Category Archive: கவிதை

மொத்தக் குருதியாலும்..
  அன்பு ஜெயமோகன், ‘தெரியும் நண்பரே.. புரிந்துகொள்ளமுடிகிறது.’ என்றுதான் இந்தக் கடிதத்தைத் தொடங்கவேண்டும், கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு தாமதமாக வரும் கடிதமாயினும். உங்களுடைய ‘இந்த இரவு இத்தனை நீளமானதென்று…’ கவிதையை எப்போது வாசித்தாலும் அது என் மனதை ரணப்படுத்திவிட்டே செல்கிறது. ஆனால் அத்தோடு விடுவதில்லை, நான் ஒரு தந்தையாக, கணவனாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று என்னையே சுயபரிசோதனை செய்துகொள்ளத் தூண்டுகிறது. 2003-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது நான் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள சிட்டி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/92153

நீச்சலும் பறத்தலும்
  நீ சரியாய் நீச்சல் கற்றுக் கொடுக்காமல் இருந்திருந்தால் உன் சுழிப்பில் அமிழ்ந்தோ இழுப்புக்கு ஒப்புக் கொடுத்தோ உன்னுடனேயே கழித்திருப்பேன் என் முக்காலங்களையும் * ஜெ, நான் சமீபத்தில் வாசித்த முக்கியமான கவிதை இது. பலவகையிலும் அர்த்தம் அளித்து தேனிபோல ரீங்கரித்துக்கொண்டு மனதைச் சுற்றிவந்துகொண்டே இருக்கிறது சரி எழுதிய கவிஞர் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்   பரிதி செல்வராஜ்   அன்புள்ள செல்வராஜ்   நல்ல கவிதை. சுருக்கமானது. வர்ணனை என ஏதும் இல்லாமலேயே ஒரு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88742

தலைமையாசிரியரின் காதல்கள்
  தலைமையாசிரியரின் காதல்கள் சர்வோத்தமன் சடகோபன்   தலைமையாசிரியர் சுப்பையா பிள்ளை கல்லூரிப்பருவத்தில் நூறு ஏக்கர் நிலமும் இரண்டு வீடுகளும் வீட்டின் ஒரே பெண்ணுமான சுதந்திராவை தீவிரமாக காதலித்தார். ஒரு டஜன் வாழைப்பழங்களை ஒரே மூச்சில் விழுங்கும் சுப்பையா பிள்ளையை சுதந்திராவும் தீவிரமாக நேசித்தார். ஒரு நாள் நள்ளரிவில் தன் கனவில் சுப்பையா பிள்ளை வந்ததை தன் தோழிகளிடம் சொல்லி உடல் சிலிர்த்தார் சுதந்திரா. ஆனால் அந்தப் பெண் ஒரு காலைப் பொழுதில் தலைமையாசிரியரை சந்திக்க விரைந்தோடி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88717

பி.ராமன் கவிதைகள்
  வாசகர்கள் இல்லாத ஒரு கவிஞன் கண்ட கனவு ================================== தங்கள் மொழியை உதறிவிட்டுப்போன என் மக்களை என் கவிதையின் அடித்தளத்தில் சத்தித்தேன். உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று சீறினேன் பொருட்படுத்தாமல் சென்ற கூட்டத்தில்ருந்து ஒருவர் அலட்சியமாகச் சொன்னார். ”நாங்கள் இப்போது சுதந்திரமானவர்கள் எல்லைகள் இல்லாதவர்கள் எங்கள் காலடிபட்டு சுயநிறைவடைந்தது உன் கவிதை” அவர்கள் நடந்து கவிதையைத் தாண்டிச் சென்ற இரைச்சல் கேட்டு விழித்துக் கொண்டேன். மொழியும் குழந்தையும் =============== வீட்டுத்திண்ணையில் புதிய ஒரு சொல்லுடன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/409

பி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்
  மொழி பெயர்ப்பு: ஜெயமோகன், நிர்மால்யா (பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. கனம் இல்லாதவற்றின் எடையெல்லாம் உள்ளவை சுமக்க வேண்டும் என்று ஓர் அறிவிப்பு இவ்வழி சென்றது அத்துடன் பகல் முதல் அந்திவரை நீண்ட இந்த இருப்பில் இல்லாத வேலையின் கனத்தை நான் அறியத் தொடங்கினேன் இல்லாத துயரத்தின் கனம் நீண்டு நிமிர்ந்து நிற்கும் போதுள்ள இந்தக் கூனல். அடிக்களத்திற்கு கட்டிச் செல்லப் படும் கதிர் குலைகள் போன்றது இல்லாத காதலின் கனம் இல்லாத சுதந்தரத்தின் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/42

