தது. அதற்கு முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தை நாம் காண்கிறோம். அதற்கு முன் கிரேக்கர்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இந்தியா பண்பட்டிலும் செல்வத்திலும் ஓங்கியிருந்த ஒரு நாடு என நாம் அறிவோம். உலகமே இந்தியாவை கல்விக்காகவும் வணிகத்துக்காகவும் தேடிவந்த ஒருகாலகட்டம் இருந்தது. இந்தியா என்பது ஒரு பொற்கனவாக உலகமனத்தில் இருந்தது. இந்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/1327

பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு உங்களுக்கு எனது முதல் கடிதம் இது. தவறுகள் இருப்பின் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். நான் கடந்த 20 வருடங்களாக Software  துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமீப காலம் வரை ஆங்கில fiction , non – fiction எழுத்துக்கள் வாசித்து வந்தேன் (Carl  Sagan , Stephen Hawkins , Malcolm Gladwell , Richard Feynman , James  Rollins  ஆகியோர் என் குறைந்த வாசிப்பில், என்னை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/21252

Older posts «