Category Archive: கட்டுரை

தாயுமாதல்
  மத்தியப்பிரதேசத்திலுள்ள ஜான்சி ரயில் நிலையம் மிகப்பிரமாண்டமானது இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் ரயில் பாதைகள் அங்குதான் சந்தித்துக் கொள்கின்றன. அது ஒரு சிலுவையின் மையம் போல. அந்த ஊர் அந்த ரயில்வே நிலையத்து அளவுக்கு பெரியது அல்ல. அன்று அது பெரும்பாலும் தகரக் கூரையிட்ட சிறிய வீடுகளும், குப்பைக் கூளங்களும் இடிபாடுகளும், மிகப்பழமையான கட்டிடங்களும் கொண்ட புழுதிமூடிய ஊர். அவ்வூருக்கு சற்று அப்பால் பிரம்மாண்டமான ஜான்சி கோட்டை இருந்தது. ஜான்சி ஊரின் சிறப்பு அங்கு ஜான்சி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88911

தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் – மதிப்புரை
  2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதை பெற்ற தெளிவத்தை ஜோசப் எழுதிய குடைநிழல் என்னும் நாவலைப்பற்றி மண்குதிரை எழுதிய மதிப்புரை. தி ஹிந்து நாளிதழில்   தெளிவத்தை பற்றி ஒரு குறிப்பு
Permanent link to this article: http://www.jeyamohan.in/88840

சரியும் மானுடக்கனவு
பொதுவாக, இளைஞர்களும் குடியேற்றப் பின்னணி கொண்டவர்களும் நீடிக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். முதியவர்கள், பெண்கள் பெரும்பாலும் வெளியேற வேண்டும் என்றே வாக்களித்தனர். என் இந்திய நண்பர் சிறில் அலெக்ஸ் பிரிட்டன் வெளியேற வேண்டும் என வாக்களித்தார். என்ன காரணம் என்று கேட்டேன். “இன்று தொழில்நுட்பம், மனிதவளம் இரண்டையும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தே பிரிட்டன் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கட்டாயப்படுத்துகிறது. பிரிந்து சென்றால், இந்தியாவிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுக்கு அது நல்லது” …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88695

எனது கல்லூரி
என்னை என்னவாக ஆக்குவது என்று என் அப்பா முடிவுசெய்யவில்லை. அதற்காக அந்த சுதந்திரத்தை அவர் எனக்குத் தரவும் இல்லை. குலுக்கலில் போட்டார், அவரது நண்பர்கள் நடுவே. கோயில் திண்ணையில் அவர்கள் விவாதித்தார்கள். தங்கப்பன்நாயர் நான் ஒரு மிகச்சிறந்த ஆடிட்டர் ஆகமுடியும் என்று கணித்தார். இன்று தெரிகிறது, தங்கப்பன்நாயர் தன் வாழ்நாள்முழுக்க எடுத்த எந்த லாட்டரியிலும் பணம் விழவில்லை என்று நான் மார்த்தாண்டம் கிறித்தவக் கல்லூரியில் [ இன்று அது நேசமணி நினைவு கிறித்தவக் கல்லூரி] புகுமுக வகுப்பில் நல்ல …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/30269

சிறுகதை, விடுபட்ட பெயர்கள்
  மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களே! தங்களின் ‘சிறுகதையின் வழிகள்: தமிழ் சிறுகதை நூற்றாண்டு’ என்ற கட்டுரையை ஆனந்த விகடன் ‘தடம்’ ஜூன் மாத இதழில் வாசித்தேன். தமிழ்ச் சிறுகதையின் தோற்றத்திலிருந்து அதன் வளர்ச்சி மேலும் அது இன்று சென்றடைந்திருக்கும் இடம் வரை தெளிவாக விளக்கியிருந்தீர்கள். அன்று தொட்டு இன்று வரையுள்ள அத்துணை சிறுகதை ஆசிரியர்களையும் பதிவு செய்திருந்தீர்கள். இருந்தும் எனக்கொரு மன வருத்தம் ஏற்பட்டது. தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிகளான பிரேம்-ரமேஷ் கதைகளை குறிப்பிடாமல் ஒதுக்கியிருந்தீர்கள். ஏன்? …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88420

