Category Archive: கலாச்சாரம்

சண்டிகேஸ்வரர்
  அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா? போன வாரம் கும்பகோணம் சென்றிருந்தோம். அங்கு சுற்றியுள்ள கோயில்களுக்குச் சென்று வந்தோம். சண்டிகேஸ்வரரை வணங்கும்போது வழக்கம்போலக் கைதட்டினோம். அப்பொழுது என் சித்தி கைதட்டக்கூடாது என்றார். ஏன் என்றால் அவர் கோயிலை நிர்வாகம் செய்பவர் என்றார். திடீரென்று இன்று இணையத்தில் தேடிப்பார்த்தபோது நிறையக் கதைகள் கிடைத்தன. எல்லாக் கதைகளும் அவரவர் கற்பனைக்குத் தகுந்தவாறு சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் மையம் ஒன்றுதான். சிவபூஜை செய்து கொண்டிருந்த விசாரசருமருக்கு தந்தை எச்சதத்தன் இடையூறு செய்ய மழுவால் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/20754

சன்னதம்
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்களை வாசித்து, வாசிக்கும் பழக்கத்தை ஒரு நிரந்தர பழக்கமாக்கிக் கொண்ட வாசகர்களில் நானும் ஒருவன். தங்களது உரைகளை youtube ல் பார்த்து வருகிறேன். சன்னதம் வருதல் பற்றி ஒரு கேள்வி. நீங்கள் “நீலி” பற்றி குறிப்பிடுகையில் தங்கள் சிறுவயதில் சன்னதம் எழுந்த ஒரு அக்காவை பற்றி பேசினீர்கள். “அப்பொழுது நான் நீலியை பார்த்தேன்!”  என்று கூறினீர்கள். சன்னதம் வருதல், சாமி ஆடுதல் என்பது உண்மையா? அங்கே உண்மையில் என்ன நடக்கிறது? நான் இருவிதம் பாத்திருக்கிறேன்: …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88735

சரஸ்வதி -ஒரு நதியின் மறைவு – சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு
அன்புள்ள ஜெ. நான் ”சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு” ஆசிரியர் – மிஷல் தனினோ (மொழிபெயர்ப்பு –வை.கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம்) புத்தகத்தை வாசித்தேன். இந்த புத்தகம், இலக்கியம், பாரம்பரியம், நிலவியல், புதைபொருள் ஆய்வுகள், காலநிலை சாஸ்திரம் மற்றும் பல அறிவியல்களின் வண்ணமயமான ஊடுபாவுகளால் நெய்யப்பட்டுள்ளது. இலக்கியம்,தத்துவம்,அறிவியல் போன்ற எந்த துறையில் ஆர்வம் இருப்பவராக இருந்தாலும், அவர்களுக்கு வரலாற்று உணர்வின் அவசியத்தை  நீங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளீர்கள். அதை நான் 2014 ஊட்டி சந்திப்பிலும், கோவையில் நடந்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88322

ஒருங்கிணைவின் வளையம்
  [பிரசாத் பரத்வாஜ், காங்கோ மகேஷ், மது] கர்நாடகத்தில் மைசூருக்கு அருகே பெலவாடி என்று ஒரு கோயில் இருக்கிறது. 2015 செப்டெம்பர் 15 ஆம் தேதி நாங்கள் அந்த ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். ஹொய்ச்சாளப்பேரரசால் எழுப்பப்பட்ட ஆலயங்களைப் பார்ப்பதற்கான ஒரு வாரப்பயணம். ஹொய்ச்சாள ஆலயங்களில் முதன்மையானவை பேலூர் , ஹளபீடு இரண்டும்தான். அவை கோயில்களே அல்ல, கல்லில் செதுக்கப்பட்ட நகைகள். சிற்பங்களையே வைத்து கட்டப்பட்டவை அவற்றிலிருந்து பெலவாடி ஆலயம் முற்றிலும் வேறுபட்டது. அங்கே ஆலயத்துக்கு வெளியே சிற்பங்களே இல்லை. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/86346

வரை கலைப்பாவை – விஜயராகவன்
ஞாயிற்றுக்கிழமை தஞ்சையில் நண்பனின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் அந்த வித்யாசமான தேரை தொட்டியம் என்ற ஊரில் பார்த்தேன்.                    ஆறு ஆள் உயரத்தில் சக்கரமற்ற மூங்கிலால் கட்டப்பட்டு வேண்டுதல் வைத்தோர்கள் சாற்றிய பல் வண்ண புடவைகளால் அலங்கரிக்கப்பட்ட தேர். சக்கரமற்ற தேராதலால் தூக்குவதற்கு இசைவாக மிக பெரும் மூங்கில் வாரைகளை நீள வாட்டத்தில் கட்டி நீட்டியிருந்தார்கள். சுற்றுப்பட்ட கிராம இளைஞர்கள் இந்த எல்லையிலிருந்து இந்த எல்லை வரை தூக்கி வந்து வைத்துவிட வேறு வேறு கிராம …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/86652