ஆத்மராகம்
நான் டாக்டர் அய்யப்பபணிக்கரை சந்தித்தது சுந்தர ராமசாமியின் வீட்டில் வைத்து. என்னைக்கண்டதுமே ராமசாமி ’வாங்கோ பணிக்கர் வந்திருக்கார்…மாடியிலே இருக்கார்’ என்றார். நான் அந்த உற்சாகத்தைப்பார்த்து வியந்தபடி உள்ளே சென்றேன் ’மாடியிலே குளிச்சுண்டிருக்கார்.இப்பதான் வந்தார்’ என்றார். அய்யப்ப பணிக்கரும் சுந்தர ராமசாமியும் நெருக்கமான நண்பர்கள். அந்த நட்பு இருவருமே இளைஞர்களாக இருக்கும்போது ஆரம்பித்தது. அன்றெல்லாம் திருவனந்தபுரம் ஸ்ரீகுமாரில் வெள்ளிக்கிழமை புதிய ஆங்கிலப்படம் போடுவார்கள். அதற்கு நகரின் சாராம்சமான அறிவுஜீவிகள் எல்லாம் வந்து கூடுவார்கள். மாலை மூன்று ஐந்துமணிக்கே வெளியே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/29166

கவிதையின் அரசியல்– தேவதேவன்
  எங்களூரில் தினம் ஒரு இடத்தில் ‘தகடு எடுப்பு’ நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ”அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?”என்று கேட்டபடி வேடிக்கைபார்க்கும் கும்பல் பின்னால் போகும். அந்தி கறுத்ததும் வீட்டுக்கு தென்மேற்கு மூலையில் நுனிவாழை இலை விரித்து, பச்சைமட்டைக்கீற்றில் தேங்காயெண்ணை ஊற்றி சுருட்டிய துணித்திரியில் பந்தம் கொளுத்தி, நான்குபக்கமும் நட்டு, நடுவே கல்லில் சாமி ஆவாகனம் பண்ணி நிறுத்தி ,மஞ்சள்பொடிகலந்த அரிசிப்பொரியும் உடைத்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/240

நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?
  நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் என்ன வேறுபாடு? பழைய ஒரு நகைச்சுவை உண்டு. ஓட்டலில் சாப்பிடச்சென்றவர் கேட்கிறார் ‘தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?’ பரிமாறுபவர் பதில் சொல்கிறார், ‘கெட்டிச்சட்னி இருக்கிறது, துவையல் இருக்கிறது’ கேட்பவருக்கு கொஞ்சம் குழப்பம். ‘இரண்டுக்கும் நடுவே என்ன வேறுபாடு?’ பரிமாறுபவர் யதார்த்தமாகப் பதில் சொல்கிறார் ‘இரண்டு நாள் வேறுபாடு’ ஆம், நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு இரண்டாயிரம் வருடம்தான். நவீன இலக்கியத்தின் தலை இந்த நூற்றாண்டில் உள்ளது. வால் மரபிலக்கியத்தில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/8156

முள்வில்லில் பனித்துளி அம்புகள்
  அன்புள்ள ஜெ சமீபத்தில் ஒரு மொழியாக்கம் வாசிக்க நேர்ந்தது. சில்வியா பிளாத்தின் ஒரு கவிதை. குறுகலான சில சொற்களால் காட்சிகளையும் உணர்ச்சிகளையும் சொல்வதற்கு முயற்சி கொள்கிற தொடக்கத் தலைமுறை கவிஞர்களில் ஒருவர் அவர். தற்கொலை செய்து கொண்டவர் அவர். அவரது பெரும்பாலான கவிதைகள் பெண் வாழ்க்கையின் கைவிடப் பட்ட தன்மையையும் [கையறு நிலைதானே?] தனிமையையும் காட்டக் கூடியவை. மனச்சிதைவின் சில அம்சங்கள் கொண்டவை. இந்தக் கவிதையில் பாலுக்காக விடிகாலையில் ஒரு பெண் கணப்பருகே காத்திருக்கிறாள் எனபதே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/8609

தேவதேவன் கவிதைகள் முகப்படங்கள்
  வணக்கம். தேவதேவன் கவிதைகளை Desktop Wallpaper ஆக வடிவமைத்திருக்கிறேன். என் ரசனைப்படி 100 கவிதை வரிகளை தேர்ந்தெடுத்து செய்திருக்கிறேன். முடிந்த வரையில் இணையத்தில் பகிர்ந்துவருகிறேன். பல்கலைக்கழக கணிணிக் கூடத்தில் வைத்து வடிவமைத்துக்கொண்டிருந்த சமயத்தில் பல நண்பர்கள் கவிதை வரிகளை ரசித்தனர். 100 wallpaper முடிந்ததும் ஒரு விதமான நிறைவைத் தந்தது. 100 படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன். https://goo.gl/photos/fvNhKu9aMV4nV8Sg8 நன்றி. ஸ்ரீனிவாச கோபாலன் அன்புள்ள சீனிவாச கோபாலன் அரிய முயற்சி இத்தகைய முயற்சிகள் கவிதையின் சிலவரிகள் மேல் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/85758

Older posts «