சிறுகதைகள்: கடிதம்
அன்பின் ஜெ, நலமா?  ஐரோப்பிய பயணத்தில் இருப்பீர்களென்று எண்ணுகிறேன்.சிறப்பாக அமைய வாழ்த்துகள். விகடன் தடம் இதழில் சிறுகதையின் நூற்றாண்டு வரலாற்றினைப் பற்றிய கட்டுரை நல்ல பதிவு. சிறுகதை என்பதன் வீச்சு அதன் குறுகிய எல்லையே.அதற்குள் வாசிப்பவரை இழுத்து மூழ்கடிக்க சொற்களும் வடிவும் முக்கியமானவை.சிறுகதை இன்று தேக்கமடைந்ததாக இருப்பினும் எழுதப்பட்ட மிகச்சிறந்தவை தேடித்தேடி வாசிக்கப்படுகின்றன.தமிழில் அழியாச்சுடர் போன்ற இணையதளங்களில் மௌனி,புதுமைப்பித்தன்,ஆதவன்  தொடங்கி முக்கிய படைப்பாளிகளின் சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன.எனவே சிறுகதைகளின் ஈர்ப்பு ஆரம்ப வாசிப்பில் இளம் வாசகர்களை இழுப்பதில் மிக முக்கியமானது …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88347

சிறுகதையின் வழிகள்
    [ 1 ] ஒரு பண்பாட்டுச்சூழலில் குறிப்பிட்ட இலக்கிய படிவம் ஏன் உருவாகிறது என்ற வினா அவ்வடிவத்தில் எழுதப்படும் அனைத்து படைப்புகளையும் புரிந்து கொள்வதற்கான முதல் திறவுகோலாக அமைய முடியும். உதாரணமாக பெரும்பாலான நாட்டுப்புறப்பாடல்கள் ஏதேனும் தொழிலுடன் இணைந்ததாக உள்ளன. அத்தொழிலின் இயல்புக்கேற்ப அவற்றின் வடிவம் அமைந்துள்ளது. ஆகவே,கணிசமான நாட்டுப்புறப்பாடல்க்ள் ஒன்றிலிருந்து ஒன்று தொற்றி ஏறுவனவாகவும்,எத்தனை நேரம் வேண்டுமென்றாலும் ஒரு குறிப்பிட்ட கருவை நீட்டிக்கொண்டு போகும் தன்மை கொண்டதாகவும் உள்ளன. அவற்றுக்கேற்ப சுழன்று வரும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88141

நல்லதோர் வீணை
  இப்படி இன்னும் பல ஆயிரம் கவிதைகளை எழுதியிருக்கக் கூடிய கவிஞர் குமரகுருபரன், என்னை விட வயதில் இளையவர். என்னை விட வயதில் மூத்த படைப்பாளிகளிடம் எனது வேண்டுகோள் இதுதான். ‘அண்ணாச்சிகளா! நீங்க குடிச்சு கட்டமண்ணாப் போனது போகட்டும். சின்னப் பயலுகக்கிட்ட உங்க வீரக்குடிப்பிரதாபங்களைச் சொல்லிக் கெடுக்காதிய.’   நல்லதோர்வீணைசெய்தே – சுகா கட்டுரை    
Permanent link to this article: http://www.jeyamohan.in/88477

கரைந்த நிழல்கள் வாசிப்பனுபவம்
அன்புடன்  ஆசிரியருக்கு அசோகமித்திரனின்  தண்ணீர்  இப்போது  தான்  படித்து  முடித்தேன். தண்ணீருக்கு  பின்பாகவே கரைந்த  நிழல்கள்  எழுதப்பட்டிருக்க வேண்டும். இன்று அதன்பிறகு  எழுதப்பட்டது. தன்னை  வாசிப்பவர்களை தொடர்ந்து  முன்னுக்கு  இழுக்கும்  படைப்பாளியாக அசோகமித்திரன் எனக்கு  இப்போது  தெரிகிறார். இன்று  சில மாதங்களுக்கு  முன்பாகவே வாசித்திருந்தேன். கரைந்த  நிழல்கள் நான்  வாசித்தவற்றில் முக்கியமான  படைப்பெனக் கொள்கிறேன். அந்நாவலுடனான  என்  வாசிப்பனுபவம். http://sureshezhuthu.blogspot.in/2016/06/blog-post_59.html?m=1 அன்புடன் சுரேஷ் பிரதீப்
Permanent link to this article: http://www.jeyamohan.in/88351

சரஸ்வதி -ஒரு நதியின் மறைவு – சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு
அன்புள்ள ஜெ. நான் ”சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு” ஆசிரியர் – மிஷல் தனினோ (மொழிபெயர்ப்பு –வை.கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம்) புத்தகத்தை வாசித்தேன். இந்த புத்தகம், இலக்கியம், பாரம்பரியம், நிலவியல், புதைபொருள் ஆய்வுகள், காலநிலை சாஸ்திரம் மற்றும் பல அறிவியல்களின் வண்ணமயமான ஊடுபாவுகளால் நெய்யப்பட்டுள்ளது. இலக்கியம்,தத்துவம்,அறிவியல் போன்ற எந்த துறையில் ஆர்வம் இருப்பவராக இருந்தாலும், அவர்களுக்கு வரலாற்று உணர்வின் அவசியத்தை  நீங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளீர்கள். அதை நான் 2014 ஊட்டி சந்திப்பிலும், கோவையில் நடந்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88322

Older posts «