பண்பாட்டை ஏன் சுமக்கவேண்டும்?
Aug 24, 2009 @ 0:09   அன்புள்ள  ஜெயமோகன், தென்றல் இதழில் உங்கள் பேட்டியை படித்தேன். அதில் நீங்கள் புலம்பெயர் இந்திய தமிழர்கள் வேற்று நாட்டையே தங்கள் நாடாக கொண்டு வாழ்வதை பற்றி ஒரு கசப்புடனே சொல்லியிருந்தீர்கள். வேறு நாட்டை தங்கள் வாழ்விடமாக கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? அமெரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ வாழ்வு தரம் சற்று மேம்பட்டு இருப்பதனால் தானே அவ்வாறு செய்கின்றனர். நீங்கள் பண்பாட்டு ரீதியாக உள்ள இழப்பை பற்றி பேசுகிறீர்கள். ஆனால் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/3705

காலில் விழுதல்
[ஜேசுதாசை வணங்கும் எஸ் பி பாலசுப்ரமணியம்] ஜெ முன்பொருமுறை ஒரு கட்டுரையில் காலில் விழுவதைப்பற்றி எழுதியிருந்தீர்கள். காலில்விழும் கலாச்சாரத்தை நான் வெறுக்கிறேன். அது ஒரு அடிமைத்தனம் என நான் நினைக்கிறேன். அதைப்பற்றி நீங்கள் எழுதியவரிகள் எனக்கு அருவருப்பை அளித்தன. அதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என நினைத்தேன். ஆகவேதான் இந்தக்கடிதத்தை எழுதினேன் க.பாரதிராஜா   அன்புள்ள பாரதிராஜா, வேறெந்த கலாச்சாரம் உங்களுக்கு உவப்பாக இருக்கிறது? மேலைக்கலாச்சாரமா? அதைப்பின்பற்றுங்கள், தாராளமாக. ஆனால் அந்தக்கலாச்சாரத்திலும் பல நுண்ணிய பழக்கங்கள், ஆன்மீக உள்ளடக்கம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/83444

வட்டார வழக்கு
நகைச்சுவை   வட்டார வழக்கு பலசமயம் கொச்சைப்பேச்சு என்று எண்ணப்படுகிறது. இதுபிழை. ஒரு தனிமனிதன் மொழியை சிதைத்துப்பேசினால் அது கொச்சை, ஒரு பகுதியின் மக்கள் முழுக்க அவ்வாறு பேசுவார்களென்றால் அது வட்டார வழக்கு. வட்டார வழக்கு என்பது ஒருவட்டாரத்து மக்களின் பண்பாட்டு அடையாளமாக அவ்வட்டார வழக்கைப் பேசாத அவ்வட்டாரத்தவர்களால் முன்வைக்கப்படுகிறது.வட்டாரவழக்குக்கு பெரும் பண்பாட்டு முக்கியத்துவம் உண்டு. ஒரு வட்டாரம் பிற வட்டாரங்களும் தன்னைப்போன்றே பிற்பட்டவைதான் என்ற தன்னம்பிக்கையை அடைய அந்தப் பிறபகுதிகளின் வட்டாரவழக்குகள் உதவுகின்றன. ஒருபகுதியின் இயல்பான …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/2208

கெட்டவார்த்தைகள்
  அன்புள்ள ஜெ.  வணக்கம் … பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/2196

விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…
 ஜெயமோகன் சார், தங்களின் ராஜா ரவி வர்மா பதிப்பை இப்பொழுது தான் படித்தேன். எங்கள் வீட்டில் அதே சரஸ்வதி படம் உள்ளது. மிகவும் அழகாகவும் தெய்வீகமாகவும்    இருப்பதாகவே உணர்கிறேன்.  ஆனால் விவேகனந்தர் அதை பற்றி கூறியது ஞாபகம் வந்தது. தங்களின் பார்வைக்காக பின்வருமாறு. இது  “ஈஸ்ட் அண்ட் வெஸ்ட்” கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. As regards ourselves, we need not, of course, at any rate for the present, go in for collecting …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/2493

Older posts «