Category Archive: கேள்வி பதில்

புண்படுதல்
ஆசிரியருக்கு, நாம் ஆகும்பே அருவி வழியில் உரையாடியது தான், ஆனால் அது முற்றுப் பெறவில்லை. அங்கே கொண்ட அட்டையாக அது இன்னும் ஓட்டிக்கொண்டே இருக்கிறது , நீங்கள் வீடு திரும்பும் முன் இக்கேள்வி காத்திருக்கும் , ஆம் பாதையோர ஈரத்தில் அட்டைபோல. நாம் உண்மையையோ அல்லது உண்மை என நம்புவதையோ அப்படியே போது வெளியில் சொல்ல முடிவதில்லை, சில சமயம் நன்றாகத் தெரிந்த நண்பர்களிடம் கூட . இதனால் புண்பட்டுவிடுவார்களோ என்ற நிரந்தர அச்சத்துடனேயே ஒரு உரையாடலை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/30073

குடும்பவரலாறு
  குடும்ப வரலாற்றைப் பற்றிப் பல பேரறிஞர்கள் சொல்லி உள்ளார்கள். ஆனால் பெரும்பாலும் அது தாத்தா , கொள்ளுத்தாத்தா பெயர், ஊர் , தொழில் மட்டும் சொல்வதாக உள்ளது. குடும்ப வரலாறு என்பது அவ்வளவு தானா ? ரமேஷ் அன்புள்ள ரமேஷ் மேல்நாடுகளில் குடும்ப பைபிள் என்ற ஒரு ஏட்டைத் தலைமுறை தலைமுறையாக எழுதிச்சேர்க்கும் வழக்கம் உள்ளது.குடும்பத்தின் வம்சவரிசை, முக்கியமான நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பதிவுசெய்வார்கள். இது ஒட்டுமொத்தமாக சமூக வரலாற்றை எழுதவும் இலக்கியப்படைப்புகளுக்கும் மிகப்பெரிய ஆவணத்தொகையாக உள்ளது. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/35350

சண்டிகேஸ்வரர்
  அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா? போன வாரம் கும்பகோணம் சென்றிருந்தோம். அங்கு சுற்றியுள்ள கோயில்களுக்குச் சென்று வந்தோம். சண்டிகேஸ்வரரை வணங்கும்போது வழக்கம்போலக் கைதட்டினோம். அப்பொழுது என் சித்தி கைதட்டக்கூடாது என்றார். ஏன் என்றால் அவர் கோயிலை நிர்வாகம் செய்பவர் என்றார். திடீரென்று இன்று இணையத்தில் தேடிப்பார்த்தபோது நிறையக் கதைகள் கிடைத்தன. எல்லாக் கதைகளும் அவரவர் கற்பனைக்குத் தகுந்தவாறு சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் மையம் ஒன்றுதான். சிவபூஜை செய்து கொண்டிருந்த விசாரசருமருக்கு தந்தை எச்சதத்தன் இடையூறு செய்ய மழுவால் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/20754

டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேசே
  டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேஸே விருது என்றசெய்தி காலையில் வந்தது. உண்மையில் இவ்விருது எதற்காக என்றே புரியவில்லை. அவர் ஒரு பாடகர், அதற்காக என்றால் தமிழில் இன்று மரபிசை பாடுபவர்களில் மிகமிகச்சுமாரான் பாடகர் அவர். அவரது எந்தக்கச்சேரியையும் இரண்டாம்முறை கேட்கமுடியாது. படித்துவைத்ததைப் பாடுவார், அதற்கு பாட்டுவாத்தியார்த்தனம் என்று பெயர். சஞ்சய் சுப்ரமணியம் அமர்ந்து எழுந்த நாற்கலியில் அமரும் தகுதிகூட இல்லாதவர்   ஆனால் விருது அவரது ‘மனிதாபிமானச்’ செயல்பாடுகளுக்காக எனத்தெரிகிறது.என்ன மனிதாபிமானச் செயல்பாடுகள் என்று தேடினால் இந்து ஆங்கில …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/89307

கருத்துரிமையும் இடதுசாரிகளும்
  ஜெயமோகன் அவர்களுக்கு   திரு எஸ்.பி.சொக்கலிங்கம் வழக்கறிஞர் அவர்கள் எஸ்குருமூர்த்திக்கு எழுதியிருக்கும் கடிதம் இது. * திரு. குருமூர்த்தி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ————————————————————————— ஆண்டாள் ஒரு வேசி. பெரியாழ்வாரும் தான் என்று ஒரு புதிய பார்வையில் தோழர் டேனியல் செல்வராஜ் ‘நோன்பு’ என்ற தலைப்பில் சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். விஷமத்தனமான இச்சிறுகதையின் நோக்கம் மரபுவழி வந்த பண்பாட்டு நியதிகளை இழிவுபடுத்துவதாகும். ஆண்டாள், பெரியாழ்வார், பாண்டிய மன்னன் – ஸ்ரீ வல்லப தேவன் ஆகிய மூன்று …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88954

தவிப்பும் ஒளியும்
வணக்கம், நலமாக இருக்க என் வேண்டுதல்கள். அகநானூறு படிக்க முயன்று தோற்று மறுபடியும் முயலும் போது எழும் சந்தேகம். தீர்த்தால் மகிழ்ச்சி. கவிதைக்கு இணைப்பை பார்க்க. . கவிதையை எப்படி அர்த்தம் பண்ணிக்கொள்வது. முதல் 4 வரி விளங்குகின்ற  என் காமத்தை சமூகமென்னும் மேகங்கள் பகலிலே மறைத்துக்கொள்கின்றன. நள் இரவிலே மேகங்களை ஊடறுத்து எழும் மின்னல் போல காமம், எல்லாவற்றையும் பிளந்து பொழிகிறது. அந்த ஆரா காம நோய் வருதத்துகிறது, மேலும் அலைகழிக்கிறது. அல்லது பகற்குறியிலே நீ …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88914

நமது நீதிமன்றத்தீர்ப்புகள்….
அன்பின் ஜெ.. பெருமாள் முருகன் தீர்ப்பில், “நீதி மன்றத்தின் தீர்ப்பில் சற்றே நம்பிக்கை வருகிறது” என்னும் போலி அறப்பாவனையை சொன்னீர்கள். உங்கள் வாக்கியத்தில், நீதி மன்றத்தில் பெரும் அறத்தீர்வுகளே வருகிறது என்னும் பாவனையும் உள்ளது. பெரும்பாலும் முற்போக்கு; விதிவிலக்குகள் அபூர்வம் என. இதை புள்ளியியல் கொண்டு விளக்க முடியாது; தரவுகள் இல்லை. ஆனால், நீங்கள் சொல்லும் விதிவிலக்குகள் சிலவற்றைக் குறிப்பிடத் தான் வேண்டும். இதில் ஆதி முதல்வர், குமாரசாமி. பெரும் கற்பனைத் திறமும், காவியச் சாயலும் கொண்ட …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88848

வரலாற்றில் இருந்து எதைக்கற்றுக்கொண்டோம்?
  ஜெ, நான் உங்கள் இணையத்தள பதிவுகளை படித்து வருகின்றேன். மேலும் நான் உங்களின் ஒரு நாவல் கூட படித்ததில்லை உங்கள் நாவல் மட்டுமின்றி அவ்வளவாகப் புத்தக வாசிப்பு இல்லாதவன் .இணையத்தின் மூலமாகவே பல தகவல்களை தெரிந்து கொள்கின்றேன். ரத்தினச் சுருக்கமாக எனது கேள்வி இது தான் நான் வரலாற்றை படித்து அறிந்துகொள்ளும் போது ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டேன் அது என்னவெனில் நாம் வரலாற்றில் இருந்து எதுவும் கற்றுக்கொள்வதில்லை என்பது தான். இந்த முரண்பாட்டை கொஞ்சம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88725

நீச்சலும் பறத்தலும்
  நீ சரியாய் நீச்சல் கற்றுக் கொடுக்காமல் இருந்திருந்தால் உன் சுழிப்பில் அமிழ்ந்தோ இழுப்புக்கு ஒப்புக் கொடுத்தோ உன்னுடனேயே கழித்திருப்பேன் என் முக்காலங்களையும் * ஜெ, நான் சமீபத்தில் வாசித்த முக்கியமான கவிதை இது. பலவகையிலும் அர்த்தம் அளித்து தேனிபோல ரீங்கரித்துக்கொண்டு மனதைச் சுற்றிவந்துகொண்டே இருக்கிறது சரி எழுதிய கவிஞர் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்   பரிதி செல்வராஜ்   அன்புள்ள செல்வராஜ்   நல்ல கவிதை. சுருக்கமானது. வர்ணனை என ஏதும் இல்லாமலேயே ஒரு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88742

குமுதம் கடிதங்கள்
  அன்புள்ள ஜெ., குமுதம் கட்டுரை. என் விடலைப் பருவத்தைக் குமுதத்தில் இருந்து பிரிக்க முடியாது… இப்போது திரும்பிப் பார்க்கையில், குமுதம் வாசிப்பு என் வாழ்வின் இனிய தருணங்களில் ஒன்றாகவே மனதில் இருக்கிறது.. அதைவிட ஒரு வணிகப் பத்திரிக்கை வேறு என்ன பங்களிப்பை செய்திட  முடியும்… பழைய குமுதம் எல்லாவற்றையும் எள்ளி நகையாடியது – மிக முக்கியமாகத் தன்னையும்… “குமுதம் ஒரு குப்பை” என்று ஒரு பத்திரிக்கை எழுதிய விமர்சனத்தை முழுதும் வெளியிட்டது.. அடுத்த பக்கத்தில் ‘குப்பையில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88749

Older posts «